GIRIDHARAN

The happiness of your life depends on the quality of your thoughts.

CULTURE

 

பிறந்த குழந்தைக்கு முதல் மொட்டை போடுவதற்கான உண்மையான காரணம் தெரியுமா?

பிறந்த குழந்தைக்கு முதல் மொட்டை போடுவதற்கான உண்மையான காரணம் தெரியுமா?
நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்கவழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஓர் உண்மை மறைந்திருக்கும்.
முறையாக சொன்னால் யாரும் பின்பற்றமாட்டார்கள் என்று நம் முன்னோர்கள் செய்த வேலை தான் இது. அதில் குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது என்பது ஒன்று.
பலரும் இது ஓர் குடும்ப வழக்கம், நேர்த்திக்கடன் என்று நினைத்து பின்பற்றி வருகிறார்கள். ஆனால் இதற்கு பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்னவென்று யாருக்காவது தெரியுமா?
தெரியாதெனில், உங்களது எண்ணத்தை மாற்றி, இனிமேலாவது உண்மையான காரணத்தைத் தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள்.
கருவறையில் 10 மாதம்
பிறக்கும் முன் தாயின் கருவறையில் இருக்கிறோம். இந்த கருவறையில் என்ன சந்தனமும், பன்னீருமா நம்மைச் சுற்றி இருக்கும். இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் நாம் இருப்போம்.
கடல் நீர்
சாதாரணமாக கடல் நீரில் கை விரல்களை 5 நிமிடம் ஊற வைத்து, பின் அவற்றை நன்கு துடைத்துவிட்டு வாயில் வைத்தால் எப்படி உப்பு அப்படியே இருக்கிறது. 5 நிமிடம் ஊற வைத்த கை விரல்களிலேயே உப்பு இருக்கையில், 10 மாதம் இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் இருந்த நம் உடலில் அவை எவ்வளவு ஊறியிருக்கும்.
வெளியேறும் வழி
உடலினுள் சேரும் இந்த கழிவுகள் நம்மை விட்டு எளிதில் வெளியே வந்துவிட்டாலும், நம் தலையில் சேரும் கழிவுகள் மயிர் கால்கள் வழியாகத் தான் வெளியேற முடியும். ஆனால் அதற்கான வழிகள் குறைவு. அதற்காகத் தான் குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள் மொட்டைப் போடுகின்றனர்.
மொட்டை போடாவிட்டால்?
ஒருவேளை அப்படி மொட்டை போடாவிட்டால், அக்கழிவுகள் தலையில் அப்படியே தங்கி, பிற்காலத்தில் அதுவே பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
நேர்த்திக்கடன்
இப்படி உண்மைக் காரணத்தைச் சொன்னால், பலரும் அலட்சியப்படுத்தி பின்பற்றமாட்டார்கள். எனவே தான் நேர்த்திக்கடன் என்ற பெயரில் நம் முன்னோர்களால் அது பரப்பப்பட்டது.
மூன்று வயதில் ஓர் மொட்டை
சிலர் தங்கள் குழந்தைக்கு மூன்று வயதில் ஒரு மொட்டையைப் போடுவார்கள். இதற்கு காரணம், முதல் மொட்டையின் போது சில கிருமிகள் விடுபட்டிருந்தால், இரண்டாவது மொட்டையின் போது வெளியேறிவிடும் என்பதற்காகத் தான்.
ஆன்மீக ரீதிக்கே மரியாதை
நம் மக்களிடையே அறிவியல் ரீதியாக சொல்வதை விட, ஆன்மீக ரீதியாக சொன்னால், கட்டாயம் செய்வார்கள் என்பதை நம் முன்னோர்கள் நன்கு அறிந்துள்ளனர். எப்படியோ, இப்போதாவது உண்மையான காரணத்தை தெரிந்து கொண்டோமே. அதுவே போதும்.
இனிமேலாவது ஒரு செயலைப் பின்பற்றும் முன் அதற்கான உண்மையான காரணத்தை தெரிந்து கொள்ள முயற்சித்து, அந்த காரணத்தை மற்றவர்களுக்கும் சொல்லி பின்பற்ற வையுங்கள்.

எளிய கடன் நிவர்த்தி முறை :-

எளிய கடன் நிவர்த்தி முறை :-
கடன் பெற்றான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பதை போல கடன்என்பது கொடிய விஷமே தவிர வேறில்லை. இதில் எல்லோரும் அவதிப்பட்டு கொண்டுதான் இருக்கின்றார்கள். நாம் கண்ட பலருக்கு கொடுத்து பயன் பெற்ற கடன் நிவர்த்திமுறைகளை கீழே கொடுத்துள்ளேன். பயன்படுத்தி பலன் பெறுவீர்களேயானால்மகிழ்ச்சியுருவேன்.
(1) புளிய மரத்தின் சிறு கிளையை வீட்டில் பணம் வைக்கும் இடத்தில், வியாபாரஇடத்தில், பண பெட்டியில் வைத்து வரவும்.
(2) வெல்லத்தால் பாயசம் செய்து தொடர்ந்து 5 நாட்களுக்கு உங்களின் கையால்பசுவிற்கு வழங்கி வரவும்.
(3) தொடர்ந்து 5 நாட்களுக்கு பசியால் வாடும் ஒருவருக்கேனும் உணவு உங்கள் கையால்வாங்கி கொடுக்கவும்.
(4) வியாழக்கிழமை அன்று கொஞ்சம் குங்குமம் வாங்கி அதை வெள்ளிக்கிழமைகளில்அம்பாள் அல்லது தாயார் சன்னதியில் கொடுத்து வரவும். தொடர்ந்து 11 வாரங்கள் செய்யவேண்டும்.
(5) கோதுமையை அரைக்க கொடுக்கும் பொழுது அதில் 7 துளசி இலைகள் மற்றும் சிறிதுகுங்குமப்பூ சேர்த்து அரைக்க கொடுத்து வாங்கவும். அந்த மாவு வீட்டில் உள்ளவரை பணபிரச்சனைகள் குறைந்து இருப்பதை அனுபவத்தில் காணலாம். (கோதுமையாக வாங்கிசெய்யவும்)
(6) தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமைகள் மஹாலக்ஷ்மி சன்னதியில் மல்லிகை மாலைசாற்றி வழிபடவும்.

பிரம்மஹத்தி தோஷம் என்ன செய்யும்?

பிரம்மஹத்தி தோஷத்தின் முழுப்பரிமாணம்
பிரம்மஹத்தி தோஷம் எதனால் ஏற்படுகிறது?
1.பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறேன் என வாக்குகொடுத்து செய்யாமல் இருத்தல்
2.பலரின் உழைப்பை உறிஞ்சி,அதற்குரிய சம்பளம் தராமல் இருப்பது
3.குருவுக்கு தட்சிணை தராமல் இருப்பது
4.குருவின் கொள்கைபிடிக்காமல் தானே குருவாக மாறுவது
5.வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பைக் கொன்றுவிடுவது
6.உங்கள் மீது தனக்கிருக்கும் ஆசையை வெளிப்படுத்தியும்,அந்த ஆசையை நிறைவேற்றாமலிருப்பது(ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும்)
பிரம்மஹத்தி தோஷம் என்ன செய்யும்?
1.வருடக்கணக்கில் மனக்குழப்பம் இருக்கும்
2.தவறே செய்யாமல் தண்டனை கிடைக்கும்
3.மருத்துவத்திற்குக்கட்டுப்படாத நோய் வரும்
4.தொழிலில் திடீர் சரிவு அல்லது வீழ்ச்சி ஏற்படும்
5.திருமணம் தள்ளிப்போகும் அல்லது நடக்காது
6.குழந்தைப்பாக்கியம் இல்லாமல் அல்லது தாமதம்

அழுக்கு கயிற்றில் தாலி அணிந்திருந்தால் வறுமை அதிகமாகும்

பெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டாலோ, மாங்கல்யம் பழுதாகி புது மாங்கல்யம் அணிந்தாலோ, திங்கள், செவ்வாய், வியாழக்கிழமை மாற்றலாம். இதை காலை சாப்பிடும் முன்பே, ஏதேனும் கோயிலுக்குச் சென்று, நடைபாதையில் அமராமல், ஒரு ஓரமாக கிழக்கு நோக்கி அமர்ந்து மாற்றுவது மிகவும் நல்லது. மாங்கல்ய கயிற்றில் ஊக்கு, சாவி தொங்க விடக்கூடாது. மாலைநேரத்திலும், ராகு, எமகண்ட காலத்திலும் மாற்றக்கூடாது. இவ்வாறு செய்வதால், கணவரும், தாலி மாற்றும் பெண்ணும் தீர்க்காயுளுடன் இருப்பர் என்பது ஐதீகம். அழுக்கு கயிற்றில் தாலி அணிந்திருந்தால் வறுமை அதிகமாகும். எனவே, உங்கள் தாலிக்கயிறை அவ்வப்போது மாற்றிக் கொள்ளுங்கள்

செல்வ வளம் பெருக நாம் பின்பற்றவேண்டியவை

செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது;அப்படி வீசினால்,பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்.

செல்வச் செழிப்போடு வாழ,நமது வீட்டில் நமது ஆடைகள்,துணிகள் சிதறிக்கிடக்கக் கூடாது.நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி பெட்டியிலும்,புதிய ஆடைகளை இன்னொரு பெட்டியிலும் போட்டு வைப்பது அவசியம்.

நமது வீட்டிற்குள் நுழைந்ததும்,எப்போதும் நறுமணம் வீச வேண்டும்.அப்படி இருந்தால்,செல்வம் சேரத்துவங்கும்.எங்கோ போக வேண்டிய பணம்,நமது வீட்டை நோக்கி வரும்.அதே சமயம் அனாவசியமான செலவுகளும் குறையும்.

ஒருபோதும் நாம் வாழும் வீட்டில் இல்லை;மாட்டேன்; இதுமாதிரியான  அவச்சொல்லை எப்போதுமே பேசக்கூடாது.குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் மாலை 5மணி முதல் 7 மணி வரை இம்மாதிரியான வார்த்தைகளைப் பேசுவது முற்றிலும் தவறு.

பிரதி வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்குள் நமது வீட்டை பெருக்கி,சுத்தம் செய்து,அலசிவிட்டுவிட வேண்டும்.அலசியபின்னர், நமது வீட்டுப்பூஜையறையில் நெய்யில் தாமரை நூலில் தீபம் ஏற்றிட வேண்டும்.அதன் பிறகு,100 கிராம் உப்பு வாங்கி வருவது செல்வ வளத்தை நமது வீட்டிற்கு விரைவாகக் கொண்டு வரும்.

ஒருபோதும் இருட்டியபின்னர்,தயிர் சேர்த்த உணவுகளை சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிட்டால்,எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும்,அவன் வறுமைக்குள் விழுந்துவிடுவான்.

குளிக்கும்போதும், தூங்கும் போதும் நிர்வாணமாக இருக்கக் கூடாது;அப்படி நிர்வாணமாக இருந்தாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும்.ஆணோ,பெண்ணோ சுய இன்பம் செய்யாமலிருப்பதும் அவசியம்.அடிக்கடி சுய இன்பம் செய்பவர்களின் வீடுகளிலிருந்து செல்வச் செழிப்பு தரும் கடவுளாகிய மகாலட்சுமி,புவனேஸ்வரி வெளியேறிவிட்டு,அவளின் மூத்த சகோதரியான மூதேவி வந்துவிடுவாள்.

எக்காரணம் கொண்டும் தம்பதியர் இரவில் வெட்டவெளியில் உடலுறவு கொள்ளக் கூடாது.அப்படி செய்தால்,யாராவது ஒருவரை சூட்சும சக்திகள் பிடிக்கும்.அதன் விளைவாக இருவரில் யாராவது ஒருவர் அளவற்ற காம வெறியை அடைந்துவிடுவர்.குடும்பங்கள் நாசமடைவதற்கான முதல் காரணம் இதுதான்.

ஒரு போதும் வீட்டில் பெண்கள் அழக்கூடாது.அவர்கள் அழுதால்,வீட்டில் செல்வ வளம் தங்காது.

கரடு முரடான ராக் இசை முதலான மேற்கத்திய இசையை வீட்டில் அதிகமான அலறலுடன் ஒலிக்க வைப்பதாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும்.மெல்லிய இசை(சினிமா பாட்டாக இருந்தாலும் சரி;கர்னாட இசையாக இருந்தாலும் சரி;மனோதத்துவ இசையாக இருந்தாலும் சரி)யை அடிக்கடி ஒலிக்கச் செய்வதன் மூலமாக செல்வ வளம் நம்மைத் தேடி வரும்.

மூன்று நாட்களுக்கு மேல் வீட்டில் குப்பையை சேர்த்து வைத்தாலும் பண வரவு குறைந்துவிடும்.ஒரு ஆடையை இரண்டு தடவைக்கு மேல் அல்லது இரண்டு நாளுக்கு மேல் அடிக்கடி அணிந்தாலும் பண வரவு குறைந்துவிடும் என்பது அனுபவ உண்மை!

தினமும் வீட்டில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வைத்து,பின் வருமாறு வழிபாடு செய்து வருவதால் நமது நீண்டகால கடன்கள் தீர்ந்துவிடும்;வராக்கடன் வசூலாகும்.பணம் மிச்சமாகும்.அதே சமயம்,அசைவம் சாப்பிடுவதை அடியோடு கைவிட வேண்டும்.

தினமும் காலையில் காலைக் கடன்களை முடித்துவிட்டு,ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தின் முன்பாக அவரது மூலமந்திரத்தை 33 தடவை ஜபிக்க வேண்டும்.அப்படி ஜபிக்கும்போது சந்தன பத்தியை அவர் முன்பாக கொளுத்தியிருக்க வேண்டும். பசு நெய்யில் தாமரை நூல் திரியில் தீபம் எரிந்து கொண்டிருக்க வேண்டும்.இவ்வாறு ஒரு மண்டலம் செய்தால்,பண ரீதியான சிக்கல்கள் தீரத்துவங்கும்.ஓராண்டு வரை வழிபட்டு வந்தால்,நமது வருமானம் நான்கு மடங்கு அதிகரிக்கும்;பண வரவும் நான்கு முதல் எட்டு மடங்கு அதிகரிக்கும்;ஓராண்டுக்கு மேலாக

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால்,ஒவ்வொரு ஆண்டும் நமது வருமானம் ,நான்கு மடங்கு முதல் எட்டு மடங்கு வரை அதிகரித்துக்கொண்டே செல்லும்.ஐந்தாண்டுக்கும் மேலாக ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால், ஆறாம் ஆண்டிலிருந்து தங்கம் நம்மிடம் சேரத் துவங்கும்.

விளக்கேற்றவேண்டிய நேரம்:

விடியற்காலையில் சூரியன் உதயமாவதற்குச் சற்று முன்னதாக `பிரம்ம முகூர்த்தம்’ என்கின்ற இரவின் விடியலாகத் திகழும் அருணம், என்கின்ற அருணோதய காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாவித யோகத்தையும் பெறலாம்.

அதேபோல் மாலையில் சூரியன் மறைவதற்குச் சற்று முன்னதாக, பிரதோஷ காலம் என்கிற உன்னதமான காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால்,  குடும்பத்தில் செல்வம் பெருகும். சந்தோஷம் நிலவும், வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். மனதுக்கு ஏற்ற வரன் அமையும். மற்றும் எல்லாவிதமான யோக பாக்கியங்களும் பெறலாம்.

பொதுவான விதிமுறைகள்

  1. விளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும்.
  2. பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.
  3. விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அப்படி முறையாக ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை அகற்றுவதோடு, வீட்டில் உள்ளோர் அனைவரின் மன இருளையும் அகற்றி, தெளிவான சிந்தனையைத் தூண்டி, சிறந்த முறையில் செயாலாற்ற வைத்து, நிலையான அமைதியைத் தரும்.
  4. இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.
  5. ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.
  6. தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதக்கூடாது. கல்கண்டை கொண்டு தீபத்தை அமர்த்தவேண்டும்.
  7. தீபம் வெறும் விளக்கு அல்ல, நம் வாழ்வின் கலங்கரை விளக்கு. மங்களம் தங்கவும் இன்பம் பெருகவும் தீபம் ஏற்றுவோம். தீபமேற்றி என்றும் இறைவெளிச்சத்தில் இன்பம் காண்போம்.

எந்தெந்த எண்ணைகளில் விளக்கேற்றினால் என்னென்ன பலன்கள்?

நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவித சந்தோஷமும் இல்லத்தில் நிறைந்திருக்கும்.

நல்லெண்ணை எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட, குடும்பத்தை ஆட்டிப் படைக்கும் எல்லாப் பீடைகளும் தொலைந்து போகும். விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்தியாகும்

வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.

நெய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி அம்மனை வணங்கினால் தேவியின் அருள் கிட்டும்.

கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.

கணவன்-மனைவி உறவு நலம்  பெறவும் வேப்ப எண்ணெய் தீபம் உகந்தது.

எள் எண்ணெய் (நல்லெண்ணை) தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது. நவக்கிரகங்களை திருப்தி செய்யவும் ஏற்றது.

திசைகள்

கிழக்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் ஒழியும். வீட்டில் உள்ள பீடைகள் அகலும்.

மேற்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை, சனிபீடை, கிரகதோஷம் பங்களிப்பதை இவை நீங்கும்.

வடக்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வமும், மங்கலமும் பெருகும்.

தெற்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றக்கூடாது.

என்னென்ன திரிகள் பயன்படுத்தலாம்?

பஞ்சுத்திரி: பொதுவாக பருத்தியினால் திரித்து எடுக்கப்படுகின்ற திரி விளக்குகளுக்கு தீபத்திரியாக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையானோர் பருத்திப் பஞ்சினைத்தான் திரியாக பயன்படுத்துகின்றனர். இது தெய்வ குற்றம், பிதுர்களால் ஏற்பட்ட சாபம், வம்சாவழிப் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்திக்கொடுக்கக்கூடியது. எனவே இந்த திரியால் விளக்கேற்றுவது மிகுந்தபயன்தரும். நல்லபலன்களை பஞ்சுத்திரி ஏற்படுத்தும்.

வெள்ளைத்துணி திரி:  வெள்ளைத் துணியாக எடுத்து, அதைத் திரியாகத் திரித்து பயன்படுத்துவதால் பலவித உத்தமமான பலன்களை பெற முடியும். அதிலும் வெள்ளைத் துணியை பன்னீரில் நனைய வைத்து, பின் அதைக் காய வைத்து திரியாக திரித்து வைத்துக் கொண்டு பயன்படுத்துவது மேலும் பலன் தரக்கூடியதாகும்.

சிவப்பு வர்ணத் துணி திரி: சிவப்பு துணியிலிருந்து திரிக்கப்பட்ட திரியானது விளக்கெரிக்க தீப தரிசன வழிபாடு செய்ய பயன்படுத்தப்பட்டால் திருமண தடை நீங்கும் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பிறக்கும் பேறு உண்டாகும்.

மஞ்சள் துணியாலான திரி : இத்துணியாலான திரிக்கு தனி மகத்துவம் உண்டு. எதிலும் வெற்றி பெற விரும்பும் அன்பர்கள் பயன்படுத்த வேண்டிய திரி இது. தேவியின் பூரண அருள் நமக்கு கிடைக்க இந்த திரி பயன்படுத்தப்படுகின்றது. மனிதனுக்கு ஏற்படும் வியாதிகள் தீரவும், செய்வினைகள் நீங்கவும், காற்று சேட்டைகள் நீங்கி நலம் பெறவும், எதிரி பயம் நீங்கவும். தம்பதிகள் ஒற்றுமை ஓங்கவும் இது மிகவும் பயன்படும் திரி எனலாம்.

செல்வவளம் பெருகி நிலைக்க

இன்றைய வாழ்க்கை சூழலில் செல்வத்தினை சேர்க்க போராடும் மனிதர்களே நாம் அனைவரும், செல்வத்தினை தேடி ஓடாத மனிதர்களே இந்த உலகத்தில் இல்லை, திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்பது முதுமொழி. நாமும் செல்வத்தினை சேர்க்க அரும்பாடு படுகிறோம், செல்வத்தினை சம்பாதிப்பதும், அதனை நம்மிடம் நிலைக்க வைப்பதும் வாழ்வில் ஒரு மிகப்பெரிய சவாலாகவே விளங்குகிறது. அந்த நிலையினை மாற்றவே சில எளிய தாந்த்ரீக முறைகளை இங்கே தெளிவுபடுத்துகிறேன்.

  1. இலவங்கப்பட்டையை பொடி செய்து சிறிது எடுத்து ஒரு பச்சை நிற துணியில் மடித்து பச்சை நூலால் கட்டி மணிபர்சிலோ அல்லது சட்டைப்பையிலோ எப்பொழுதும் வைத்துக்கொள்ளவும்.
  2. பசுமையான வெற்றிலை ஒன்றை எந்த நல்ல காரியங்கள், பணசம்பந்தமான காரியங்கள் போன்றவற்றிக்கு செல்லும் போதும் உடன் வைத்துக்கொள்ளவும்.
  3. நிலக்கரி தனாகர்ஷண ஷக்தி உடையது அதனை ஒரு சிறு துண்டு எப்போதும் உடன் வைத்துக்கொள்ளவும்.
  4. ரூபாய்த்தாளை எப்பொழுதும் சுருளாக கட்டியே பணப்பெட்டியில் வைத்துக்கொள்ள வேண்டும். ( சுழற்சி சக்தி உண்டாகி செல்வமானது பெருகி தங்கும் ).
  5. தினமும் ஏதேனும் ஒரு நாணயத்தை இரண்டு கைகளிலும் பிடித்தபடி உங்கள் தேவையினை மனமார வேண்டி – அந்த காசுகளை சேமித்து வந்து மாதக்கடைசியில் சேமித்த பணத்தில் வாழைப்பழம் வாங்கி பாசுமாட்டிற்கு தானமாக வழங்கவும்.
  6. எந்த விசயத்திற்காக பணத்தினை செலவிட்டாலும், செலவிடும் பணத்தினை கையில் வைத்து நெஞ்சிற்கு நேராக பிடித்து பிறர் அறியாதவாறு “ஓம் ஸ்ரீம் நமஹ இலட்சமாக திரும்பிவா வசி வசி” என்று ஐந்து முறை கூறி செலவிடவும்.
  7. முக்கியமான காரியங்கள், பணசம்பந்தமான விஷயங்களுக்கு செல்லும்போது எலுமிச்சம் பழம் ஒன்றை “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சக்தியே அருள்வாய் போற்றி ஓம்” என ஆறு முறை உச்சரித்து உடன் வைத்துக்கொள்ளவும்.
  8. மாதச்சம்பளமாகட்டும், சுயத்தொழில், வியாபாரம் செய்பவர்கள் யாராகினும் வருவாயில் முதல் செலவாக உப்பு, மல்லிகைபூ இரண்டையும் வாங்குவதே முதல் செலவாக இருக்க வேண்டும்.
    ( பணவருவாய் பலவகையிலும் பெருகும் ).

9.பணப்பெட்டி தென்மேற்கு மூலையில் இருக்கவேண்டும், அதில் எப்போதும் மல்லிகைபூ போட்டு வைக்கவேண்டும்.

  1. பணப்பெட்டியில் பெரிய தொகைகளை வைக்கும்போது ஆறு வெற்றிலைகள், முன்று பாக்குகள் சேர்த்து வைக்கவும்.
  2. மகாலக்ஷ்மி படத்திற்கு தினமும் காலை, மாலை நெய், தேங்காய் எண்ணை, நல்லெண்ணெய் ஏதாவதொன்றில் இரண்டு திரி போட்டு விளக்கு ஏற்றி வீடு, கடை முழுவதும் சாம்பிராணி புகை காட்டிவருவது பண விஷயத்தில் மிகசிறந்த வசியமாகும்.
  3. குழந்தைகள் வளரும்போது விழும் முதல் பல்லை பால் பற்கள் என்கிறோம், அவ்வாறான பால் பற்களில் ஏதேனும் ஒன்று பையிலோ பணப்பெட்டியிலோ வைத்தால் செல்வம் பெருகும்.
  4. வடகிழக்கு மூலையில் குடிக்கும் நீரைவைத்து அதில் எலுமிச்சை ஒன்றை போட்டு வைக்கவும், தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்து வந்தால் பற்றாக்குறை நீங்கி செல்வம் கொழிக்கும்.
  5. கல் உப்பை வீட்டில் வியாபார ஸ்தலங்களில் எல்லா மூலைகளிலும் சிறிது போட்டு வைத்தால் தீய சக்திகள் ஓடும், பணம் பெருகும்.
  6. பணப்பெட்டி சந்தனப்பெட்டியாக இருந்தால் அதிர்ஷ்டம் பெருகும். வசதி இல்லையேல் பச்சை நிற பட்டுத்துணியில் பணப்பை செய்து அதனுள் சிறிய சந்தனக்கட்டை ஒன்றை அதனுள் போட்டு வைக்கவும், சந்தனம் இருப்பதை வளர்க்கும் சக்தி உடையது.
  7. வருமானத்தில் ஐந்து சதவீதத்தை தானதிற்கென போட்டு வையுங்கள், மாதம் ஒருநாள் அதை தானமாக கொடுங்கள், கொடுப்பது பெருகும்.
  8. முக்கியகாரியமாக தொழில் விஷயமாக வெளியே செல்லும்போது அருகம்புல் நுனி ஒன்றையோ, திருநீற்றுப்பச்சிலை ஒன்றையோ பறித்து பையில் வைத்துச்செல்ல சென்ற காரியம் நிச்சயம் வெற்றியே.
  9. சாம்பிராணியும், மருதாணி விதையும், வெண்கடுகும் கலந்து வீட்டில், வியாபார ஸ்தலத்தில் தூபமிட தீய சக்திகள், கண்திருஷ்டி, தோஷங்கள் நீங்கி தொழில் முன்னேற்றம் அடையும், மகாலக்ஷ்மி நம்மிடத்தில் நடமாடுவாள்

செல்வம் உங்கள் வீட்டில் பெறுக

  1. வியாழக்கிழமை குபேர காலத்தில் குபேரனை வழிபடபணம் வரும்.
    2. வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
    3. வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடுநீங்கும்
    4. வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில்குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய்வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.
    5. நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்ததரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்மஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.
    6. அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது.பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களைமட்டும் வழிபட பணம் வரும்.
    7. வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு,ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது.பணம் ஓடிவிடும்.
    8. பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசிபெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.
    9. வெள்ளளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலைமகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர்மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில்பண புழக்கம் அதிகரிக்கும்.
    10. அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்குதிருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெறபணம் நிலைத்திருக்கும்.
    11. யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன்நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ரஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசைதான்.
    12. பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில்கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும் .45 நாட்கள்விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.
    13. முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடைநீங்கும்.
    14. வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்குஅபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சைவளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.
    15. பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணியதனப்ராப்தி அதிகரிக்கும்.
    16. பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும்.
    17. பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டிதலையடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒருபிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும்பணப்பிரச்சனை தீரும்.
    18. தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும்தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும்.
    19. குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம்விலகும்.
    20. தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை என தொடர்ந்து 12மாதமும் திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானைதரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர் ஆகலாம்.பூர்வ புண்ணியம் இல்லாதவர் கூட லட்சாதிபதி ஆகலாம்.
    21. அம்திஸ்ட் கல் 10 கேரட் வாங்கி பணப்பெட்டியில் வைக்கபணம் ஆகர்ஷணம் ஆகும். சீக்கிரம் செலவு ஆகாது.
    22. குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் லஷ்மிகடாட்சம் ஏற்படும்.
    23. தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணுசஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்தமும் வாசம்செய்வாள்.
    24. மகாலட்சுமிக்கு இளஞ்சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபடவசியமுண்டாகி செல்வ வரத்து உண்டாகும்.
    25. அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக்கிழமைவரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11தீபமும் ,11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவுநிரந்தரமாகும்.
    26. வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தைவெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கும்.
    27. ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை பெறலாம்.
    28. ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை வழிபடசெல்வம் பெருகும்.
    29. தொடர்ந்து 11 பெளர்ணமி அன்று இரவு 8.30 மணிக்குசொர்ணாகர்ஷன பைரவருக்கு தாமரை மாலைஅணிவித்து பிரசாதமாக அவல், பாயாசம் படைத்து வழிபடசொர்ண ஆகர்ஷணமாகும்.
    30. மகாலட்சுமிக்கும், தன பண்டார குபேரருக்கும் திரிதளவில்வத்தால் அர்சித்து, வில்வ மாலை அணிவித்திடபணம் குவியும்.
    31. ஐஸ்வர்ய தூப பொடியுடன், துளசி பொடியுடன் சேர்த்துஅவரவர் தன ஓரையில் தூபம் போட செல்வம் குவியும்.
    32. சுக்ர ஓரையில் உப்பு வாங்கிட செல்வம் குவியும்.
    33. வௌளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்குஉணவளிக்க செல்வம் சேரும்.
    34. மகாலட்சுமியை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி திரிதளவில்வத்தால் அர்சித்திட செல்வம் ஆகர்ஷணம் ஆகும்.
    35. சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லஷ்மி மந்திரம் கூறியபடி தெளித்திடசெல்வம் சேரும்.
    36. சுக்ர ஓரையில் மொச்சை பயிர் வாங்கிட செல்வம் சேரும்.
    37. சொர்ணாகர்ஷன பைரவருக்கு தூய பன்னீரில் அவரவர்பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்திட பணம் சேரும்.
    38. பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகலசெல்வங்களும் வசமாகும்.
    39. வயதான சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன்வளையல், மருதாணி சேர்த்து தானம் அளித்திட லஷ்மிஅருள் பரிபூரணமாக கிட்டும்.
    40. மஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து வீட்டிலும்,தொழில் ஸ்தாபனத்திலும் தெளிக்க ஐஸ்வர்யம் பெருகும்.
    41. ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர பணம்ஆகர்ஷணமாகும்.
    42. தங்க நகை அணிந்த திருப்பதி வெங்கடாஜலபதி படத்தில்காலை எழுந்தவுடன் கண் விழித்திட பணம் கிடைக்கும்.
    43. தனாகர்ஷண தைலத்தால் விளக்கு ஏற்றிட செல்வம்நிலையாக தங்கும்.
    44. சொர்ணாகர்ஷன பைரவருக்கு 9 நெய் விளக்கு ஏற்றிட,தொடர்ந்து 9 வாரம் செய்து வர குடும்பத்தில் முன்னேற்றம்ஏற்படும்.
    45. குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றிவழிபட்டால் பணம் வரும்.
    46. குல தெய்வ வழிபாடும், பித்ருக்கள் வழிபாடும்இடைவிடாமல் செய்து வர குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.
    47. திருமலை வெங்கடாஜலபதிக்கு வெண் பட்டு அணிவித்துவழிபட செல்வம் சேரும்.
    48. துளசி மாடம் அமைத்து தொடர்ந்து அதனை பூஜை செய்துவர தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும்.
    49. சொர்ண பைரவருக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம்செய்து, அதனை வீட்டில் தெளித்திட சொர்ண லாபம்கிட்டும்.
    50. செவ்வாய்கிழமையில் செவ்வரளி கொண்டு செந்தூர்முருகனை வழிபட்டால் காரியத்தடை நீங்கி வளம்பெருகும்.
    51. ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்சித்து வழிபடபூமி லாபமும், செல்வ வளம் கிட்டும்.
    52. கோவிலில் லஷ்மி மீது வைத்த தாமரை மலரைக்கொண்டு வந்து பச்சை பட்டில் வைத்து மடித்துபணப்பெட்டியில் வைக்க பணம் சேரும்.
    53. சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனைஅன்னதானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து மடங்குநம்மிடம் வந்து சேரும்.
    54. ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பெருமாளுக்குஅணிவித்த சந்தனத்தை பெற்று அதனை தினமும்அணிந்து வர பணம் வரும்.
    55. வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமிஅஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டுஅர்சிக்க தனலாபம் கிட்டும்.
    56. ஐஸ்வர்ய லஷ்மி படத்தினில் வாசனை திரவியம் தடவிபணப்பையில் வைக்க பணம் ஆகர்ஷணம் ஆகும்.
    57. தொடர்ந்து 11 நாள் ஸ்ரீ சூக்த பாராயணத்தை வேதபண்டிதர்களை கொண்டு செய்ய லஷ்மி கடாடசம்நிரந்தரமாகும்.
    58. ஸ்ரீ லஷ்மி குபேர சத நாம ஸ்தோத்திரத்தினை தீப தூபஆராதனையோடு கூறி வர அஷ்ட தரித்திரம் நீங்கிதனலாபம் பெறலாம்.
    59. கனக தாரா ஸ்தோத்திரத்தினை கூறியும் கேட்டு வர பணம்கிடைக்கும்.
    60. வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்துமஞ்சளாக பிடித்து அவர்களை நினைத்து வழிபட, சகலதோஷங்கள் விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
    61. மகாலட்சுமிக்கு பச்சை பட்டினை அணிவித்து வணங்கபணம் வரும்.
    62. கற்பக விநாயகரை 1008 அருகம்புல் கொண்டு மகாசங்கடஹர சதுர்த்தியில் அர்சித்து வணங்கதொழிலிலுள்ள தடை நீங்கி லாபம் கிட்டும்.
    63. பச்சை பட்டு உடுத்திய லஷ்மி படத்தனை வாசலில் மாட்டிதினமும் தூபம் காட்டி வர அஷ்ட ஐஸ்வர்யங்களும்வசமாகும்.
    64. செல்வத்திற்கு உரியவள் மகாலட்சுமி வெள்ளிக்கிழமைதினம் வழிபடவும் 24 வெள்ளிக்கிழமை வழிபாட்டால்பணம் கிடைக்கும்.
    65. தன பண்டார குபேரனை வழிபட பணம் தடையின்றிகிடைக்கும்.
    66. இந்துராணி மந்திரம் ஜெபம் செய்ய ராஜயோக வாழ்வுவாழ பணம் கிடைக்கும்.
    67. வியாழன் அன்று குரு ஓரையில் தட்சணாமூர்த்தி வழிபாடுசெய்ய செல்வம் சேரும்.
    68. வெள்ளிக்கிழமை காலை சுக்ர ஓரையில் சுக்ரன்,மகாலஷ்மி இருவரையும் மல்லிகை மலர் கொண்டு 33வாரம் வழிபட செல்வம் கிடைக்கும்.
    69. செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபடபணம் கிடைக்கும்.
    70. கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம், பாக்ய சூக்தம் சுக்ரஓரையில் பாராயணம் செய்ய பணம் வரும்.
    71. அவரவர் குல தெய்வத்தை தினம் அதிகாலை நேரத்தில்நம்பிக்கையுடன் வழிபட பணம் வரும்.
    72. அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி இவைகளில்முன்னோர்களை வேண்டி தானம் செய்ய, நாம் செய்தஅளவின் மடங்குகள் பணம் வரும்.
    73. திருப்பதி வெங்கடாஜலபதி, பத்மாவதி படம் வைத்துவழிபட பணம் வரும்.
    74. தனதா யட்சணீ பூஜை வில்வ மரத்தடியில் தந்திரசாஸ்திரப்படி செய்ய ஏழே நாளில் பணம் கிடைக்கும்.
    75. சௌபாக்கிய பஞ்சதசி மந்திரம் ஜெபிக்க கோடிகணக்கில்பணம் கிடைக்கும்.
    76. சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கணபதி, தனவீரபத்ரன், சொர்ண காளி, சொர்ண வராகி இவைகளைவழிபட தங்க நகை கிடைக்கும்.
    77. ஆந்தையை வழிபட பணம் கிடைக்கும்.
    78. ஜோடி கழுதை படம், ஓடும் வெள்ளை குதிரை படம்,அடிக்கடி பார்க்க பணம் வரும்.
    79. தனாகர்ஷண மூலிகை சட்டை பாக்கெட்டில் இருக்க பணம்குறையாது.
    80. பசுவின் பிருஷ்ட ஸ்பரிசம் தனம் தரும்.
    81. ஒத்தை பனை மர முனீஸ்வரனை ஏரளஞ்சில் தைலதீபமேற்றி வழிபட அன்றே பணம் கிடைக்கும்.

திருமண சடங்குகளும் அதன் விளக்கமும்

நம்முடைய “இந்து” சமயத்தில் திருமண நிகழ்ச்சியின் போது செய்யப்படும் திருமண சடங்குகளும் அதன் விளக்கமும்:
1. நாட்கால் நடல்:
இதை பந்தகால் நடுவது என்பார்கர்கள்.
பந்தகால் நடுவதற்கு வேரில்லாமல் துளிரும் மரத்தை (பூவரசம் மரம்) வெட்டி நடவேண்டும்.
மரத்தின் நுனியில், முனை முறியாத மஞ்சள், 12 மாவிலைகள், பூ மூன்றையும் இணைத்து கட்டவேண்டும்.
பின்பு நட வேண்டிய குழியில் வெள்ளி நாணயம் , பூ , நவதானியம் இவற்றை போட்டு
போட்டு பந்த கால் நட வேண்டும்.
சாம்பிராணி காண்பித்து தேங்காய் உடைக்க வேண்டும்.
பந்தகால் நட்டவுடன் மரத்தின் அடியில் பால் ஊற்றி, மஞ்சள், குங்குமத்தை மேல் நோக்கி
தடவ வேண்டும்.
மாவிலை, நவதானியம், வெள்ளி நாணயம், பூ, தீய சக்திகளை உள்வாங்கிக் கொள்ளும். பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங்களுக்கும் அறிவிக்கை செய்து ஆசி பெறுவது நோக்கமாகும்.
2. பொன்னுருக்குதல்:
திருமாங்கல்யம் என்பது சுமங்கலியின் சின்னம்
ஆகும்,போற்றி பாதுகாக்க பட வேண்டியது ஆகும்.
நல்ல நாளில்,தீர்க்க சுமங்கலியாக
வாழ்வதற்கு மாப்பிள்ளை வீட்டில் வைத்து உரிய பொற்கொல்லரிடம் புதிய பொன் கொடுத்து திருமாங்கல்யம் செய்ய வேண்டும்.
3. கலப்பரப்பு:
மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் சேலையை களத்தில் பரப்பி (தரையில் விரித்து)
மணப்பெண் அமர்ந்து மங்களப் பொருட்களை இரு வீட்டாருக்கும் வழங்குதன் மூலம் இருவீட்டாரும் கலந்து ஒன்றாகி விட்டதற்கான
அடையாள நிகழ்ச்சி. கலம் என்பது பாத்திரம் ஆகும்.
பாத்திரத்தில் மங்கலப்பொருட்களை (மஞ்சள் கலவை, வெற்றிலை, பாக்கு, தெங்காய், பழக்கள் பூச்சரம்) நிரப்புதல் கலப்பரப்பு ஆகும்.
4. காப்பு கட்டுதல்:
காப்பு என்பது அரண் போன்றது.
மங்களகரமான சக்தி வாய்ந்த மங்கள் உரு வாய்ந்த மஞ்சள் கயிற்றை காப்பாக கட்டுவது.
திருஷ்டி மற்றும் அசுர சக்திகளால்
இடையூறுகள் வராமல் தடுப்பதற்கு .
காப்புக்கட்டுவதில் இருந்து மறு நாள் காப்பு அவிழ்க்கும் வரை திருமணம் சம்பந்தமான
அனைத்து நிகழ்ச்சிகளையும் தடையின்றி செய்வேன் என்பதை உறுதி செய்யும் சடங்காகும்.
அனைத்து நிகழ்ச்சிகளும் தடையின்றி நடைபெறும் வண்ணம் இடையூறு வராமல் காக்குமாறு தெய்வத்தை வேண்டிக் கட்டப்படுவது ஆகும்.
5. முளைப்பாலிகை:
நவதானியத்தின் மூலம் நவக்கிரகங்களை
சாந்தி செய்வது .
முளைப்பாலிகையில் இடப்படும் நவதானியங்கள் வளர்வது போல் குடும்பமும் செழித்து வளரட்டும்
என்பதற்கான அடையாளச்சடங்கு .
கள்ளங் கபடமற்ற குழந்தைகளின் உள்ளம் தெய்வீக பண்பின் உறைவிடம் .
எனவே சிறுமியர் மூலம் இச்சடங்கு நடத்தப் படுகின்றது.
6. தாரை வார்த்தல்:
தாரை என்றால் நீர் என பொருள் .
நீருக்குத் தீட்டில்லை . நீர் மந்திர நாத ஒலியின் அதிர்வை ஏற்கக் கூடியது .
இப்படி தெய்வத் தன்மை வாய்ந்த நீரை இதற்கு பயன்படுத்துகின்றனர் .
திருமணச் சடங்குகளில் மிக முக்கியமானது தாரை
வார்த்தல்.
தாரை வார்த்த பின்பு தான் மணமகன் மணமகள்
கழுத்தில் தாலி கட்டும் உரிமையை
அடைகின்றான்” என் மகளை தெய்வங்களின் சாட்சியாக உனக்கு மனைவியாக கொடுக்கின்றேன் “என மணமகளின் பெற்றோர் ,
தாரை வார்த்து கொடுக்க மணமகனின் பெற்றோர் உங்கள் மகளை இனி எங்களது மறு
– மகள் (மருமகள்) ஆக ஏற்றுக் கொள்கின்றோம்
என்பதற்கான உறுதிமொழி.
எனவே தான் மாப்பிள்ளையின் தாயார் கை ஏற்றுக் கொள்ளும் விதமாக அடியில் இருக்க,
அதற்கு மேல் மணமகனின் தந்தையின் கை,மணமகனின் கை , மணப்பெண்ணின் கை ,
மணப் பெண்ணின் தந்தையின் கை, எல்லாவற்றிற்கும் மேலாக மணப்பெண்ணின் தாயாரின் கை.
இந்த வரிசையில் கைகளை வைத்து இச்சடங்கு நடைபெறும்.
உரிமையை விட்டுக் கொடுப்பதற்கு அடையாளமாக செய்யப்படும் சாஸ்திரப் பூர்வமான சடங்கு
தாரை வார்த்தல் என்ப்படும்.
7. தாலி கட்டுவது:
தாலி என்பது மணமகன்,மணமகள் கழுத்தில் கட்டும் மஞ்சள் கயிறு ஆகும்.
மஞ்சள் நிறம் இந்துக்களின் புனித நிறம் ஆகும்.
மேலும் தாலி என்பது ஒரு பெண்ணுக்கு அடையாள
சின்னமாகும்.தலைநிமிர்ந்து நடந்து வரும் ஆடவர், ஒரு பெண்ணை பார்க்கும் பொழுது, கழுத்தில் தாலியை பார்க்கும் பொழுது இவள்
மற்றவருக்கு உரியவள் என ஒதுங்கி போய் விடுவார்.
மாங்கல்ய சரடானது ஒன்பது இழைகளை கொண்டதாகும்.
ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களை குறிக்கிறது.
தெய்வீக குணம், தூய்மையான குணம்,மேன்மை, தொண்டுள்ளம், தன்னடக்கம்,ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல் போன்ற ஒன்பது குணங்களும் ஒரு பெண்ணிற்கு இருக்க
வேண்டும் என்பதற்காகவே,ஒன்பது சரடு உள்ள மாங்கல்ய நாண் பெண்களுக்கு அணியப் படுகிறது.
8. ஹோமம் வளர்த்தல்:
வேதங்களில் சொல்லப்பட்டப்படி அக்னி சாட்சியாக திருமணம் நடைபெற வேண்டும்.
ஹோமத்தின் மூலம் நவக்கிரகங்களைத் திருப்தி படுத்த வேண்டும்.
ஹோமத்தில் இடப்படும் பொருட்கள்
சுற்றுப்புறத்தை சுத்தப் படுத்துகிறது.
ஹோமப்புகை உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.
எந்த ஒரு நிகழ்வும் அக்னி சாட்சியாக நடந்தால் தான்
சாஸ்திரப்படி சரியாகும்.
9. கும்பம் வைத்தல்:
கும்பம் இறைவனது திரு உடம்பின்
அடையாளம். இறைவனின் வித்யா தேகமாகத் திகழ்வது கும்பம்.
இறைவனது திருமேனி , கும்பத்தில் பாவிக்கப்படும் கும்ப வஸ்திரம் உடம்பின் தோல் நூல் நாட நரம்புகள் குடம் தசை தண்ணீர் இரத்தம் நவ ரத்தினங்கள் எலும்பு
தேங்காய் தலை மாவிலை தலைமயிர் தருப்பை குடுமி
மந்திரம் உயிர் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது .
10. அம்மி மிதித்தல்:
அம்மி என்பது கருங்கல்லினால் ஆன சமையல் செய்வதற்கு பயன்படும், பொருட்களை
அரைப்பதற்கு பயன்படும் கருவியாகும்.
அம்மி மிக உறுதியுடனும், ஒரே இடத்தில் அசையாமல் இருக்கும்.
திருமண பெண் புகுந்த வீட்டில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், கணவர், மாமானார், மாமியார், நாத்தானார் மற்றும் அனைவராலும் சங்கடங்கள் வந்தாலும்,மன உறுதியுடன்
எதையும் எதிர் கொள்ளும் பக்குவத்தை கொண்டிருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே அம்மி மிதிப்பது ஆகும்.
11. அருந்ததி பார்த்தல்:
அருந்ததி என்பது ஏழு ரிஷிகளில் ஒருவரான வசிஷ்டர் அவர்களின் மனைவியாவார்.
ஏழு ரிஷிகளும், வானில் நட்சத்திரங்களாக ஒளி
வீசுகிறார்கள்.
இதைத்தான் நாம் துருவ நட்சத்திரம் என்கிறோம்.
ஏழு நட்சத்திரங்களில், ஆறாவது நட்சத்திரமாக இருப்பவர் வசிஷ்டர் ஆவார்.
இவருடைய மனைவி அருந்ததி ஆவார்.
இரவு நேரத்தில் வடக்கு வானில் நாம் பார்த்தோம் என்றால், சப்த ரிஷி மண்டலத்தை காணலாம்.
ஆறாவது நட்சத்திரமாக ஒளிவீசும்
வசிஷ்டர் நட்சத்திரத்தை கூர்ந்து கவனித்தால் அருகிலேயே அருந்ததி நட்சத்திரத்தையும்
பார்க்கலாம்.
மற்ற ரிஷிகள் எல்லாம் ரம்பா,
ஊர்வசி, மேனகை இவர்களிடம்
சபல பட்டவர்கள்.
அதேபோல் அவர்களுடைய
மனைவிகளும், இந்திரனனின் மேல் சபலப் பட்டவர்கள்.
ஆனால் வசிஷ்டரும், மனைவியும் ஒன்று சேர்ந்து, மற்றவர்களின் மீது எந்த சபலம் இல்லாமல் வாழ்ந்தவர்கள்.
12. ஏற்றி இறக்குதல்:
மணமக்களை பாதுகக்க இரு சுமங்கலிகள் மங்கலப் பொருட்களை (திருவிளக்கு, நிறை
நாழி, சந்தனக்கும்பா, பன்னீர்ச்செம்பு, தேங்காய், பழம், குங்குமச்சிமிழ், மஞ்சள்
பிள்ளையார் போன்றவை) தொட்டுச் செய்யும் சடங்கு .
மேலும் அருவ நிலையிலிருந்து
மணமக்களை ஆசிர்வதிக்கும்
தெய்வங்களுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் ,
முன்னோர்களுக்கும் காட்டும் மரியாதையான பாவனை, திருஸ்டி கழிப்பதற்காக செய்யப் படுவதும் உண்டு.
13. அடை பொரி:
பச்சரிசி மாவினால் செய்யப்படும் அடையும், பல உருவத்தைக் காட்டும் வகையில் பொரிக்கப்படும் நெல் பொரியும் , திருமண
நிகழ்வுகளால் ஏற்ப்டும் பல்வேறு திருஸ்டி தோஷங்களை நீக்க வல்லது .
இது அட்டத் திக்கு பாலகர்களுக்கு கொடுக்கப்படும் அவிர் பாகம் ஆகும்.
14. நிறை நாழி:
நித்தமும் குத்து விளக்கு என்று
சொல்லக்கூடிய திருவிளக்கருகே வைத்து வழிபட்டால் நற்பேறுகள் பெருகும் என்பது அய்தீகம் ஆகும்.
15. ஒலுசை:
ஒலுசை என்பதை வரதட்சணை என்றும் கூறுவர்.
மணமகள் அனைத்து வகைச் செல்வங்களுடன் கணவன் வீட்டிற்கு வருகிறாள் என்பதை அறிவிக்கும் நிகழ்ச்சி .
சிறப்பான இல்லற வாழ்விற்கு அத்தியாவசியமான பொருட்களை பொறுப்புணர்ச்சியுடன் பெண் வீட்டார் கொடுப்பது .
ஒலுசைப் பொருட்களைப் பட்டியலிட்டு சபையில் கொடுப்பது தற்சமயம் குறைந்து வருகிறது . இது வரவேற்க்க தக்க விசயமாகும்.
16. மணமகள் பொங்கலிடுதல்:
முதல் நாள் திருமண நிகழ்ச்சிகள்
அனைத்தையும் சிறப்பாக நடத்திக் கொடுத்த இறைவனுக்கும், முன்னோர்களுக்கும் சூரியன்
முதலான் தேவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஆகும்.
மணமகள் வீட்டுப் பொறுப்பை
ஏற்றுக் கொண்டாள் என்பதைக்
வெளிப் படுத்துவது.
புதுப்பெண்ணின் சமையல் நளினம் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள உதவுவது.
இதுதான் மணப்பெண்ணின்
முதல் சமையல்.
இன்று போல் என்றும் வாழ்க்கை பால் போல் பொங்க வேண்டும் என்பதற்கான அறிகுறியே பொங்கலிடுவதின் நோக்கமாகும்.
17. பிள்ளை மாற்றுவது:
எதிர்வரும் நிகழ்வுகளுக்கு அச்சாரம். இனியும்
நீங்கள் பச்சைக்குழந்தைகள் அல்ல என்பதை மணமக்களுக்கு உணர்த்தும் செயல் வடிவ
உபதேசம்.
பிறக்கப் போகும் குழ்ந்தைகள் நல்ல
முறையில் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவரும் ஒரு சேர வாழ்த்துவது.
திருமணத்தின் பயனே நன்மக்கட்பேறு
“மங்கலமென்ப மனைமாட்சிம்ற்று அதன் நஙலம் நன்மக்கட்பேறு” –
திருவள்ளுவரின் வாக்காகும்.
நன்மக்கட்பேறு பெறுவதற்காக செய்யப்படும் ஒரு சடங்கு.
18. மறுவீடு:
மண மகளின் பெற்றோரும் – உறவினரும் மாப்பிள்ளை வீட்டிற்கு முதன்முறையாக மணமகளுடன் சென்று – விருந்துண்டு
மகிழ்ந்து – உறவை வலுப் படுத்துவது .
ஒரு பெண்ணிற்கு பிறந்த வீடு வாழ்க்கையும், புகுந்த வீடு வாழ்க்கையும் ஒரு நாணயத்தின்
இருபக்கங்கள் போன்றது .
மகளை வாழ்க்கையின் மறு பக்கத்தை காணச் செய்வதே மறு வீடு ஆகும்.
19. கோவிலுக்கு அழைத்துச் செல்லுதல்:
நல்ல திருமண வாழ்க்கை வேண்டும் என்பது
மணமக்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாக அமைந்திருக்கும் .
வேண்டுதலை நிறைவேற்றிய இறைவனுக்கு நன்றி
செலுத்துவதுடன் , இல்லற வாழ்க்கை வளம் பெற தெய்வங்களின் ஆசி பெறுவதற்கு தம்பதிகளைக் கோவிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
நாம் செய்யும் ஒவ்வோரு சடங்குகளும் அர்த்தம் உடையவை.
“அர்த்தமுள்ள இந்து மதமேதான்”.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: