GIRIDHARAN

The happiness of your life depends on the quality of your thoughts.

History

கிளியோபாட்ரா

எகிப்து அரசன், பன்னிரெண்டாம் டாலமியின் மகளாகப் பிறந்தாள்

கிளியோபாட்ராவின் காலம் கி.மு.69-லிருந்து 30 வரை என்று வரலாற்றுப் புத்தகங்கள் சொல்லுகின்றன. எகிப்தை ஆண்ட பன்னிரெண்டாம் டாலமி என்கிற மன்னனுக்கும் இஸிஸ் என்கிற அவனது ஒரு அரசிக்கும் பிறந்தவள் கிளியோபாட்ரா. சரித்திரப் பிரசித்தி பெற்ற இந்த கிளியோபாட்ராவுக்கு முன்னால் ஏழு கிளியோபாட்ராக்கள் இருந்திருக்கிறார்கள் என்பதால் இவள் பிறக்கும்போதே எட்டாம் கிளியோபாட்ரா என்றே குறிப்பிடப்பட்டு வந்திருக்கிறாள். முந்தைய ஏழு பேர் பெறாத பேரையும், புகழையும் இவள் எப்படிப் பெற்றாள் என்றால், அதற்கு இரண்டு காரணங்கள்.

முதலாவது, இவளது புத்திசாலித்தனம். அடுத்த காரணம், அழகு. அழகு என்றால் ஐஸ்வர்யாராய் அழகல்ல. அதற்கெல்லாம் நூறுபடி மேலே என்கிறார்கள் எகிப்து சரித்திரவியலாளர்கள். வெறும் முப்பத்தொன்பது வயசு வரைக்கும் தான் அவள் வாழ்ந்திருக்கிறாள். ரொம்பச் சின்ன வயசிலேயே அரசியானவள் என்றாலும் ராஜாங்கக் காரியங்கள் தவிர பல்வேறு துறைகளில் அவளுக்குப் பெரிய ஆர்வங்கள் இருந்திருக்கின்றன.

உதாரணமாக, வான சாஸ்திரம், ஜோதிடம் போன்ற கலைகளைக் கல்வியாகவே கற்றவள் கிளியோபாட்ரா. சும்மா மேக் அப் போட்டுக் கொள்ளுவதோடு விட்டு விடாமல், அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பது, அவற்றின் வேதியியல், மருத்துவ குணங்களை ஆராய்வது போன்றவற்றில் அவளுக்கு அபாரமான திறமை உண்டு. தன் வாழ்நாளில் அவளே ஏழு விதமான பர்ஃப் யூம்களைக் (செண்ட்) கண்டுபிடித்ததாகவும் சொல்லுகிறார்கள்.

இதெல்லாம் போதாதென்று ஒன்பது மொழிகளில் எழுத, பேச, படிக்கவும் தெரியும். ஆச்சா? கிளியோபாட்ராவின் தந்தையான டாலமிக்கு வயசானதும் தன் மகளைப் பட்டத்தில் அமர்த்த விரும்பியிருக்கிறார். அந்தக் காலத்தில் எகிப்தில் ஒரு பெண் தனியாக ஆட்சி செய்வது முடியாது. ஆகவே, கிளியோபாட்ராவையும், அவளது தம்பியான டாலமியையும் சேர்த்து அரியணையில் உட்கார வைத்தார். அதாவது, கூட்டணி ஆட்சி!

 

கிளியோபாட்ரா. கி.மு. 51 இல் தந்தையின் மறைவுக்குப் பின் இளைய சகோதரன், பதிமூன்றாம், டாலமியுடன் இணைந்து எகிப்திய சாம்ப்ராஜ்யத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றாள். அப்போது ஒரு பெண் தனியாக ஆட்சி ஆழ முடியாது என்பதால் , தன் தம்பி தாளமியை திருமணம் செய்து கொண்டாள். அப்பொழுது அவள் வெறும் 18 வயது பாவை. தேன் போன்ற மென்குரல், பார்ப்பவரையே கிறங்கடிக்கும் கவர்ச்சி, இவற்றுடன் அந்த வயதிலேயே, ஒன்பது மொழிகளைப் பேசும் திறமை, பேரறிவு, அரசியல் சாணக்யம், எதையும் எதிர்கொள்ளும் துணிவு ஆகியவற்றால் தேர்ந்த அரசியாக விளங்கினாள். ஆனால் அவளது வளர்ச்சி அநேகம் பேருக்கு பொறாமையை அளித்தது. அவள் சகோதரனுடைய ஆலோசகர்களின் சூழ்ச்சியால், கிளியோபாட்ரா ஆட்சியை இழந்தாள். அண்டை நாட்டில் தஞ்சமடைந்தாள். அப்போதுதான் அப்பெரும் திருப்பம் நிகழ்ந்தது. ரோமானிய மாவீரன் ஜூலியஸ் சீஸர் அப்போது, எகிப்த்துக்கு வர நேர்ந்தது.

அவனது ஆதரவுடன், ஆட்சியை மீண்டும் கைப்பற்ற முடியும் என எண்ணிய கிளியோபாட்ரா, அவனை சந்திக்க முடிவு செய்தாள். பகிரங்கமாக, எகிப்துக்குள் நுழைந்தால் எதிரிகளால் அவளது உயிருக்கே ஆபத்து; பிறகு சீஸரை சந்திப்பது எப்படி?? ஜூலியஸ் சீஸருக்கு அளிக்கப்பட்ட பல பரிசுப் பொருட்களில், சுருட்டப்பட்டிருந்த, ஒரு அழகிய கம்பளமும் இருந்தது. அவனுக்கு எதிரில் மெதுவாக உருட்டி விரிக்கப்பட்ட, அந்த கம்பளத்திலிருந்து பளீரென வெளிப்பட்டாள் கவர்ச்சிக் கன்னி கிளியோபாட்ரா. கண்டதும் அவள் மேல் காதல் வசப்பட்டான் மாவீரன். தன் காதலுக்காகவும், காதலிக்காகவும் எதையும் செய்யத் தயாராக இருந்த அவன், தனது படை பலத்தால் எகிப்தை வென்றான். அதை காதலின் காணிக்கையாக அவள் காலடியில் சமர்ப்பித்தான். காதல் மயக்கத்தில் பறந்தது காலம்.

ரோமானிய வீரனும் எகிப்த்திய அரசியும், அழகிய நைல் நதியில் கவிதைகள் பாடி, தோணிகள் ஓட்டி மகிழ்ந்தனர். காதலின் பரிசாக ஒரு மகனையும் அவனுக்கு ஈன்றெடுத்தாள் கிளியோபாட்ரா…. மகனுடன் ரோமாபுரியில் கால் பதித்த கிளியோபாட்ராவை, ஒரு தேவைதையாக வரவேற்றான் சீஸர். ஊர்வலமாக அழைத்துச் சென்று மக்களுக்கு அறிமுகப் படுத்தினான். அவளது சிலையையும் நிறுவி அவளை கௌரவித்தான். ஆனால் சீஸரின் அதிகாரத்தையும், கிளியோபாட்ராவை ரோமாபுரி மஹாராணியாக அமர்த்தியதையும், பொறுக்காத சதிகாரர்கள், கி.மு.44 இல் சீஸரை வஞ்சித்துக் கொன்றனர். துடித்துப் போன கிளியோபாட்ரா குழந்தையுடன் தன் நாட்டிற்கு தப்பி வந்து சேர்ந்தாள்.

அரசியல் மாற்றங்கள் பல அரங்கேறின……… ரோமானிய சாம்ராஜ்யத்தில், அக்டேவியன் என்பவனும், மார்க் ஆன்டனி என்பவனும், ரோமாபுரியின் வெவ்வேறு பகுதிகளை ஆளத் தொடங்கினர். கி.மு. 42 இல் அரசியல் காரணங்களுக்காக, எகிப்த்துக்கு வந்த மார்க் ஆன்டனி கிளியோபாட்ராவை சந்தித்தான். அவள் மீது மீளாக் காதல் கொண்டான். தன் காதலை அவளிடம் சேர்ப்பிக்கத் தவித்தான். தன் கணவனை இழந்த துக்கத்தில், உயிர் சுமந்த உடலாக இருந்த கிளியோபாட்ராவிற்கு, அவனுடைய அறிமுகம் ரணமாற்றும் மருந்தாக இருந்தது. வார்த்தைகள் வளர்ந்து, நட்பானது. நட்பின் கரிசனம் அன்பு சேர்த்தது. அன்பு முதிர்ந்து காதலானது. வாழ்வில் மீண்டும் வசந்தம் துளிர்த்தது. இருவரும் இணைந்து தனித்ததோர் உலகம் படைத்தனர். காதல் கீதம் பாடி சிறகடித்துப் பறந்தனர். ரோமானிய மன்னன் ஆன்டனியின் உலகமே தலைகீழாக மாறிப் போனது. எகிப்தே அவனது தேசமானது. கிளியோபாட்ராவே அவனது உலகமானாள். ஆன்டனி ரோமாபுரியை மறந்தாலும், அந்நாடும், அவன் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்த பல சக்திகளும், அவனுக்கு எதிராகக் கிளம்பத் தொடங்கின.

தாய் நாட்டைத் துறந்து, வேற்று நாட்டு அரசியுடன் கூடிக் குலாவிய ஆன்டனிக்கு எதிராக, மக்களைத் தூண்டி விடுவது அக்டேவியனுக்கு ஒன்றும் பெரிய காரியமாக இல்லை. ரோமானியர்கள் எகிப்து மீது போர் தொடுத்தார்கள். ஆன்டனி, கிளியோபாட்ராவின் கடற்படைக்கு தலைமை தாங்கி, ரோமானிய கடற்படையை எதிர்த்து சென்றான். கடல் போர் துவங்கியது. ஆன்டனி வீராவேசமாகத் தான் போரிட்டான். ஆயினும், மாபெரும் ரோமானியக் கடற்படைக்கு எதிராக அவனது கரம் தாழ்ந்தது. அவனது படை தோல்வியை நோக்கி முன்னேறியது. அந்த கெட்ட செய்தி எகிப்தை அடைந்தது. தோல்வி நெருங்குவதை உணர்ந்த கிளியோபாட்ரா தனக்காகவும், காதல் நாயகனுக்காகவும் கல்லறை ஒன்றை அமைத்தாள். அதில் குடி புகுந்தாள். அங்கே கடலில் அடுத்தடுத்து தோல்விகளால், மனம் வெதும்பி கிடந்தான் ஆன்டனி. அந்த தருணத்தில் கிளியோபாட்ரா மரணமடைந்து விட்டாள் என்ற தவறான செய்தி அவனை சென்றடைந்தது

Last edited by மகா பிரபு on Mon Oct 29, 2012 5:32 pm; edited 3 times in total


மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்
பதிவுகள் : 10119
http://www.amarkkalam.net

Back to top Go down

Re: கருப்பழகி கிளியோபாட்ரா

Post by மகா பிரபு on Mon Oct 29, 2012 9:02 am

ஐயோ!! நான் உயிர் வாழ இருந்த ஒரே காரணமும் முடிந்தது., அன்பே இதோ நானும் வந்தேன் உன்னுடன்!! என்று கதறிய ஆன்டனி தன் வாளை வயிற்றில் பாய்ச்சிக் கொண்டு மயங்கி விழுந்தான். அரசியின் உதவியாளர்கள் அவனை எடுத்துக் கொண்டு போய், கிளியோபாட்ராவிடம் சேர்த்தனர். மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்த காதலனைப் பார்த்துக் கதறினாள் அவள். குற்றுயிராய் இருந்த அவன், கலங்காதே!! நம் காதலை நினைவு கொள்!! நம் காதல் வாழும் என்று கூறி அவளது கரங்களில் உயிர் துறந்தான். நேர்ந்த பேரிழப்புக்கு துக்கப் படக் கூடத் திராணி இல்லை அவளிடம். சூழ்ந்து கொண்ட எதிரிகளிடம், தனது காதலனை நல்லடக்கம் செய்ய அனுமதி கோரி பெற்றாள். ஓர் அரசனுக்குரிய அனைத்து மரியாதைகளுடனும், தன் அன்புக் காதலனை கல்லறையில் இட்டாள்.

எகிப்திய சாம்ராஜ்யத்தின், தலைநகர் அலெக்ஸான்ட்ரியாவில், ரோமானியப் படைகள் சூழ்ந்து கொண்டிருந்தன. ரோமானியர்களின் ஒரே நோக்கம், முப்பத்து ஒன்பதே வயதான எழிலரசி, எகிப்திய பேரரசி கிளியோபாட்ராவை உயிருடன் பிடிப்பதுதான். அவளை சங்கிலிகளால் பிணைத்து, ரோமாபுரி வீதிகளில் இழுத்துச் சென்று, ரோமானியர்களே பாருங்கள்!! பேரழகி கிளியோபாட்ரா இனி நம் அடிமை!! நமக்கு தொண்டு செய்து வாழ்வதுதான் அவளது ஒரே கடமை என்று மக்களிடம் அவளைக் காட்சிப் பொருளாக்கிக் காட்ட அவர்கள் துடித்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில், அத்தனையையும் இழந்து விட்டிருந்தாள் கிளியோபாட்ரா, இருந்தும், தன் காதலுக்காகவும், காதலனுக்காகவும் மட்டுமே வாழ்வது என்று தீர்மானித்திருந்தாள்.

விதியின் எண்ணம் வேறாக இருந்தது. அவளுடைய காதலன் அவள் கண் முன்னே உயிரிழந்தான். இனி வாழ்வில் ஒன்றுமே இல்லை என்ற நிலை; எனவே, எஞ்சியிருந்த மானத்துடன், அவளும் உயிர் துறக்கத் தீர்மானித்தாள். தனக்கான கல்லறையை அமைத்து அதில் நுழைய இருந்த தருணத்தில் அவளை சிறை பிடித்தனர் ரோமானியர்கள். ரோமாபுரிக்கு செல்லும் முன் தற்கொலை செய்து கொண்டு விட்டால் என்ன ஆவது என்று அவளை கண்காணித்தபடி இருந்தனர். அடுத்த நாள் காலை, கிளியோபாட்ராவுக்கு உணவுப் பொருட்கள் வந்து சேர்ந்தன. அவற்றில் பழக்கூடை ஒன்றும் இருந்தது. ஒவ்வொன்றையும் எச்சரிக்கையுடன் சோதித்து விட்டுதான் காவலர்கள் அனுமதித்தார்கள். அதே நேரம், அருகிலேயே முகாமிட்டிருந்த ரோமானிய அரசன், அக்டேவியனுக்கு செய்தி ஒன்று வந்து சேர்ந்தது. அரசன் அதனைப் படித்தான்; ” எனது காதல் நாயகன், ஆன்டனியின் கல்லறையிலேயே, என்னையும் அடக்கம் செய்து விடு” : கிளியோபாட்ரா……. பதறிப் போனான் மன்னன்.

கிளியோபாட்ரா தற்கொலை செய்து கொள்ள முயல்கிறாள் என்று புரிந்து அவள் இருந்த இடத்திற்கு ஓடோடி வந்தான். ஆனால், தங்கக் கட்டிலில், சயனக் கோலத்தில், ஒயிலாகக் காட்சி தந்த அவளது, உயிரற்ற உடலைத்தான் அவனால் பார்க்க முடிந்தது. காலருகே, அந்தரங்கப் பணிப்பெண் ஒருத்தியின் உடல் கிடந்தது. உயிர் துறந்த, அரசியின் தலைக் கிரீடத்தை, சரியாகப் பொருத்திக் கொண்டிருந்த இன்னொரு பணிப் பெண்ணும், அவன் எதிரிலேயே சுருண்டு விழுந்து மாண்டாள். பழக் கூடைக்குள், சாமர்த்தியமாகக் கொண்டு வரப்பட்ட, விஷ நாகத்தின் பற்குறிகள் கிளியோபாட்ராவின் கையில் தெரிந்தன. அது மரணத்தின் காரணத்தைப் பறைசாற்றியது. எகிப்திய சாம்ராஜ்யத்தின் கடைசி அரசி, தனது இறுதி விருப்பத்தின்படி, தன் காதலனுக்கு அருகிலேயே மீளாத் துயில் கொண்டாள்.

காதலர்கள் மடிந்திருக்கலாம், அவர்களது மேனி புதையுண்டு, மண்ணோடு மண்ணாகியிருக்கலாம். ஆனால், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும், இன்றளவும் அவர்கள் நினைவு கொள்ளப் படுகிறார்கள் என்றால், அவர்களது காதல் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதால்தான். உலக அழகி என்று ஆராதித்த அவளுக்கு, தன் காதலனுக்கு அருகிலேயே அடக்கம் செய்யப் படுவதுதான் வாழ்வின் பயனாகியுள்ளது. அதுதான் காதலின் அழகோ??

கதாநாயகன்  கோட்சே  மறைக்கப்பட்டதொரு வரலாறு!

மகாத்மா என்றழைக்கப்படும் நமது தேசத்தந்தை காந்தியின் செயல்பாட்டின் மீது நான் கற்ற வரலாறுகளின் அடிப்படையில் சிறுவயதிலிருந்தே எனக்குள் எதிர்மறை எண்ணங்கள் தானாகவே தோன்றியதன் காரணம் எனக்கு புரிந்ததேயில்லை. வளர வளர அந்த எதிர்மறை எண்ணங்கள் இன்னும் பக்குவம் அடைந்ததே தவிர மாறவேயில்லை…பெரும்பாலும் உலக வரலாறுகளில் மக்களால் கொண்டாடப்பட்ட தலைவர்களின் தகவல்கள் மட்டுமேகாலம் காலமாக பாதுகாக்கப்பட்டு அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. வரலாற்றில் குறிப்பிடத்தக்க சில எதிர்மறை நிகழ்வுகளை நிகழ்த்தியவர்கள் கெட்டவர்கள் என்ற ஒரே வரியோடு அமுக்கப்பட்டு அவர்கள் தரப்பு நியாயங்களை வரலாற்றின் இன்னொரு பரிமாணத்தில் பார்க்கும் நிகழ்வுகள் அரங்கேறாமலேயே போகிறது. உலகம் முழுக்கவும் இதற்கான உதாரணங்கள் ஏராளம் அடுக்கலாம்.

கோட்சேவின் கடைசி வாக்குமூலத்தை படித்தபிறகு நிஜமாகவே வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வின் இன்னொரு பரிமாணம் காலம் காலமாக மறைக்கப்பட்டிருப்பதாகவே உணர்கிறேன்.

எந்த விஷயமாக இருந்தாலும் அதை அந்தந்த நபர்களின் பார்வையில் அணுகும்போது அதன் பரிமாணங்கள் பலவிதமானதாகவே இருக்கும். இதில் வரலாற்று நிகழ்வுகள் என வரும்போது அதிகாரம் மற்றும் பெரும்பான்மை அடிப்படையிலான பரிமாணம் மட்டுமே அழுத்தம் பெறவைக்கப்படுகின்றன.

காந்தி சுடப்பட்ட நாள்முதல் இன்று வரையிலும்கூட கோட்சேவை ஒரு மனநோயாளியாக, சைக்கோவாக எண்ணும் நபர்களும், சித்தரிக்கும் நபர்களும்தான் பெரும்பான்மை சமூகம். கோட்சே கெட்டவன் என்பதும், காந்தி மகாத்மா, தேசத்தந்தை என்பதுவும் அடுத்தடுத்து வந்த தலைமுறைக்கு சிறுவயது முதலே பயிற்றுவிக்கப்பட்ட வரலாற்றின் அடிப்படையிலான எண்ண ஊட்டல்கள் மட்டுமே…!

பிரசித்திபெற்ற தலைவர்களின் இன்னொரு முகத்தையும், அவர்களின் கறுப்பு பக்கங்களையும், அவர்களின் குறைகள் மீதான சுட்டிக்காட்டலையும் தெரிவிக்க விரும்பும் கருத்துக்கள் தேசத்துக்கு எதிரானவையாகவும், கீழ்த்தரமானவையாகவும்… அதன் நபர்கள் தேசபக்தி இல்லாதவர்களாவும் சித்தரிக்கப்படுவதுதான் இங்கே ஆண்டாண்டு காலமாக உறுத்திக்கொண்டிருக்கும் நிகழ்வுகள்…

மகாத்மா காந்தியின் தவறுகளை விமர்சித்து எழுத இங்கே எத்தனை பேருக்கு தைரியமிருக்கிறது என்பது கேள்விக்குறிதான்…

இதே காந்தி ஜெயந்திக்கு டாக்டர் நம்பள்கி எனும் பதிவர் எழுதிய பதிவு…

 

இப்படிப்பட்டதொரு கருத்தை எழுதுவதற்கும், அதை ஆதரிப்பதற்கும் இங்கே எத்தனை பேருக்கு துணிவிருக்கக்கூடும்?…

காந்தியை சுட்டுக்கொன்றதாலேயே பைத்தியம், தேசத்துரோகி என்றெல்லாம் பட்டமளிக்கப்பட்ட கோட்சேவின் உண்மை முகத்தை அறிய அவரின் கடந்தகால வரலாற்றை அறிந்து கொள்வது மிக மிக முக்கியமானதாகும்.

கோட்சே – பிறந்ததும், வளர்ந்ததும்…

மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் பிராமணர் வகுப்பைச்சேர்ந்த வினாயக் வாமன்ராவ் கோட்சே மற்றும் லட்சுமி ஆகியோருக்கு மகனாய்ப்பிறந்தவர்தான் கோட்சே எனப்படும் நாதுராம் வினாயக்ராவ் கோட்சே. ஆரம்பத்தில் அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் ‘’ராமச்சந்திரா’’ என்பதுதான்.

கோட்சே பிறப்பதற்கு முன்பே அவருக்கு முன் பிறந்த மூன்று ஆண் குழந்தைகள் குழந்தைப்பருவத்திலேயே இறந்துபோக, பயந்துபோன கோட்சேவின் பெற்றோர், இது அவர்கள் குடும்பத்தின் ஆண்குழந்தைகள் மீதான ஏதோவொரு சாபம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் கோட்சேவை பெண்குழந்தை போல அலங்கரித்தும், ஆடை அணிவித்தும்தான் வளர்த்திருக்கிறார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தின் பெண் குழந்தைகளுக்கு மூக்கு குத்தி வளையம் அணிவிக்கும் பழக்கவழக்கத்தின்படி பெண்குழந்தைபோல வளர்க்கப்பட்ட கோட்சேவுக்கும் மூக்கு குத்தி வளையம் அணிவித்திருக்கிறார்கள். இதனடிப்படையில் அவருக்கு உருவான பெயர்தான் நாதுராம்… அதாவது ‘’Nathuram’’ என்றால் ‘’Ram with a nose ring’’ என்று அர்த்தமாம்…! கோட்சேவுக்கு தம்பி பிறந்த பிறகுதான் அவருடைய பெற்றோர்கள் பயம் நீங்கி கோட்சேவை ஆண்குழந்தையாக வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஐந்தாம் வகுப்பு வரையிலும் லோக்கல் பள்ளிக்கூடத்தில் பயின்ற கோட்சே, அதன் பின்னர் புனேவிலிருக்கும் தனது உறவினரின் வீட்டில் தங்க நேர்ந்ததால் ஆங்கில வழிக்கல்வி பயின்றிருக்கிறார். தனது பள்ளிப்பருவத்தில் காந்தியின் மீது அளப்பரிய பற்றும், மரியாதையும் வைத்திருந்தவர்தான் இந்த கோட்சே.

பள்ளி படிப்பிலிருந்து வெளிவந்த கோட்சே, தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டது ‘’இந்து தேசிய இயக்கம்’’ மற்றும் ‘’ஆர்.எஸ்.எஸ்’’. இந்த இரு இயக்கங்களும் அப்போதைய காலகட்டத்தில் தீவிரமாய் எதிர்த்து வந்தது ‘’ஆல் இந்தியா முஸ்லீம் லீக்’’கின் பிரிவினைவாத கொள்கையைத்தான். (இதில் அவர் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் உறுப்பினராய் இருந்தவர் என்பது மட்டும் இன்றளவும் அந்த இயக்கத்தால் மறுக்கப்பட்டிருக்கிறது…)

கோட்சே ஹிந்து மகாசபாவுக்காக அக்ராணி என்ற பெயரில் மராத்திய செய்தித்தாள் ஒன்றை ஆரம்பித்து நடத்தியிருக்கிறார். இந்த செய்தித்தாள்தான் பிற்காலத்தில் ஹிந்து ராஷ்ட்டிரா என்று பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. ஹிந்து மகாசபா ஆரம்பத்தில் காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் போன்ற போராட்டங்களுக்கு ஆதரவானதாகத்தான் இருந்திருக்கிறது.

ஆனால் போகப்போக கோட்சேவின் மனநிலையில் காந்தி மீதான எதிர்ப்பு உண்டாகியிருக்கிறது. காந்தி முஸ்லீம்களுக்கு ஆதரவான செயல்களை ஆதரித்து, தேசத்துக்கு விரோதமானவராக கோட்சேவின் சிந்தனையில் பட்டிருக்கிறார். அது சரியா தவறா என்பது கோட்சேவின் கடைசி வாக்குமூலத்தை படிக்கும்போது உங்களுக்கும் புரியலாம்…

ஜனவரி 30, 1948ம் ஆண்டு… மாலை ஐந்தேகால் மணி… மாலைநேர பிரார்த்தனைக்காக சென்றுகொண்டிருந்த காந்தியின் முன்னால் வழிமறித்து நின்றான் நாதுராம் விநாயக்ராவ் கோட்சே…

அதைக்கண்ட ஒரு பெண் கோட்சேயிடம் “Brother, Babu is already late…” என்றுகூறி கோட்சேவை அப்புறப்படுத்தி காந்திக்கு வழி ஏற்படுத்த முயன்றிருக்கிறார். அந்தப்பெண்ணை தள்ளிய கோட்சே, பெரெட்டா எம் 1934 எனும் செமி ஆட்டோமேடிக் பிஸ்டல் மூலம் காந்தியின் மார்பில் மூன்று முறை சுட்டிருக்கிறான். காந்தியின் உயிர் சம்பவ இடத்திலேயே பிரிந்திருக்கிறது. காந்தியை சுட்டபின் கோட்சே அங்கிருந்து ஓடவோ, தப்பிக்கவோ முயற்சிக்கவில்லை.

சுடப்பட்டு இறந்த காந்தியின் உடல்…

மகாத்மாவின் இறுதி ஊர்வலம்…

எரியூட்டப்படும் மகாத்மா…

மகாத்மாவின் அஸ்தி…

தொடர்ந்து நடந்த வழக்கில் நவம்பர் 8, 1949ம் ஆண்டு கோட்சேவுக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு, ஒரு வாரத்திற்குள்ளாகவே, அதாவது 1949ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி கோட்சேவும், குற்றத்துக்கு உடந்தையாய் இருந்ததாக நாராயண் அப்த்தே என்பவரும் தூக்கிலிடப்பட்டார்கள். இதில் காந்தியின் இரு மகன்கள் கோட்சேவை தூக்கிலிடுவது மகாத்மாவின் அஹிம்சை கொள்கைக்கு எதிரானது என்று கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்க செய்தி…

கோட்சேவின் கடைசி வாக்குமூலத்தை படிக்கும் முன் நாம் அறிந்து கொள்ள வேண்டிய இன்னும் சில செய்திகள்…

காந்தி சுடப்பட்டவுடன், கோட்சேவை அடிக்கப்பாய்ந்த கூட்டத்தினரிடம் சாகும் தருவாயிலும் ‘’அவனை ஒன்றும் செய்யாதீர்கள்… விட்டுவிடுங்கள்…’’ என்று சொன்னதாய் பரவிக்கிடக்கும் பழைய செய்தி முற்றிலும் பொய்.

காந்தி சுடப்பட்டு இறந்தபோது ‘’ஹே ராம்’’… என்று கடைசியாய் சொன்னதாக கூறப்படுவதும் பொய் என்றும், அது காந்தியை புனிதமானவராக, தெய்வீகமானவராக செய்தி பரப்ப அரசாங்கம் உருவாக்கிய கதையே என்றும் கோட்சேவின் சகோதரர் மறுத்திருக்கிறார். டைம் பத்திரிக்கைக்கு அளித்த ஒரு பேட்டியில் கோட்சேவின் சகோதரர் தெரிவித்திருந்தது இதுதான்… ‘’சிலர் என்னிடம் காந்தி சுடப்பட்டபோது ஹே ராம் என்று கூறினாரா என்று கேட்டார்கள். நான் அவர்களிடம் அது கிங்ஸ்லி(காந்தியாக நடித்தவர்) கூறியது. காந்தி கூறியது இல்லை. ஏனென்றால் காந்தி சுடப்பட்ட சம்பவம் நாடகமில்லை…என்று கூறினேன்’’…

கோட்சேயின் வரலாற்றை எழுதிய சில புத்தகங்கள் இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டிருக்கின்றன… அவை…

  • Gandhi Vadh aur Main (Gandhi Hatya Aani Me), by Gopal Godse (1967)
  • May it Please your Honor!, published by Surya Bharti, India, (2003) – the play based upon the book was banned
  • Why I assassinated Mahatma Gandhi, published by Surya Bharti (1993)
  • Nine Hours to Rama, Stanley A. Wolpert (1962)

கோட்சேவின் வழக்கில் நீதிபதியாக இருந்தவர்களில் ஒருவர் பின்னாளில் எழுதியிருந்த ஒரு புத்தகத்தில் ‘’கோட்சேவின் கடைசி வாக்குமூலத்தை கேட்டபிறகு, அங்கு கூடியிருந்த கூட்டத்தை நீதி வழங்குமாறு பணித்திருந்தால் அவர்கள் நிச்சயம் கோட்சேவை நிரபராதி என்றே நீதி வழங்கியிருப்பார்கள்…’’ என்றிருக்கிறார்.

நவம்பர் 8, 1948ம் வருடம்… நாதுராம் கோட்சே தனது வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் எடுத்துரைத்த நாள். நீதி மன்றத்தில் பதற்றமில்லாமல் தான் ஏன் காந்தியைக்கொன்றேன் என்பதை விவரித்திருக்கிறார். தொண்ணூறு பக்கங்கள் அடங்கிய அவருடைய கருத்தை ஐந்து மணி நேரம் நின்று கொண்டே படித்திருக்கிறார். அந்தக்கடைசிவாக்குமூலத்தில் கோட்சே கூறியிருந்ததன் சுருக்கம் காந்தியை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் அனைவரும் படித்து தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு முக்கிய விஷயமாகவே தோன்றுகிறது…

கோட்சே நீதிமன்ற விசாரணையின்போது…

கோட்சே மற்றும் அவருடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்ற விசாரணையின் போது…

கோட்சேவின் கடைசி வாக்குமூலம்…

“தெய்வ பக்தியுள்ள பிராமணக் குடும்பத்தில் நான் பிறந்தேன். இந்துவாகப் பிறந்ததில் பெருமைப்படுகிறேன். நான் வளர வளர என் மதத்தின் மீது எனக்கு மிகுந்த பற்றுதல் ஏற்பட்டது. ஆனால் எனக்கு எவ்வித மூட நம்பிக்கையும் ஏற்படவில்லை. தீண்டாமை ஒழியவும்,சாதி ஒழியவும் பாடுபட்டேன். எல்லா இந்துக்களையும் சமமாக நடத்த வேண்டும், அவர்களுக்கு இடையே உயர்வு, தாழ்வு கற்பிக்கக் கூடாது என்று வற்புறுத்தி வந்துள்ளேன்.

சுவாமி விவேகானந்தர், திலகர், கோகலே, தாதாபாய் நவ்ரோஜி போன்றோர் எழுதிய நூல்களை படித்திருக்கிறேன். இந்தியாவின் வரலாற்றைப் படித்திருக்கிறேன். இங்கிலாந்து, பிரான்சு, அமெரிக்கா,ரஷியா போன்ற நாடுகளின் வரலாறுகளையும் படித்திருக்கிறேன். மகாத்மா காந்தி எழுதிய நூல்களையும், வீரசவர்க்கார் எழுதிய நூல்களையும் ஆழமாகப் படித்திருக்கிறேன். அவர்கள் பேச்சையும் நான் கேட்டிருக்கிறேன். என்னுடைய எண்ணமும், செயலும் இயங்க அவை எனக்கு உறுதுணையாக இருந்தன. இவைகளைப் படித்ததால் இந்து மதத்தில் நம்பிக்கையும், அழுத்தமான பிடிப்பும் ஏற்பட்டன. இந்து சமயத்திற்கும், இந்துக்களுக்கும் தொண்டு செய்வதே முதல் கடமை என்று எண்ணினேன். முப்பது கோடி இந்துக்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். மனித இனத்தின் ஐந்தில் ஒரு பங்கு இந்துக்களின் மத சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கடமை உணர்வு ஏற்பட்டது.

1946ல் முகமதியர்களின் கொடுமை சொல்லொணாத துயரத்தைத் தந்தது. அரசாங்கத்தின் ஆதரவும் அவர்களுக்கு இருந்தது. நவகாளியில் நடந்த நிகழ்ச்சிகள் எங்கள் ரத்தத்தைக் கொதிப்படையச் செய்தன. அத்தகைய கொடுமைகள் புரிந்த முஸ்லிம்களை மகாத்மா காந்தி ஆதரித்தார். அதுமட்டுமல்ல டெல்லியில் ஒரு இந்துக் கோவிலில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் “குர்ஆன்” வாசகங்களைப் படிக்கச் செய்தார். முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் மசூதியில் பகவத் கீதையை மகாத்மா காந்தியால் படிக்க முடியுமா?

1947ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ந்தேதி விளக்குகள் அலங்காரத்துடன் நாடெங்கும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட அதே நாளில் பஞ்சாபில் இந்துக்கள் உடைமைகளை முஸ்லிம்கள் தீக்கு இரையாக்கினார்கள். இந்துக்களின் ரத்தம், பஞ்சாப் ஆற்று நீரில் கலந்தோடியது. மேற்கு பாகிஸ்தானில் இருந்த சிறுபான்மை இந்துக்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். அதேபோல கிழக்குப் பாகிஸ்தானில் இருந்த முகமதியர்களும் நடந்து கொண்டனர். 11 கோடி மக்கள் வீடு இழந்தனர். இவ்வளவு நடந்தும் மகாத்மா காந்தி, “முகமதியர்களின் செயலில் ஒரு களங்கமுமில்லை” என்று பரிந்து பேசினார். என் ரத்தம் கொதித்தது. இனிமேல் நான் பொறுமையாக இருக்க முடியாத சூழ்நிலை உருவானது. காந்தியடிகளை கடுமையான வார்த்தைகளால் நான் தாக்க விரும்பவில்லை. அவருடைய கொள்கையும், மார்க்கத்தையும் முழுவதாக நிராகரிப்பதாகச் சொல்ல விரும்பவில்லை. பிரிட்டிஷ்காரர்கள், நம்மிடையே பிரிவினையை உண்டாக்கி, சுகமாக நம் நாட்டை ஆண்டு வந்தபோது, மகாத்மா காந்தி அதை எதிர்த்துப் போராடி பெரும் வெற்றியை நமக்குத் தந்தவர் என்பதை நான் மறுக்கவில்லை; அதற்காக அவரைப் பாராட்டுகிறேன். ஆனால் இந்தியா பிரிக்கப்படுவதற்குக் காரணமாகவும், துணையாகவும் இருந்தவர் அவர். அதனால் அவர் இன்னும் நாட்டில் இருந்தால், இந்தியாவிற்குத் துன்பமும், இழப்பும் ஏற்படும். முஸ்லிம்களின் ஆதிக்கத்திற்கும்,அட்டூழியத்திற்கும் பக்கபலமாக இருப்பார் என்பதை உணர்ந்து கொண்டேன்.

நல்லதோ, கெட்டதோ அவர் எடுக்கும் முடிவினையே இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பிடிவாதம் அவரிடம் காணப்பட்டது. இந்தியா அவருடைய தலைமையை நாடினால் அது நம் நாட்டை எங்கேயோ கொண்டுபோய்ச் சேர்த்துவிடும். அவரே இங்கு உள்ள எல்லாவற்றையும் இயக்குபவர்; ஒரு நீதிபதி என்றும் கூறலாம். “சத்தியாக்கிரகம்” என்றும் அழியாது என்பது அவர் அறிந்த சூத்திரம். காந்திஜியே தன் செயல்களுக்குத் தாமே வழக்கறிஞரும், நீதிபதியும் எனலாம். அவரது அரசியல், பகுத்தறிவு இல்லாதது எனப் பெரும்பாலானோர் நினைத்தனர். அவர்கள் காங்கிரசில் இருந்து வெளியேற வேண்டும்; அல்லது அவர்களது அறிவுடைமயைக் காந்தியடிகளின் காலடியில் சமர்ப்பித்துவிட்டு சரண் அடைய வேண்டும்; பிறகு அவர் விரும்பியபடி செயல்புரிய விடவேண்டும். அவர் கண்டதோ, தோல்வி மேல் தோல்வி; அழிவு மேல் அழிவு. 33வருடம் அரசியல் வாழ்வில் அவருடைய அரசியல் வெற்றி என்று எதையும் கூறமுடியாது. காந்தி வழி நடந்தால் நாம் அழிவைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும். கைராட்டை, அகிம்சை, உண்மை எனக் கூறிக்கொண்டு புரட்சிகரமான கருத்துக்கும் எதிராக இருப்பார். 34வருடம் கழிந்த பிறகு கை ராட்டையைத்தான் அவர் தந்தார்.

ஜின்னாவின் இரும்புப்பிடி, எக்கு உள்ளத்தின் முன் காந்திஜியின் ஆத்ம சக்தி, அகிம்சைக் கொள்கை அனைத்தும் தவிடு பொடியாகிவிட்டன. ஜின்னாவிடம் தம் கொள்கை ஒருக்காலும் வெற்றி பெறாது என்று தெரிந்திருந்தும் அவர் கொள்கையை மாற்றிக் கொள்ளாமலேயே இருந்தார் தம் தோல்வியையும் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. மற்ற மேதைகள் ஜின்னாவுடன் பேசி அவரை முறியடிக்கவும் வழிவிடவில்லை. இமயமலைப் போன்ற பெரிய தவறுகளைச் செய்த வண்ணம் இருந்தார். நாட்டைப் பிளந்து துண்டு துண்டாக்கியவரைத் “தெய்வம்” என மற்றவர் மதித்தாலும் என் உள்ளம் ஏனோ அவ்வாறு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, அவர் மீது கோபம்தான் வருகிறது. காந்தியைக் கொன்றால் என் உயிரும் போய்விடும் என்பதை அறிவேன். சிறிதும் சந்தேகம் இல்லாமல் என் எதிர்காலம் பாழாய்ப்போவது உறுதி. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலிருந்தும் அட்டூழியத்திலிருந்தும் இந்தியா விடுதலையடையும் என்பது என்னவோ உறுதியாகும்.

மக்கள் என்னை “முட்டாள்” என்று அழைக்கலாம். அறிவில்லாமல் அண்ணல் காந்தியடிகளைக் கொன்றதாகக் கூறலாம். நம் இந்தியா ஒரு பலமுள்ள நாடாகவும், சுதந்திர நாடாகவும் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம். நம் நாடு வல்லரசாகத் திகழவேண்டுமானால்,காந்தியடிகளின் கொள்கையை நாம் கைவிடவேண்டும். அவர் உயிரோடிருந்தால் நாம் அவர் கொள்கைகளிலிருந்து மாறுபட்டுச் செயல்பட முடியாது. நான் இந்த விஷயத்தை நன்கு அலசி ஆராய்ந்த பிறகே அவரைக் கொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஆனால் நான் அதுபற்றி யாரிடமும் பேசவில்லை. எந்த வகையான யோசனையையும் எவரும் சொல்லவில்லை. பிர்லா மாளிகையில் பிரார்த்தனை மைதானத்தில் 30-1-1948ல் மகாத்மா காந்தியைச் சுட என் இரு கைகளுக்கும் வலிமையை நான் வரவழைத்துக்கொண்டேன். இனி நான் எதையும் சொல்வதற்கில்லை. நாட்டின் நலனிற்காகத் தியாகம் செய்வது பாவம் எனக் கருதினால் நான் பாவம் செய்தவனாவேன். அது கவுரவம் என்றால் அந்த கவுரவம் எனக்கு வரட்டும்.

நேதாஜி விடுதலைப்போரில், வன்முறையை ஆதரிப்பவர்களை மட்டும் காந்திஜி எதிர்த்தார் என்பதில்லை. அவருடைய அரசியல் கருத்துக்கு எதிரான கருத்துக்கள் உடையவர்களையும் வெறுத்தார். அவருடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீது அவருக்கு இருந்த வெறுப்புக்கு சுபாஷ் சந்திரபோஸ் ஓர் எடுத்துக்காட்டு. காங்கிரசில் இருந்து சுபாஷ் சந்திரபோஸ் தூக்கி எறியப்படும் வரை, காந்திஜியின் வன்மம் முற்றிலும் அகலவில்லை. சுபாஷ் சந்திரபோஸ் 6 ஆண்டுகள் நாடு கடத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டதை எதிர்த்து எனக்குத் தெரிந்தவரை காந்திஜி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. மற்ற எந்த தலைவர்களையும் விட நேதாஜியை மக்கள் விரும்பினர். 1945_ல் ஜப்பானியர் தோல்விக்குப்பிறகு சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்குள் நுழைந்திருந்தால், இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக அவரை வரவேற்று இருப்பார்கள். ஆனால் காந்தியின் அதிர்ஷ்டம் சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்கு வெளியில் இறந்துவிட்டார்.

முஸ்லிம்கள் மீது காந்திஜி அதிகமான மோகத்தை வளர்த்துக்கொண்டார். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக ஓடிவந்த இந்துக்கள் மீது இரக்கப்பட்டு ஆறுதலாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மனிதாபிமானம் பற்றி அவருக்கு ஒரு கண்தான் இருந்தது. அது முஸ்லிம் மனிதாபிமானம். காந்திஜிக்கும்,எனக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எவ்வித பகையும் இருந்தது இல்லை. காந்திஜி மீது நான் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளக் காரணம், நம் நாட்டின் மீது நான் கொண்டிருந்த பக்திதானே தவிர வேறு ஒன்றும் இல்லை.

பாகிஸ்தான் நிறுவப்பட்ட பிறகாவது, பாகிஸ்தானில் வாழும் இந்துக்களின் நலனைக்காக்க இந்த காந்தீய அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால், என் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியும். ஆனால், விடியும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியைக் கொண்டு வந்தது. 15 ஆயிரம் சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். அந்த இந்துப்பெண்கள் சந்தைகளில் ஆடுமாடுகள் விற்கப்படுவதுபோல விற்கப்பட்டனர். இதனால் இந்துக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவை நோக்கி ஓடிவந்தனர். இந்தியாவை நோக்கி வந்த இந்திய அகதிகள் கூட்டம்,நாற்பது மைல் நீளத்துக்கு இருந்தது. இந்தக் கொடிய நிகழ்ச்சிக்கு எதிராக இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? அவர்களுக்கு விமானத்தில் இருந்து ரொட்டித் துண்டுகள் போடப்பட்டன. அவ்வளவுதான்.

“தேசத்தந்தை” என்று காந்தி அழைக்கப்படுகிறார். அது உண்மையானால் அவர் ஒரு தந்தைக்குரிய கடமையிலிருந்து தவறிவிட்டார். பிரிவினைக்கு (பாகிஸ்தான் அமைப்புக்கு) சம்மதம் தெரிவித்ததன் மூலம் இந்த தேசத்துக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார். பிரிவினைக்கு காந்திஜி சம்மதித்ததால் அவர் இந்தியாவின் தேசத்தந்தை அல்ல; பாகிஸ்தானின் தேசத்தந்தை என்று நிரூபித்து விட்டார். பாகிஸ்தான் பிரிவினைக்கு நாம் இணங்கியிருக்காவிட்டால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது என்று சிலர் கூறுவது தவறான கருத்து. தலைவர்கள் எடுத்த தவறான முடிவுக்கு அது வெறும் சாக்குப்போக்காகவே எனக்குத் தோன்றுகிறது. 1947 ஆகஸ்டு 15ந்தேதி பாகிஸ்தான் சுதந்திர நாடானது எப்படி? பஞ்சாப், வங்காளம், வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து முதலிய பகுதி மக்களின் உணர்வுகளுக்கும்,கருத்துக்களுக்கும் எந்த மதிப்பும் தராமல் பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரிக்கக்கூடாத பாரதம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியில் மதவாத அரசு நிறுவப்பட்டது. முஸ்லிம்கள் தங்கள் தேச விரோத செயல்களுக்கு வெற்றிக்கனியை பாகிஸ்தான் வடிவில் பெற்றனர்.

பட்டப்பகலில் சுமார் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்திஜியை நான் சுட்டேன். அது உண்மை. சுட்ட பிறகு ஓடுவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. தப்பி ஓடும் எண்ணமும் எனக்கு இல்லை. என்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயலவில்லை. கொலை பற்றி நீதிமன்றத்தில் என் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்கவே விரும்பினேன். மரியாதைக்குரிய நீதிமன்றம் எனக்கு எந்த தண்டனையையும் விதிக்குமாறு கட்டளையிடலாம். என் மீது கருணை காட்டவேண்டும் என்றும் நான் கேட்கவில்லை. பிறர் என் சார்பாக கருணை வேண்டுவதையும் நான் விரும்பவில்லை. “கொலைக்கு நானே பொறுப்பு” என்னோடு பலர் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். கொலைக்கு சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நான் முன்பே கூறியபடி என் செயலுக்கு கூட்டாளிகள் யாரும் கிடையாது. என் செயலுக்கு நானே முழுப்பொறுப்பு. அவர்களை என்னோடு குற்றம் சாட்டி இருக்காவிட்டால் எனக்காக எந்த எதிர்வாதமும் செய்திருக்கமாட்டேன். வீரசவர்க்காரின் தூண்டுதலில் நான் செயல்பட்டேன் என்று கூறுவதை நான் ஆணித்தரமாக மறுக்கிறேன். அது என் அறிவுத்திறனுக்கு ஏற்படுத்தும் அவமதிப்பாகக் கருதுகிறேன். 1948 ஜனவரி 17ந்தேதி சவர்க்காரை பார்த்தோம் என்றும் அவர் “வெற்றியோடு திரும்புங்கள்” என்றும் வாழ்த்தி வழியனுப்பினார் என்று கூறுவதையும் மறுக்கிறேன்.

படத்திலிருப்பது நாதுராம் கோட்சே மற்றும் அவருடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள்…

நின்று கொண்டிருப்பவர்கள்- இடமிருந்து வலம்- சங்கர் கிஸ்தையா, கோபால் கோட்சே(கோட்சேவின் தம்பி), மதன்லால் பாவா, திகாம்பர் பட்கே(அப்ரூவர்)… 

அமர்ந்திருப்பவர்கள்- இடமிருந்து வலம்- நாராயண் அப்தே, விநாயக் சாவர்க்கர், நாதுராம் கோட்சே, விஷ்ணு கர்காரே… 

இந்து மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட்டேன் என்ற மன நிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது. மானிட வர்க்கத்தின் நலனுக்காகவே இந்தச் செயலை செய்தேன். இந்தச் செயல் முற்றிலும் இந்து தர்மத்தையும், பகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டதுதான். நம் நாடு “இந்துஸ்தான்” என்ற பெயரில் இனி அழைக்கப்படட்டும். இந்தியா மீண்டும் ஒரே நாடாக வேண்டும். இந்திய வரலாற்றை எவ்வித பாரபட்சமும் இன்றி நேர்மையாக எழுதக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள் எதிர்காலத்தில் உருவானால், அவர்கள் என் செயலை மிகச்சரியாக ஆராய்ந்து, அதிலுள்ள உண்மையை உணர்ந்து, உலகறியச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”

இதுதான் கோட்சேவின் கடைசி வாக்குமூலமும், காந்தியின் மரணத்தின் மீதான குற்றவாளித்தரப்பின் மற்றொரு பரிமாணமும்.

கோட்சேவின் வாக்குமூலத்தில் இருக்கும் ஒவ்வொரு கருத்துக்களும் அவர் பைத்தியமோ, சைக்கோவோ இல்லை என்பதற்கும், அவர் பிறரால் மூளைச்சலவை செய்யப்பட்டு காந்தியைக்கொன்றவரில்லை என்பதற்கும்… அவரின் கடைசி வாக்குமூலத்தில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளுமே சாட்சி என்பது நானறிந்த விஷயம்…

மற்றபடி இது தேவையற்ற வரலாறு என்று நினைப்பவர்களுக்கு இது தேவையற்றதுதான்…

“Godse” என்ற பெயரின் ஆங்கில எழுத்துக்களுக்குள் “God” என்று கடவுளும் ஒளிந்திருப்பது ஆச்சரியம்தான்…!!!

நன்றி – நான் தகவல்களை அலசிய பல்வேறு இணையதளங்களுக்கும் மற்றும் கோட்சேவின் வாக்குமூலத்தை சுருக்கமாய் எழுதிய ஆசிரியர்களுக்கும்…

சே குவேரா வாழ்க்கை வரலாறு

Che-Guevara-after-the-battle-of-santa-claraChe-GuevaraChe-Guevara-at-cbn

கியூபா வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட மாவீரன் 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் ஆர்ஜென்டீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் ஏர்னெஸ்டோ குவேரா லின்ஞ், சிசிலியா டெ ல செர்னா தம்பதியர்களுக்கு முதல் மகனாக பிறக்கின்றார். அவர்கள் தங்களுக்கு பிறந்த தலைப்பிள்ளையை முத்தமிட்டு மகிழ்ந்தனர். அளவற்ற மகிழ்ச்சிக்கு அடையாளமாக தங்களது பெயர்களின் பாதியை இணைத்து “ஏர்னெஸ்டோ குவேரா டி ல செர்னா” என பெயர் சூட்டினர்.அப்போது குவேரா தம்பதிக்கு தெரிந்திருக்கவில்லை தனது மகனுக்கு வரலாற்றில் வேறு பெயர் பதிவு செய்யப்படும் என்பது. சேவிற்கு குறையற்ற விதத்தில் குழந்தை பருவம் அமைந்தது. சொந்தமாக மூலிகை தேயிலை பண்ணையிருக்குமளவு வளமானது ஏர்னெஸ்டோவின் குடும்பம்.
இவர் ஒரு சிறந்த “ரக்பி” விளையாட்டு வீரர். ஆடுகளத்தில் பின்னிருந்து ஆடும் தடுப்பாட்டக்காரனின் நிலையிலேயே பெரும்பாலும் விளையாடுவார்.. இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை “பூசெர்” என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு “பன்றி” என்னும் பொருளுடைய சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு.
வாழ்நாள் முழுவதும் இவர் கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். அப்போதே கவிதை எழுதுவதில் ஆர்வமுடையவராக இருந்தார். வளரிளம் பருவத்தில் பாப்லோ நெருடாவின் வார்த்தை அலைகள், ‘சே’வின் இதயத்தை மிகவும் பரவசப்படுத்தின. நெருடாவின் பெரும்பாலான கவிதைகளை மனப்பாடமாக ஒப்பிக்கும் அளவுக்கு ஈடுபாடு.

குவேராவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தன. நூல்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்துக்கு இது ஒரு காரணம் எனலாம். இவற்றுள், கார்ல் மார்க்ஸ், போல்க்னர், வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்குச் சிறப்பான ஆர்வம் இருந்தது. இவை தவிர ஜவஹர்லால் நேரு, லெனின் போன்றவர்களது நூல்களையும், பிரான்ஸ், ஏங்கெல்ஸ், வெல்ஸ், புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார். வசிப்பதோடு மட்டும் நின்று விடாமல் எழுத்தாளராக வேண்டும் என்ற கனவு அவரிடம் கனன்றுகொண்டு இருந்ததால், தன்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் தொகுப்பாக்கி, பின் பகுத்துப் பார்க்கும் தன்மையும் அவரிடம் இருந்தது.

அவரது வயது அதிகரித்த போது, அவருக்கு இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களான குயிரோகா, அலெக்ரியா, இக்காசா, டாரியோ, ஆஸ்டூரியாஸ் போன்றோருடைய ஆக்கங்களின் பால் ஈடுபாடு ஏற்பட்டது. செல்வாக்கு மிக்க தனி நபர்களின் கருத்துருக்கள், வரைவிலக்கணங்கள், மெய்யியற் கருத்துக்கள் போன்றவற்றை எழுதிவந்த குறிப்புப் புத்தகத்தில் இவர்களுடைய கருத்துக்களையும் அவர் குறித்து வந்தார். இவற்றுள், புத்தர் , அரிஸ்ட்டாட்டில் என்போர் பற்றிய ஆய்வுக் குறிப்புக்கள், பேட்ரண்ட் ரஸ்ஸலின் அன்பு, தேசபக்தி என்பன குறித்த ஆய்வு, ஜாக் லண்டனின் சமூகம் பற்றிய கருத்துக்கள், நீட்சேயின் இறப்பு பற்றிய எண்ணங்கள் என்பனவும் அடங்கியிருந்தன. சிக்மண்ட் பிராய்டின் ஆக்கங்களாலும் கவரப்பட்ட சே குவேரா அவரைப் பல வேளைகளில் மேற்கோள் காட்டியுள்ளார்.

1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, புவனஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் ஈருளியில் தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். தென் அமெரிக்கா முழுக்கத் தொழுநோய் பீடித்தி ருந்த காலம். அது குறித்து ஆய்வு செய்யவும், அதற்குத் தங்களால் எதுவும் மருந்து கண்டுபிடிக்க முடியுமா என்ற தேடலுமே அந்தப் பயணத்துக்கான ஆரம்பம்.

பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. தொழுநோயாளிகளின் தங்குமிடங்களைத் தேடித் தேடிச்சென்று, அவர்களின் தோளில் கை போட்டு உண்டு, உறங்கி, கால் பந்தாடிய ‘சே’வின் உள்ளத்தில் பலவிதமான போராட்டங்கள் தொழு நோயாளர்களிடம் அவர் காட்டிய பரிவு மற்ற மனிதர்களிடம் இருந்து அவரை பிரித்துக் காட்டியது.

இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி “மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்” என்னும் தலைப்பில் உடன் பயணித்த கிரனாடோவால் எழுதப்பட்ட புத்தகம் உலகப் பிரபல்யம் பெற்றது இந்த புத்தகத்தை அடிப்படையாக வைத்து பின்னர் 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும்
பெற்றது.சேவின் வாழ்வை முழுவதுமாக புரட்டிப் போட்ட பயணம் அது. இதுவரையும் அவரின் மேல் புரட்சியின் எந்த சிறுநிழலும் விழுந்திருக்கவில்லை. புத்தக வாசிப்பு, நண்பர்கள், விளையாட்டு என அவரது உலகம் உல்லாசமாக இருந்தது. ஆனால் இந்த பயணம் அவருக்கு பல படிப்பினைகளை தந்தது. தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும் மக்களின் ஏழ்மை, பிணி, அறியாமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு, வர்க்க வேறுபாடுகளுக்குக் காரணமாக அமெரிக்காவும் அவர்களது சி.ஐ.ஏ. உளவு நிறுவனமும் செயல்படுவதை அறிந்தார். லத்தீன் அமெரிக்க நாடுகளில் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அனைத்துக்கும் வாஷிங்டனும் அதன் முதலாளித்துவமும் மட்டுமே காரண மாகக் கண்டறிந்தார்.

இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக மார்க்க்சியம் (Marxism) அவர் சிந்தனையில் தோன்றியது. மார்க்சியம் என்றால் மார்க்சியம் என்பது கார்ல் மார்க்கஸ் போன்ற மேய்யியலாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கை ஆகும். மார்க்சியம் என்பது கார்ல் மார்க்ஸ், மற்றும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் ஆகிய மெய்யியலாளர்களின் ஆய்வுகள், எழுத்துக்கள் போன்றவற்றின் மூலம் வெளிப்படுத்தப்படும் உலகப்பார்வை ஆகும். மார்க்சியம், பொருளியல், அரசியல், மெய்யியல் கோட்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அடிப்படையில் மார்க்சியமானது, இயங்கியல் பொருள் முதல்வாத கருத்தியலின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட மெய்யியலாகும்.
மெய்யியல்கள் எல்லாம் உலகை விளக்குவதையே தமது தன்மையாக கொண்டிருக்க, புரட்சி மூலம் உலகை மாற்றியமைப்பது பற்றி பேசுவதால், மார்க்சியம் உலகில் நிகழும் பல்வேறு போராட்டங்களுக்கும் புரட்சிகளுக்கும் அடிப்படை சித்தாந்தமாக அமைகிறது. இதனை பொது உடமை என்றும் வரையறுக்கின்றார்கள்.
இலகுவாக சொல்வது என்றால் சமவுடமை (சோசலிசம்) பொருளாதார நிர்வாகத்தில் கூடிய அரச பங்களிப்பை வலியுறுத்துகின்றது. முக்கிய துறைகள் அரசுடமையாக இருப்பதையும், சமத்துவத்துவை அல்லது சம வாய்ப்புக்களை நிலை நிறுத்தும் கொள்கைகளையும், பொது பொருளாதார நீரோட்டத்தின் விளிம்பில் வாழும் மக்களின் வாழ்க்கை தர உயர்வுக்கு உதவும் வழிமுறைகளையும் வலியுறுத்துகின்றது. மேலும், சோசலிச சிந்தனைகள் பொது நலம், கூட்டு செயற்பாடு ஆகிவற்றை முன்நிறுத்தி அமைகின்றன. பொதுவுடமை அல்லது கம்யூனிசம் வர்க்கமற்ற (பாகுபாடற்ற) சமுதாயத்தை அமைப்பதற்கு தேவையான கோட்பாடுகள் கொண்ட தத்துவம் ஆகும். ஏகாதிபத்திய, முதலாளித்துவ தத்துவங்களின் குறைபாடுகளுக்கான ஒரு தீர்வாகும்.
இந்தகொள்கை தொடர்பான அறிவு சேவிற்கு வரக் காரணம் நூல்கள் மட்டுமன்றி இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே மார்க்சியம் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார். இதனால், ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசு வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது.

இறுதியாக 1952, ஜூலை மாதம் அந்த பயணம் முடிவுக்கு வந்தபோது, ‘சே’ முழுவதுமாக மாறியிருந்தார். இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்கா என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது. ஆர்ஜென்டீனாவுக்குத் திரும்பிய சேகுவேரா தனது படிப்பை முடித்து 1953 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ டிப்ளோமாப் பட்டம் பெற்றார்.
1953 ஜூலையில் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்றதும் அங்கிருக்கப் பிடிக்காமல், மீண்டும் பயணமொன்றைத் தொடங்கிய சேகுவேரா, இம்முறை பொலீவியா, பெரு, ஈக்குவடோர், பனாமா, கொஸ்தாரிக்கா, நிக்கராகுவா, ஹொண்டூராஸ், எல் சல்வடோர் ஆகிய நாடுகளுக்குச் சென்றார்.

அதே ஆண்டு டிசம்பரில் சேகுவேரா குவாதமாலாவுக்குச் சென்றார். அங்கே மக்களாட்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய குடியரசுத் தலைவர் ஜாக்கோபோ ஆர்பென்ஸ் குஸ்மான் என்பவர் நிலச் சீர்திருத்தங்களின் மூலமும் பிற நடவடிக்கைகளாலும் பெருந்தோட்ட முறையை ஒழிப்பதற்கு முயன்று கொண்டிருந்தார்.உண்மையான புரட்சியாளனாக ஆவதற்குத் தேவையான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் குவேரா, குவாத்தமாலாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார். ஏற்கெனவே அவருக்குள் உருவாகியிருந்த அமெரிக்கா மீதான கோபத்தை குவேதமாலாவின் அரசியல் சூழல் அதிகப்படுத்தியது. குவேதமாலா கம்யூனிஸ்ட் ஆதரவு அரசைக்கவிழ்க்க, அமெரிக்கா தன் சி.ஐ.ஏ. மூலமாக தீவிரமாகச் செயல்பட்ட தருணம்.

குவாத்தாமாலா நகரில், ஹில்டா கடேயா அக்கொஸ்தா என்னும் பெண்ணின் பழக்கம் கிடைத்தது. இவரையே பிற்காலத்தில் சே திருமணம் புரிந்தார் இவர் பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியலாளரும், இடதுசாரிச் சார்புள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு என்னும் இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார். இதனால் அவருக்கு அரசியல் மட்டத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன. இவர் ஆர்பென்சின் அரசாங்கத்தின் பல உயரதிகாரிகளைச் சேகுவேராவுக்கு அறிமுகப்படுத்தினார். அத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களும், கியூபாவைவிட்டு வெளியேறி வாழ்ந்துவந்தவர்களுமான தொடர்புகளும் சே குவேராவுக்குக் கிடைத்தன. இக்காலத்திலேயே “சே” என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது.என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட ஆர்ஜெண்டீனச் சொல்லாகும்.

சே’, அங்கிருந்த கம்யூனிஸ்ட்களுடன் தன்னை இணைத் துக்கொண்டு, அமெரிக்காவுக்கு எதிரான வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார். ஆனால், அமெரிக்கா தனது எண்ணத்தைச் சுலபமாக நிறை வேற்றி ஜேக்கப் அர்பான்சோ அரசைக் கவிழ்த்தது.1954ம் ஆண்டு ஜூன் மாதம் குவாத்தாமாலாவை முற்றுகையிடும்போது தப்பியோடும் நிலை ஏற்பட்டு மெக்ஸிகோவில் தஞ்சம் புகுந்தவர் நாடு கடத்தப்பட்ட கியூபா மக்களைச் சந்தித்தார். இக்காலகட்டங்களில் கம்யூனிஸ்ட்களிடம் நெருங்கிப் பழகிய ‘சே’, மார்க்ஸிய லெனினியப் பாதை தான் தனது பாதை என்பதை உணர்ந்தார். அது குறித்த ஆய்வுகளையும் அவர் மேற்கொண்டார்.

விவசாயிகளிடம் குவேதமாலா அரசு, ஆயுதங்களைக் கொடுத்துப் போராட்டத்தில் ஈடுபடச் செய்திருந்தால் அமெரிக்காவின் சதியை முறியடித்திருக்கலாம் எனும் பார்வையில், ‘சே’ கட்டுரைகள் எழுதினார். இதனால் சி.ஐ.ஏவின் பார்வைக்கு இலக்கானார். பாதுகாப்புக்காக அர்ஜென்டினா தூதரகத்தில் தங்கநேரிட்டது.இச்சமயத்தில், அவரது எண்ணங்களால் ஒரு கியூபா போராளி வசீகரிக்கப்பட்டார். அவர் பெயர் நிக்கோ லோபஸ். கியூபாவின் ஜனாதிபதியாக இருந்த பாடிஸ்ட்டாவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமையில் ஒரு புரட்சி ஏற்படுத்திய ‘ஜூலை 26’ எனும் இயக்கம் அப்போதுதான் தோல்வியைச் சந்தித்திருந்தது.இச்சமயத்தில், அவரது எண்ணங்களால் ஒரு கியூபா போராளி வசீகரிக்கப்பட்டார். அவர் பெயர் நிக்கோ லோபஸ். கியூபாவின் ஜனாதிபதியாக இருந்த பாடிஸ்ட்டாவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமையில் ஒரு புரட்சி ஏற்படுத்திய ‘ஜூலை 26’ எனும் இயக்கம் அப்போதுதான் தோல்வியைச் சந்தித்திருந்தது.

1953ம் ஆண்டு இதே நாள் கியூபாவில் கொடுங்கோல் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த பாடிஸ்டா தலைமையிலான அரசைத் தூக்கி எறிவதற்காக புரட்சிக்குத் தேவையான ஆயுதங்களைப் பெறுவதற்காக பிடல் அவரது சகோதரர் ரால் காஸ்ட்ரோ உள்ளிட்ட 120 வீரர்கள் சாண்டியாகோ கியூபாவில் அமைந்திருந்த மொன்காடா இராணுவத் தளத்தை தாக்குவதற்கு திட்டம் தீட்டினர்.1953ம் ஆண்டு ஜூலை 26 அதிகாலை 6.00 மணி பிடல் அவரது சகோதரர் ரால் காஸ்ட்ரோ உள்ளிட்ட 120 வீரர்கள் சாண்டியாகோ கியூபாவில் அமைந்திருந்த கியூபாவின் இரண்டாவது மிகப் பெரிய இராணுவத் தளத்தை தாக்குகின்றனர். அச்சமயம் பாடிஸ்டா கட்டளைத்தளபதியாக கடமையாற்றிய தருணம் தளத்தில் 400 க்கும் மேற்பட்ட வீரர்கள் இருந்தனர்.
பிடலினுடைய திட்டம் என்னவென்றால் அபெல் சண்டமரிய தலைமையிலான 20 வீரர்கள் அடங்கிய முதலாவது குழு இராணுவத் தளத்திற்கு முன்பாக அமைந்திருக்கும் வைத்திய சாலையைக் கைப்பற்றுவது, லெஸ்டர் தலைமையிலான 5 வீரர்கள் அடங்கிய இரண்டாவது குழு என்னும் கட்டிடத்தைக் கைப்பற்றுவது,பிடல் தலைமையிலான 90 பேர் அடங்கிய மூன்றாவது குழு தளத்தைத் தாக்கி தொலைத்தொடர்பு நிலையத்தைக் கைப்பற்றுவது என்பதாகும்.

மொன்கடாவை முற்றுகையிட அவன் தலைமையில் 1953 ஜூலை 26 அன்று சியோனிப் பண்ணையிலிருந்து புரட்சிப்படை புறப்பட்டது. தாக்குதல் ஆரம்பிக்கின்றது ஆயுதங்கள் தாங்கி வந்த வாகனம் தாக்குதலுக்கு இலக்ககின்றது ஆயுத பற்றாக்குறையினால் கெரில்லா வீரர்கள் பலர் பின்வாங்குகின்றனர்.பிடல் இழைத்த ஒரு சிறிய தவறினால் அவரின் வாகனம் சிறிய விபத்துக்குள்ளகின்றது அவரைக் காப்பாற்ற கெரில்லா வீரர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ள பிடல் தனது வாகனத்தை இராணுவத்தளத்தின் வாசலை நோக்கி செலுத்திக் கொண்டிருந்தார். ஆனால் வாகனத்தின் பின்னால் இருந்த வீரர்கள் தாக்குதல் ஆரம்பித்து விட்டதால் தாம் இராணுவத்தளத்தின் உள்ளே இருக்கின்றோம் என நினைத்து வெளியே குதிக்கின்றனர் இதனால் அபாயமணி ஒழிக்க பாடிஸ்டாவின் இராணுவம் சுதாரித்துக் கொள்கின்றது.தாக்குதல் முடிவில் 15 கெரில்லா வீரர்களும் 3 இராணுவத்தினரும் கொள்ளப்பட 23 கெரில்லா வீரர்களும் 5 இராணுவத்தினரும் காயமடைகின்றனர். எஞ்சிய வீரர்கள் பிடல் மற்றும் அவரது தம்பி ரால் காஸ்ட்ரோ உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டு தீவுச்சிறையில் அடைக்கப்பட்டனர் அவர்களில் 56 கெரில்லாக்கள் கொலையும் செய்யப்படுகின்றனர். பதினைந்து ஆண்டு கால சிறைவாழ்க்கை என தீர்ப்பு வழங்கப்பட்டது. பின்னர் மக்கள் புரட்சியின் விளைவாக பிடல் பொது மன்னிப்பின் பெயரில் விடுதலை ஆகின்றார்.

நிக்கோலோபஸ்க்கு, குவேத மாலாவில் சே வைச் சந்தித்தபோது புத்துணர்ச்சி ஏற்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க சில யோசனைகள் அவரது எண்ணத்தில் பளிச்சிட்டன. சித்தாந்தங்களில் தேர்ச்சி பெற்றிருந்த சே குவேரா மட்டும் கியூபா புரட்சியில் பங்கெடுத்தால், போராட்டத்துக்கு ஒரு புது வடிவம் கிடைக்கும் என்று லோபஸ் நம்பினார். இது குறித்து காஸ்ட்ரோவின் சகோதரர் ரால் காஸ்ட்ரோவுடன் பேசினார்.இரண்டு மகத்தான சக்திகள் இணைந்த தருணம் கியூபா வளர்ச்சியின் அத்திவாரம். அப்போது ‘சே’வுக்கு வயது 27. காஸ்ட்ரோவுக்கு 32. காஸ்ட்ரோவுக்காவது கியூபா தன் சொந்த நாடு. போராடிய வேண்டிய அவசியம் இயல்பானது. ஆனால் ‘சே’வுக்கு அப்படி அல்ல. தனக்கு முற்றிலும் தொடர்பற்ற மற்றொரு தேசத்தில், அம்மக்களின் விடுதலைக்காகத் தன் உயிரைப் பணயம் வைத்து ஆயுதம் எடுப்பதென்பது, உலக வரலாற்றில் எப்போதும் எங்கும் நிகழ்ந்திராத ஒன்று. இதனால்தான் ‘சே’ மனிதருள் மாமனிதராக அடையாளம் காணப்பட்டார்.

புரட்சிக்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. ஏறக்குறைய ஒன்றரை வருட கடுமையான ஆயுதப் பயிற்சிக்குப் பிறகு 1956, நவம்பர் 26ம் தேதி இரவு மெக்ஸிகோ கடற்கரையில், 82 போராளிகள் ஒருவர் பின் ஒருவராக ஏறிக்கொண்டபின், விடுதலையின் பாடலை முழங்கியபடி, கிரான்மா எனும் படகு கியூபாவை நோக்கிப் பயணித்தது.காலநிலையில் ஏற்பட்ட சிக்கலால் படகு எதிர்பார்த்த இடத்தை எதிர்பார்த்த நேரத்தில் அடைய முடியாமல் போகின்றது. இதனால் இராணுவம் சுதாரித்துக் கொள்கின்றது. இச் சூழ்நிலையில் தன் சகாக்கள் பலரை இழந்தான். மிஞ்சியவர்களின் துணையோடு இராணுவத்திற்கு ஆயுதங்கள் வரும் இரயில் கவிழக்கபடுகின்றது இராணுவத்தினர் சிறைபிடிக்கபடுகின்றனர்.சாவைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை எடுத்துக் கொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறும் போன்ற அவரது வாசகங்கள், களத்தில் வீரர்களுக்கு தெம்பூட்டி சீற்றம் கொள்ளவைத்தன.

யுவேராவில் நடைபெற்ற யுத்தத்தில், 53 ராணுவத்தினரை வெறும் 18 கெரில் லாக்களைக் கொண்டு வீழ்த்தியதுதான் ‘சே’வின் வீரத்தை கியூபாவுக்கு வெளிச்சமிட்டது. 1958ம் வருடம் ஸாண்டா கிளாராவைக் கைப்பற்றினார் . கொடுங்கோலன் பாட்டிஸ்ட்டா ஸாண்டா டொமிங்கோவிற்குத் தப்பியோடினான். 1958 ஆகஸ்ட் மாதத்தில், புரட்சிப் படை தலைநகர் ஹவானாவுக்குள் ஊடுருவியது. கியூபா முழுவதும் காஸ்ட்ரோவின் வசமானது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கெரில்லா யுத்த வெற்றி, உலகின் அனைத்து நாடு களையும் வியப்பில் ஆழ்த்தியது.1959, பிப்ரவரி 16ல் கியூபாவின் பிரதமராக காஸ்ட்ரோ பதவியேற்றவுடன் குவேராவை ஒரு கியூபன் என்று அறிவித்தபிறகு அந்த வருடம் அக்டோபர் மாதம் தேசிய வங்கியின் அதிபராகவும் ஃபிடல் காஸ்ட்ரோவால் நியமிக்கப்பட்டார். விவசாயத் துறையில் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார் ‘சே’.

தேசிய வங்கியின் தலைவராக கியூபா ரூபாய் நோட்டுகளில் ‘சே’ என கையெ ழுத்திடும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றார். பின் 1961ம் ஆண்டு தேசிய வங்கியின் பதவியைத் துறந்து தொழிற்துறை அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். இருந்தாலும் ‘சே’ தன்னை ஒரு சாதாரணக் குடிமகனாகவே அடையாளம் காட்டிக் கொண்டார்.விவசாயக் கூலிகளுடன் சேர்ந்து கரும்பு வெட்டுவதும், தொழிற் சாலைகளில் இதர பணியாளர்களுடன் சேர்ந்து மூட்டை சுமப்பதுமாகவே வாழ்ந்தார். ‘சே’ மற்றும் காஸ்ட்ரோ இருவருக்குமிடையே யுத்தத்துக்கு முன்பும் பின்புமான உறவுகளில் வேறுபாடுகள் இருந்தது என்றாலும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்ததில்லை.அமெரிக்க ஏகாதிபத்தியத்தை மூன்றாம் உலக நாடுகளின் பிரதிநிதி யாக, ஒற்றை மனிதனாகத் தன்னால் வேரறுக்க முடியும் என ‘சே’ திடமாக நம்பினார். கியூபாவுக்கு ஏவுகணைகள் இறக்குமதி செய்ய ரஷ்யா வாக்குறுதி தந்தபோது, ‘‘ரஷ்ய ஏவுகணைகள் கியூபாவில் இறங்கினால் அது முதலில் அமெரிக்க நகரங்களையே குறிவைக்கும்’’ எனத் தைரியமாகக் குரல் கொடுத்தார். அமெரிக்கா, கியூபாவின் மீது விதித்த பொருளாதாரத் தடைதான் அவரது இந்தக் கட்டற்ற கோபத்துக்குக் காரணம்.

அமெரிக்காவின் சி.பி.என். தொலைக்காட்சி, ஒரு நேர்காணலுக்காக சேகுவேராவை நியூயார்க்குக்கு அழைத் தது. ‘‘அமெரிக்கா ஒரு கழுதைப் புலி. அதன் ஏகாதிபத்தியத்தை நான் வேரறுப் பேன்’’ என அமெரிக்க மண்ணிலேயே துணிச்சலாகப் பேட்டி தந்தார் ‘சே’. சென்ற இடங்களிலெல்லாம் அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.இந்நிலையில் காங்கோவின் அரசியல் சூழல், அவரை மிகவும் பாதித்தது. மக்கள் புரட்சிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. மூன்று மாத கியூபா அரசால் அங்கீகரிக்கப்படாத பயணத்துக்குப் பிறகு, ‘சே’ 1965 மார்ச்சில் கியூபா திரும்பினார். விமான நிலையத்தில் அவரை ஃபிடல் காஸ்ட்ரோ கை குலுக்கி வரவேற்றார். அதுதான் வெளியுலகுக்கு ‘சே’ நேரடியாக வெளிப்பட்ட கடைசி நிகழ்வு. அதன் பிறகு ‘சே’வைக் காணவில்லை. எங்கே போனார் என யாருக்கும் தெரியவில்லை.அது மட்டுமன்றி வேறு சில காரணங்களும் சொல்லபடுகின்றது அவை 1964ம் ஆண்டு ஜூலை மாதம் இரு அமைச்சர்களின் நியமன சம்பவம் பொருளாதாரக் கொள்கைகளில் அமைச்சர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிய ஒரு வாய்ப்பாகியது. அவ்விரு நியமனங்களுமே குவேரா வெளியேறுவதற்கு ஒரு தூண்டுகோலாகியது. மற்றுமொரு காரணம் குவேராவின் எண்ணமும் விருப்பமுமான மற்ற இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் ஆப்பிரிக்காவிலும் புரட்சி வெடிக்கச் செய்யும் திட்டம். மற்ற தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்நாட்டுப் பிரச்னைகளைத் தீர்ப்பது அதைவிட முக்கியம் என்று போர்க்கொடி தூக்கினார்கள்.

1964ம் ஆண்டு டிசம்பர் மாதம் குவேரா அமெரிக்கா, ஆப்பிரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு மூன்று மாத அதிகாரப்பூர்வமான சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பியபோது, தனது அதிகாரப்பிடி தளர்ந்து போனதை குவேரா அறிந்து கொண்டார். அதனால் கியூபாவை விட்டு விலகி மற்ற நாடுகளில் புரட்சி ஓங்குவதற்கு உதவி புரியும் பொருட்டு அங்கிருந்து கிளம்பினார்.‘சே எங்கே?’ பத்திரிகைகள் அலறின. அனைவரது பார்வையும் காஸ்ட்ரோ பக்கம் திரும்பியது. ‘சே’வை சுட்டுக் -கொன்றுவிட்டார் காஸ்ட்ரோ எனுமளவு கோபம் கிளம்பியது. காஸ்ட்ரோவின் மௌனம் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது. ‘சே எங்கே?’ எனக் கேட்ட யாருக்கும் காஸ்ட்ரோவால் வெளிப்படையாக பதில் சொல்ல முடியவில்லை. காரணம், சி.ஐ.ஏ.உண்மையில் ‘சே’ ஃபிடல் காஸ்ட்ரோவின் முன்னிலையில் தனது எல்லா பதவிகளையும் கியூபா நாட்டு குடியுரிமையையும் துறந்தார். அந்த வருட ஜூலை மாதம் கெய்ரோ வழியாக காங்கோவிற்கு ரகசியமாகப் பயணித்தார். அவரது பதவி மற்றும் கியூபாவின் குடியுரிமை துறப்பு பற்றி செய்தியை ஃபிடல் காஸ்ட்ரோ அக்டோபர் மாதம் கியூபன் மக்களுக்கு அறிவித்தார்.

காஸ்ட்ரோவை விட்டு பிரிவதற்கு முன் சே எழுதிய கடிதத்தை ஒரு பொதுக் கூட்டத்தில் காஸ்ட்ரோ படித்தார். அதில் என்னை கியூபாவின் புரட்சியுடன் தொடர்புபடுத்திய கடமை முடிந்துவிட்டது. அந்தக் கடமையை நான் செவ்வனே முடித்து விட்டேன். உங்களிடமும், மற்ற போராளிகளிடமும், என்னுடைய மக்கள் ஆகிவிட்ட கீயூபன் மக்களிடமும் நான் விடை பெறுகிறேன் என்று எழுதியிருந்தார்.1966ம் ஆண்டு மார்ச் மாதம் காங்கோவை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது. மார்ச் முதல் ஜூன் வரையிலான கால கட்டத்தில் உருகுவே, பிரேஸில், பராகுவே, அர்ஜெண்டைனா, பொலிவியா நாடுகளில் பயணம் செய்தவர். 1966ம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு உருகுவே நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தார். பல காரணங்களால் பொலிவியா நாட்டைத் தேர்ந்தெடுத்தார் என்று நம்பப்படுகிறது. அமெரிக்கா பொலிவியாவைவிட கரிப்பியன் தீவு நாடுகளே தங்கள் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கக்கூடும் என்று நம்பியதும், அதனால் அமெரிக்காவின் பார்வை பொலிவியா மீது அவ்வளவு தீர்க்கமாக விழவில்லை என்பதும் ஒரு காரணம்.

இரண்டாவதாக பொலிவியாவின் ஏழ்மையும் அங்கு நிலவிய சமூக மற்றும் பொருளாதார நிலைகளும் எந்நேரமும் அங்கு புரட்சி வெடிக்க சாதகமாக இருந்தது . மூன்றாவதாக பொலிவியா ஐந்து பிற நாடுகளுடன் தன் எல்லையை பகிர்ந்து கொண்டிருந்தது . பொலிவியாவில் கொரில்லாப் போராட்டம் வெற்றி பெறுமேயானால் அதை மற்ற ஐந்து நாடுகளுக்கும் பரவச் செய்துவிடலாம் என்று குவேரா நினைத்தது.
பொலிவியாவில் நடந்த கொரில்லாப் புரட்சியின் போது பொலிவியக் காடுகளில் பதுங்கி இருந்தார். தட்பவெப்ப சூழ்நிலைகளின் முரண், கலாசாரப் புரிதலின்மை போன்றவையே அவரது திட்டங்களின் தோல்விகளுக்குக் காரணம்.

பொலிவியாவில் நடந்த கொரில்லாப் புரட்சியின் போது பொலிவியக் காடுகளில் பதுங்கி இருந்தார். தட்பவெப்ப சூழ்நிலைகளின் முரண், கலாசாரப் புரிதலின்மை போன்றவையே அவரது திட்டங்களின் தோல்விகளுக்குக் காரணம்.இன்னொரு பக்கம் அவர் யார் யாரை தன் அரசியல் நண்பர்களாக நம்பி இருந்தாரோ, அவர்கள் யாரும் உதவி செய்யாமல், மௌனமாகக் கைகட்டி வேடிக்கை பார்த்ததும் தோல்விக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று. மனவேதனையுடன் ஆஸ்துமாவும் சேர்ந்து ‘சே’வை வாட்டி வதைத்தது. போதிய வீரர்கள் இல்லாதது மற்றும் உணவின்மை போன்ற பிரச்னைகளுடன் ‘சே’ காடுகளில் அலைந்தார். சி.ஐ.ஏ. பொலிவியாவுக்குள்ளும் புகுந்தது.1967 அக்டோபர் 8 தென் அமெரிக்கச் சரித்திரத்தில் ஓர் இருண்ட தினம்.காலை 10.30 யூரோ கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன் ‘சே’ கடந்து செல்கிறார். வழியில் தென்பட்ட ஆடு மேய்க்கும் குண்டுப் பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு ஐம்பது பெஸோக்களைப் பரிசாகத் தருகிறார்.

நண்பகல் 1.30 அந்தக் குண்டுப் பெண் பொலிவிய ராணுவத்துக்கு சேவின் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுக்கிறாள். அலறிப் புடைத்துப் பறந்து வந்த பொலிவிய ராணுவம் சுற்றி வளைத்துச் சரமாரியாகச் சுடத் தொடங்குகிறது. பதிலுக்கு கெரில்லாக்களும் துப்பாக்கியால் சுடுகின்றனர்.பிற்பகல் 3.30 காலில் குண்டடிபட்ட நிலையில், தன்னைச் சுற்றித் துப்பாக்கியுடன் சூழ்ந்த பொலிவிய ராணுவத்திடம், ‘‘நான்தான் ‘சே’. நான் இறப்பதைக் காட்டிலும், உயிருடன் பிடிப்பது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்’’ என்கிறார்.மாலை 5.30 அருகிலிருந்த லா ஹிகுவேராவுக்கு வீரர்கள் கைத்தாங்கலாக சே வை அழைத்து வருகின்றனர். அங்கிருக்கும் பழைய பள்ளிக்கூடம் ஒன்றில் ‘சே’ கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறைவைக்கப்படுகிறார்.

இரவு 7.00 ‘சே பிடிபட்டார்’ என சி.ஐ.ஏவுக்குத் தகவல் பறக்கிறது. அதே சமயம், ‘சே’ உயிருடன் இருக்கும் போதே இறந்துவிட்டதாகப் பொய்யான தகவல் பொலிவிய ராணுவத்தால் பரப்பப்படுகிறது.
தனக்கு உணவு வழங்க வந்த பள்ளி ஆசிரியையிடம், ‘‘இது என்ன இடம்?’’ என்று ‘சே’ கேட்கிறார். பள்ளிக்கூடம் என அந்தப் பெண் கூற, ‘‘பள்ளிக்கூடமா… ஏன் இத்தனை அழுக்காக இருக்கிறது?’’ என வருத்தப்படுகிறார். சாவின் விளிம்பிலும் ‘சே’வின் இதயத்தை எண்ணி அப்பெண் வியந்து போகிறார்.
அக்டோபர் 9 அதிகாலை 6.00 லா ஹிகுவேராவின் பள்ளிக்கூட வளாகத்தில் ஒரு ஹெலிகாப்டர் வட்டமடித்தபடி வந்து இறங்குகிறது. அதிலிருந்து சக்திவாய்ந்த ரேடியோ மற்றும் கேமராக்களுடன் ஃபெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் எனும் சி.ஐ.ஏ. உளவாளி இறங்குகிறார். கசங்கிய பச்சைக் காகிதம் போல கைகால்கள் கட்டப்பட்ட நிலையில், அழுக்கடைந்த ஆடைகளுடன் ‘சே’வைப் பார்த்ததும், அவருக்கு அதிர்ச்சி. அமெரிக்காவுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த ஒரு மாவீரனா இந்தக் கோலத்தில் இங்கே நாம் காண்பது கனவா என நினைத்தார்.

பிடிபட்டிருப்பது ‘சே’தான் என அமெரிக்காவுக்குத் தகவல் பறக்கிறது. ‘சே’வின் டைரிகள் மற்றும் உடைமைகள் கைப்பற்றப்படுகின்றன. தான் கொண்டுவந்த கேமராவில் ‘சே’வை பல கோணங்களில் புகைப் படங்கள் எடுக்கிறார் ஃபெலிக்ஸ். கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப் போலக் காட்சி தரும் ‘சே’வின் அப் புகைப்படங்கள் இன்றளவும் வரலாற்றின் மிச்சங்கள்.காலை 10.00 ‘சே’வை உயிருடன் வைத்துக்கொண்டு விசாரணை நடத்தினால், அது உலகம் முழுக்க அவர் மேல் பரிதாபத்தையும், நாயகத் தன்மையையும் உருவாக்கிவிடும் என்பதால், அவரை உடனடியாகத் தீர்த்துக்கட்டி விடுவதுதான் சரி என சி.ஐ.ஏவிடம் இருந்து தகவல் வருகிறது.வாலேகிராண்டாவில் இருந்து வந்த அத்தகவல் 500, 600 எனக் குறிச்சொற்கள் தாங்கி வருகிறது. 500 என்றால் ‘சே’ 600 என்றால் கொல் என்பவை அதன் அர்த்தங்கள்.

காலை 11.00 ‘சே’வைச் சுட்டுக் கொல்வது என முடிவெடுக்கப்படுகிறது. யார் அதைச் செய்வது எனக் கேள்வி வருகிறது. ‘மரியோ ஜேமி’ என்னும் பொலிவிய ராணுவ சர்ஜன் அக்காரியத்துக்காகப் பணியமர்த்தப்படுகிறார்.நண்பகல் 1.00 கைகள் கட்டப்பட்ட நிலையில், ‘சே’வை பள்ளிக்கூடத்தின் மற்றொரு தனியிடத்துக்கு மரியோ அழைத்துச் செல்கிறார். ‘‘முட்டி போட்டு உயிர் வாழ்வதைவிட நின்று கொண்டே சாவது எவ்வளவோ மேல்!’’ என்பார் ‘சே’. ஆனால், மரியோ அவரை ஒரு கோழையைப் போலக் கொல்லத் தயாராகிறார்.தன்னை நிற்க வைத்துச் சுடுமாறு ‘சே’ கேட்க, அதை அலட்சியப்படுத்துகிறார். ‘‘கோழையே, சுடு! நீ சுடுவது ‘சே’வை அல்ல ஒரு சாதாரண மனிதனைத்தான்!’’ இதயம் கிழிக்கும் விழிகள் மின்ன, உலகம் புகழும் மனிதன் சொன்ன கடைசி வாசகம் இதுதான்!

மணி 1.10 மனித குல விடுதலைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதனை நோக்கி துப்பாக்கி திறக்கிறது. ஒன்பது தோட்டாக்களில் ஒன்று, அவரது இதயத்துக்குள் ஊடுருவியது. இனம், மொழி, தேசம் என எல்லைகள் கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன் இதோ விடை பெறுகிறான்.அக்டோபர் 18 கியூபா, ஹவானா-வில் வரலாறு காணாத கூட்டம் ‘சே’வின் அஞ்சலிக்காக காஸ்ட்ரோவின் தலைமையில் கூடியிருந்தது. அவர்கள் முன் தலைமை உரையாற்றுகிறார் காஸ்ட்ரோ. ‘‘வரலாற்றின் மகத்தான பக்கங்களில் இடம்பெற்றுவிட்ட ‘சே’ நம் காலத்தின் ஒப்பற்ற தலைவர். கியூபா மக்கள் அந்த மகத்தான தலைவனை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டும்’’ என வேண்டுகோள் விடுக்கிறார்.எது எப்படி ஆயினும் சே குவேராவை இன்றும் போற்றும் மக்கள் அவனைப்பற்றி இழிவாக வெளிவரும் செய்திகளை முற்றிலுமாகப் புறக்கணிக்கிறார்கள் என்பதே உண்மை. சே குவேராவின் சிந்தனையும் இலட்சியங்களும் இன்றைக்கும் சிறந்தவையாக கருதபடுகிறது..
“சே”தான் இந்த யுகத்தின் மனித வடிவமாகத் திகழ்கின்றார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வாழ்க்கை வரலாறு

கோட்பாட்டு இயற்பியலின் தந்தை என்று கருதப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
(Albert Einstein) கணிதத் திறமைகள் கொண்ட ஒரு இயற்பியல் அறிஞர் ஆவார்.
இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக்
கருதப்படுகிறார். நிறைக்கும் ஆற்றலுக்கும் உள்ள தொடர்பு குறித்து இவர்
உருவாக்கிய சூத்திரமான தான் இதுவரை உலகிலேயே மிகச் சிறந்த
சமன்பாடாகக் கருதப்படுகிறது. இந்த பார்முலா தான் அணுகுண்டின்
அடிப்படையாகும்

albert-einstein
இவை தவிர எலெக்ட்ரான்களின் செயல்பாட்டை விளக்கும் Photoelectric Effect, அணுக்களின் துணைத் துகள்களின் செயல்பாட்டை விளக்கும் Quantum Theory என உலகம் அதுவரை கேள்விப்படாத விஷயங்களைச் சொன்னவர்
ஐன்ஸ்டைன். அதே போல அண்ட சராசரங்களின் செயல்பாட்டை விளக்க நியூட்டனின்
தத்துவங்கள் போதாது என்ற நிலையில், தனது சிறப்பு சார்பியல் கோட்பாட்டை
(special theory of relativity) முன் வைத்து, பல்வேறு சிக்கலான
கேள்விகளுக்கு விடை தேடித் தந்தார்.போட்டான்கள், ஒளியின் வேகம்,
பிரபஞ்சத்தின் இயக்கம் என எல்லா வகையான நவீன இயற்பியல் ஆராய்ச்சிகளையும்
அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றவர் ஐன்ஸ்டைன்.இவரின் வாழ்கையில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளை இக்கட்டுரையில் காணலாம்

ஜெர்மனியில் உல்ம் என்னுமிடத்தில் பிறந்தார்.
இவரது தந்தை, ஹேர்மன் ஐன்ஸ்டீன், ஒரு மின்வேதியியல் சார்ந்த தொழில்
நிலையமொன்றை நடத்திவந்தார். தாயார் போலின் கோச்ஐன்ஸ்டைன் பிறப்பிலேயே ஓர் மேதை இல்லை உண்மையில் மூன்று வயது வரை பேசாமல் இருந்ததால் அவருக்கு கற்கும் குறைபாடு இருக்குமோ என்று பெற்றோர் அஞ்சினர். ஆல்பர்ட் பேசுவதற்குத் தாமதமாகி, பின் தங்கிய மாணவனாக இருந்து, பள்ளிக்கூடத்தில் மந்த புத்தியுள்ள அமைதிச் சிறுவனாகக் காணப் பட்டான். கனவு காணும் கண்களுடன் எந்த
விளையாட்டிலும் ஈடுபாடு இல்லாதவனாய் ஒதுங்கி இருந்தான்எரிச்சல் ஊட்டும் வண்ணம், ஆல்பர்ட் எதையும் ஆமை வேகத்தில்தான் செய்து
முடித்தான்! மகன் டைஸ்லெக்ஸியா நோயில், எழுதப் பேச முடியாமல்
பத்து வயது வரை இருந்ததாகத் தாய் கருதினாள். ‘எந்த உத்தியோகம் அவனுக்கு
உகந்தது ‘ என்று தகப்பனார் ஒரு சமயம் கேட்டதற்கு, பள்ளித் தலைமை ஆசிரியர், ஆல்பர்ட் எதிலும் உருப்பட்டு சாதிக்கப் போவதில்லை என்று சர்வ
சாதாரணமாகச் சொன்னாராம்!சிறுவனாக இருந்தபோது ஐன்ஸ்டைன் ஒரு கத்தோலிக்க ஆரம்பப் பாடசாலையில்
சேர்க்கப்பட்டார். அத்துடன் தாயாரின் வற்புறுத்தல் காரணமாக இளமையில்
வயலினும் கற்றுவந்தார்.
படுக்கையில் கிடந்த போது, தகப்பனார் காந்தத் திசை காட்டும் [Magnetic
Compass]
பைக்கருவி ஒன்றை ஆல்பர்ட்டுக்குக் கொடுத்தார். ஐன்ஸ்டைன்க்கு அது
ஒரு விந்தைக் கருவியாகவும், சிந்தனைத் தூண்டுவதாகவும் இருந்தது. தட்டை
எவ்விதம் சுற்றித் திருப்பி னாலும், காந்த ஊசி எப்போதும் ஒரே திசையைக்
காட்டியது.

அவ்வாறு நிகழ்வதற்குச் சூழ்வெளியில் ஏதோ ஒன்று ஊசியை இயக்கி
வருவதாக ஆல்பர்ட் நினைத்தான். அது என்னவாக இருக்கும்? சூழ்வெளி எப்போதும்
காலி வெற்றிடம் என்றல்லவா கருதப் படுகிறது! அந்த வயதில் சிறுவன் சிந்தனை
தூண்டப் பட்டு அண்ட வெளியை நோக்கிச் சென்றது! அதுவே ஆல்பர்ட் பின்னால் அண்ட
வெளி, காந்த சக்தி, புவீ ஈர்ப்பு பற்றி ஆழ்ந்து சிந்திக்க அடிகோலி
இருக்கலாம்! பின்னர் பள்ளியில் சந்தேகங்களை கேட்க தொடங்கினார். அவரது
கேள்விகளுக்கு பதில் தர முடியாமல் ஆசிரியர் திகைத்ததாகவும் அடுத்து என்ன
கேட்கப்போகிறார் என அஞ்சியதாகவும் ஒரு வரலாற்றுகுறிப்புகள் கூறுகிறது.
படங்களாகவும் காட்சிகளாகவும் சிந்திப்பார் ஐன்ஸ்டைன். அவருக்கு வயலின்
வாசிப்பதிலும் அதிக ஆர்வம் இருந்தது. இசைமேதை மோசார்ட்டின் தீவிர ரசிகராக
இருந்த அவருக்கு மேடைகளில் கச்சேரி செய்யும் அளவுக்கு திறமை இருந்தது.

அந்த வயதிலேயே இவர் கணிதத்திலும், அறிவியலிலும் அளவற்ற ஆர்வம் கொண்டிருந்தார்.
இவற்றின் மீது அவருக்கு ஆர்வமும், பகுத்தறியக்கூடிய திறனும் இவருக்கு
இயற்கையாகவே அமைந்திருந்தன. இவர் தனது 12 ஆவது அகவையிலேயே கணிதம் படிக்க
ஆரம்பித்தார். இவருடைய உறவினரிருவர் அறிவியல், கணிதம் தொடர்பான
நூல்களையும், ஆலோசனைகளையும் கொடுத்து, அவரை ஊக்குவித்தார்களாம்.
1898ல் பாடசாலைப் படிப்பை முடிப்பதற்காக ஐன்ஸ்டீன் சுவிட்சர்லாந்துக்கு
அனுப்பப்பட்டார். புகழ்பெற்ற சுவிஸ் பெட்ரல் பாலிடெக்னிக் நுழைவுத்தேர்வில்
அவர் தோல்வி அடைந்தார். ஆனால் அடுத்த ஆண்டு ஐன்ஸ்டீனை சேர்த்துகொண்டது
அந்த பல்துறை தொழிற்கல்லூரி.
பெண்ணொருவரைக் கண்டு காதல் கொண்டார். இந்தச் சமயத்தில் அவர் தனது ஜெர்மனி
நாட்டு குடியுரிமையை விட்டு நாடற்றவரானார். 1900, சுவிஸ் கூட்டமைப்புப்
பல்தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் டிப்ளோமாவைப்
பெற்றுக்கொண்டார். 21-02-1901இல் இவர் சுவிற்சர்லாந்தின் குடியுரிமையைப்
பெற்றார்.
இவருடன் படித்த ஒருவரின் தந்தையார் மூலம், 1902 ல், சுவிஸ் காப்புரிமை
அலுவலகத்தில், தொழில்நுட்ப உதவிப் பரிசோதகராக வேலை கிடைத்தது. அங்கே
கருவிகளைப் பற்றி விளங்கிக் கொள்வதற்கு இயற்பியல் அறிவு பணியாளர் ஒருவர்
தேவைப்பட்டது, அங்கே கருவிகளுக்கான காப்புரிம விண்ணப்பங்களை மதிப்பீடு
செய்வதே அவரது வேலை. அவர்களுக்கு (Hans Albert Einstein, Eduard). இரண்டு குழந்தைகளும் பிறந்தது.
1905 இல் ஐன்ஸ்டைன் ஜூரிச் பல்கலைக் கழகத்தில் பெளதிக விஞ்ஞானத்தில் Ph.D.
பட்டதாரி ஆனார். கண்ணுக்கு புலப்படாத அணுவைப் பற்றியும் பரந்து விரிந்து
கிடக்கும் ஆகாயத்தைப்பர்றியும் ஆராய்ந்த ஐன்ஸ்டீன் தியரி ஆப்
ரிலேட்டிவிட்டி என்ற கோட்பாட்டை வெளியிட்டார். அதுதான் சார்பியல் கோட்பாடு
அந்த கோட்பாடு மூலம் அவர் உலகுக்கு தந்த புகழ்பெற்ற கணித இயற்பியல்
வாய்ப்பாடுதான் E=mc2. எப்பொருளும் ஓய்வு நிலையிலோ அல்லது இயங்கு நிலையிலோ இருக்கும்
போது அது ஒரு குறிப்பிடத்தக்க சக்தியை கொண்டிருக்கும் என்று கூறினார்.
விஞ்ஞான உலகத்திற்கே இந்த வாய்ப்பாடுதான் அடிப்படை
மந்திரமாக கருதப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பை செய்தபோது ஐன்ஸ்டீனுக்கு
வயது 26 தான்.
1921 ஆம் ஆண்டு ஐன்ஸ்டீனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்க
விரும்பியது நோபல் குழு. ஆனால் சார்பியல் கோட்பாடு குறித்து அப்போது
விஞ்ஞானிகளிடையே கருத்து வேறுபாடு நிலவியதால் அதற்காக அல்லாமல் ஃபோட்டோ
எலெக்டிரிக் எபெக்ட் என்ற கண்டுபிடிப்புக்காக அவருக்கு நோபல் பரிசு
வழங்கபட்டது. முதலாம் உலகப்போரில் ஜெர்மனி கலந்துகொண்டதற்கு வெளிப்படையாக
கண்டனம் தெரிவித்தார் ஐன்ஸ்டீன்.
பிள்ளைகள் பெற்ற மிலேவா போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன. உலக மேதையான
ஐன்ஸ்டின் உள்ளத்தைப்புரிந்து கொள்ள விரும்பாத அவரது மனைவி 14-02-1919ல்
ஐன்ஸ்டினை விட்டுப் பிரிந்தார்.ஒரு பெண்ணை ஐன்ஸ்டின் தேடினார். அவருடை உறவுக்காரப் பெண்ணான எல்சா (Elsa Löwenthal)என்பவளை ஐன்ஸ்டின் மணந்தார். திருமணமான சிறிது காலத்திலேயே எல்சா மறைந்தார். தம் அறிவாற்றலைக் கண்டு காதலித்துத் திருமணம் செய்த மிலேவா பிரிவும், தம் உறவுக்காரப் பெண்ணான எல்சாவின் மறைவும் ஐன்ஸ்டினை யோசிக்க வைத்தது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் தமது எதிர்கால வெற்றிகளுக்குத் தடைக் கற்களாக இருப்பதை நினைத்து ஒரு முடிவுக்கு வந்தார். இனி எஞ்சிய காலத்தைத் தனியாகவே வாழ்ந்து முடிப்பது என்று ஐன்ஸ்டின் உறுதி பூண்டார்.
ஜெர்மனியின் பெர்லின் அறிவியல் அகாடமியின் பேராசிரியராக இருந்தபோதே அணு ஆராய்ச்சிகளை இவர் ஆரம்பித்திருந்தார். ஹிட்லர் ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த நாட்டுக்கே போகவில்லை. அமெரிக்காவுக்கு வந்தவர் அங்கேயே தங்கி ஆராய்ச்சிகளை ஆரம்பித்தார் 1939 ஆம் ஆண்டு வேறு சில இயற்பியல் வல்லுநர்களுடன் சேர்ந்து அமெரிக்கா அதிபர் ரூஸ்வெல்டுக்கு ஒரு கடிதம் எழுதினார் ஐன்ஸ்டீன். அப்போது ஹிட்லரின் ஆட்சியில் இருந்த ஜெர்மனிக்கு அணுகுண்டை தயாரிக்கும் வல்லமை இருப்பதாகவும் வெகு விரைவில் அணுகுண்டு தயாரிக்ககூடும் என்றும் கடிதத்தில் எச்சரித்திருந்தார் ஐன்ஸ்டீன். ஆனால் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாயிற்று. ஜெர்மனி அணுகுண்டு செய்வதை அமெரிக்கா தடுத்து நிறுத்தும் என்று நம்பினார் ஐன்ஸ்டீன். ஆனால் ரூஸ்வெல்ட் நிர்வாகமோ ஐன்ஸ்டீனுக்கு தெரியாமலே சொந்தமாக அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் (Franklin Delano Roosevelt) அந்த விஞ்ஞானியை அழைத்து, “அணுகுண்டு தயாரிக்க வேண்டும். அது உங்களால்தான் முடியும்.நீங்கள் அணுகுண்டு தாயரித்துக் கொடுத்தால் அதற்குத் தேவையான உதவிகளையும் பணமும் தரத் தயாராக இருக்கிறேன்” என்றார்.ூஸ்வெல்ட் சொன்னதைக் கேட்ட ஐன்ஸ்டைன் சிரித்தார். அவருடைய சிரிப்பின் அர்த்தம் புரியாமல் ரூஸ்வெல்ட் விழித்தார்.அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித குல மேம்பாட்டுக்குப் பயன்பட வேண்டுமே தவிர, மனித குலத்தின் அழிவுக்குப் பயன்படுத்தக்கூடாது” என்று உறுதியாக அந்த விஞ்ஞானி ரூஸ்வெல்டுக்குப் பதில் கூறிவிட்டு வெளியேறினார்.

ஆனால்  அடுத்த நாள் ரூஸ்வெல்ட் ஐன்ஸ்டைனிடம், “ஹிட்லரிடம்  அணுகுண்டு கிடைத்தால் அவர் உலக மக்களை  அழித்து விடுவார். ஜெர்மனி அணு குண்டு கண்டுபிடிபதற்குள் நாம் அதை உருவாக்க வேண்டும். இதற்கு நீங்கள் உதவ வேண்டும்”, என்று கேட்டுக்கொண்டார்.சிறிது நேரம் யோசித்து பின்னர் ஐன்ஸ்டைன் உதவி செய்கிறேன் என்று வாக்களித்தார். அமெரிக்காவும் அணு குண்டு ஆராய்ச்சியை தொடங்கியது.

ரூஸ்வெல்ட் வேறொரு விஞ்ஞானியை வைத்து அணுகுண்டைத் தயாரித்தார். யோசனை சொன்னதோடு, ஐன்ஸ்டைன் “பொருள் சக்தி மாற்றக் கோட்பாட்” டின் அடிப்படையில் அணுகுண்டு தயாரிக்க உதவியும் செய்தார். ஆனாலும், அணு குண்டு பயன்படுத்தவதை இவர் எதிர்க்கவும் செய்தார் உலக மகாயுத்தம் நடந்தபோது அந்த அணுகுண்டை ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகி
ஆகிய நகரங்களின் மீது அமெரிக்கா வீசியது. இந்தக் கோரச் சம்பவம் 1945ஆம்
ஆண்டு நடந்தது.ஹிரோஷிமா, நாசாகி நகரங்கள் தரைமட்டமாகின. எங்கு நோக்கினும் மரண ஓலங்கள், இந்தக் கொடுமையின் பாதிப்பிலிருந்து இன்றும் கூட அந்த நகரம் முழுதும் விடுபடவில்லை. அன்று வீசிய அணுகுண்டு கதிர்ப்புகள் இன்று பிறக்கும் குழந்தைகளையும் பாதிப்பதாகப் பல விஞ்ஞானிகள் கூறுகின்றனர்

அந்த அணுகுண்டு ஜப்பான் நகரங்களின் மீது வீசப்பட்டதையும், அதனால் மனித
குலம் பாதிக்கப்பட்டதையும் அறிந்து தேம்பித் தேம்பி அழுதார். இந்த
சோகத்திலிருந்து விடுபட அவருக்குப் பலகாலம் ஆயிற்று.விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோர்
மத்தியில் ஐன்ஸ்டினின் தத்துவமும் புகழ்ந்து பேசப்பட்டது. 1921-ஆம் ஆண்டு
ஐன்ஸ்டினை நோபல் பரிசு தேடி வந்தது.உலகின் பல பகுதிகளுக்குச் சென்று வந்த ஐன்ஸ்டின், தமது சொந்த நாடான ஜெர்மனியிலேயே வாழ்வது என்று முடிவு செய்து, அங்கேயே தங்கினார். ஆனால் அப்போது ஜெர்மனியின் அதிபராக இருந்த ஹிட்லர், யூதர்களையும், யூத அறிவாளிகளையும் இழிவாக நடத்துவதைக் கண்டு வருந்தினார்.

இனி நாம் வாழ்வதற்கு ஜெர்மனி ஏற்ற இடமல்ல என்று ஐன்ஸ்டின் முடிவு செய்தார்.
அதன்பின் அவர் வாழ்க்கை அமெரிக்காவில் தொடர்ந்தது. அங்குள்ள ‘பிரின்ஸ்டன்’
என்ற பல்கலைக்கழகத்தில் ஐன்ஸ்டின் இயற்பியல்/ பெளதிகவியல் பேராசிரியராகப்
பணியாற்றினார்.ுமார் இருபது ஆண்டுகள் மனைவி துணைவியின்றி வாழ்ந்த ஐன்ஸ்டின், 1955 ஏப்ரல் 18-ம் நாள் அமெரிக்காவில் மறைந்தார்.உலகின் மாபெரும் ஜீனியஸாகக் கருதப்படும் இவர், 1955ம் ஆண்டு இறந்தபோது
அவரது மூளையை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இதை அவரது குடும்பமும் ஏற்றுக் கொண்டதையடுத்து இவரது மூளை தனியே எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மூளை மிக அதிகமான மடிப்புகளையும், மிக சிக்கலான தோற்றத்தையும் கொண்டிருந்தது உறுதியாகியுள்ளது.மனித மூளை என்பது சராசரியாக 1,230 கிராம் (ஒரு கிலோ 200 கிராம்) எடை
கொண்டது. இதன் முக்கிய பாகங்கள் பிராண்டல் லோப், பெரைடல் லோப்,
ஆக்ஸிபிடல் லோப், டெம்போரல் லோப், லிம்பிக் லோப், இன்சுலார் கார்டெக்ஸ்
ஆகியவை. பிராண்டல் லோப் என்பது மூளையின் முன் பகுதி. இது தான் நமது
சிந்தனைகளின் கூடாரம்.

இதில் பிரச்சனையோ, சேதமோ ஏற்பட்டால் நமது
சிந்தனைகள் சிதரும். பெரைடல் லோப் பகுதியின் முக்கிய வேலை தொடு உணர்வுகளை ஒருங்கிணைப்பது. இது பிராண்டல் லோபின் பின் பக்கம் உள்ளது. ஆக்ஸிபிடல் லோப் என்பது பின் பக்க மூளையில் இருப்பது. நமக்கு பார்வைத் திறனைத் தருவது இது தான். டெம்போரல் லோப் என்பது மூளையின் கீழ் பகுதி. இது வாசனை, கேட்கும் திறன்,முக பாவனைகளைத் தருவது. லிம்பிக் லோப் மூளையின் மத்தியப் பகுகியில் உள்ளது. இது தான் நமக்கு நினைவாற்றல், குணநலன்களைத் தருவது. இன்சுலார் கார்டெக்ஸ் மூளையின் போர்வை போன்றது. இது தான் வலி உள்ளிட்டவற்றை உணர வைப்பது.ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மூளை 240 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு விஞ்ஞானிகளிடம் ஆராய்ச்சிக்காக தரப்பட்டது.இதைப் பிரித்தவர் அப்போது மிகப் பிரபலமாக இருந்த நோய்த் தடுப்பு ஆராய்ச்சி வல்லுனரான டாக்டர் தாமஸ் ஹார்வி.இந்த 240 பாகங்களும் மூளை நரம்பியல் டாக்டர்கள், ஆராய்ச்சியாளர்கள்,உளவியல் ஆராய்ச்சியாளர்கள் என பல்வேறு தரப்பினரிடம் பிரித்துத் தரப்பட்டு அதில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து இந்த மூளைப் பகுதிகளில் பல காணாமல் போய்விட்டன.ஆனாலும் இந்த ஆராய்ச்சியாளர்கள் எழுதி வைத்த குறிப்புகளை வைத்து சமீபத்தில் ஐன்ஸ்டைன் மூளை குறித்து ஒரு சில முடிவுகளுக்கு வந்துள்ளனர் விஞ்ஞானிகள். குறிப்பாக அமெரிக்காவின் புளோரிடா ல்கலைக்கழகத்தின் மனித பரிணாமம் குறித்த ஆராய்ச்சிப் பிரிவின் தலைவரான டீன் பால்க் தலைமையிலான குழு, ஐன்ஸ்டைன் மூளையின் சில பகுதிகளில் மிக அதிகமான மடிப்புகளும், பள்ளங்களும் (grooves) மிக அதிகமாக இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.85 பிற மூளைகளுடன் ஒப்பிட்டு இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. ஐன்ஸ்டைன் மூளையின் எடை என்னவோ மற்றவர்களைப் போலவே சராசரி எடை கொண்டதாகவே இருந்துள்ளது. ஆனால், அதன் மடிப்புகள், முகடுகளின் (ridges) எண்ணிக்கை மிக மிக அதிகமாக இருந்துள்ளது. மேலும் ஒரு விஷயத்தை மிகக் கூர்மையாக ஆராயும் திறனையும் முன்யோசனையையும் தரும் prefrontal cortex பகுதி ஐன்ஸ்டைன் மூளையில் கொஞ்சம் பெரிதாகவே இருந்ததும் உறுதியாகியுள்ளது

ஐன்ஸ்டைன்
மறைந்தது 1955ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி. அப்போது அவருக்கு வயது 76.
ஆனால், அவரது இயற்பியல் கோட்பாடுகளுக்கு ஏது சாவு?<

Thippu Sulthan

மைசூர் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், திப்பு சுல்தான். தொடக்ககாலத்தில் ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக விளங்கி, கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்குப் பெரும் சவாலாக இருந்து, தன்னுடைய கடைசி மூச்சு நிற்கும் வரை ஆங்கிலேயர்களை எதிர்த்து உறுதியுடன் போராடிய மாவீரன். இளம் வயதிலேயே திறமைப்பெற்ற போர்வீரனாக வளர்ந்த அவர், சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் மற்றும் சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார். ‘உயிர் பிரியும் நேரம் கூட தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும்’ என்று ஆங்கிலேயர் கூறியபோது, ‘முடியாது’ என மறுத்து, கர்ஜனையோடு “ஆடுகளைப்போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விட, புலியைப் போல இரண்டு நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என முழங்கியபடியே மரணத்தைத் தழுவியவர். இத்தகைய வீரமிக்க மாவீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் ஆட்சிமுறைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: நவம்பர் 20, 1750

இடம்:  தேவனஹள்ளி, கர்நாடக மாநிலம், இந்தியா

பணி: மன்னர்

இறப்பு: மே 04, 1799

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

‘மைசூரின் புலி’ என அழைக்கப்படும் திப்பு சுல்தான் 1750 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள “தேவனஹள்ளி” என்ற இடத்தில் ஹைதர் அலிக்கும், பாக்ர்-உன்-நிசாவுக்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தை சாதாரண குதிரைவீரனாக இருந்து, பிறகு ஒரு அரசை ஆளும் மன்னனாக உயர்ந்து, இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு வெற்றிக்கண்டவர்.

ஆரம்ப வாழ்க்கை

கல்வியில் சிறந்து விளங்கிய திப்பு சுல்தான், இளம் வயதிலேயே தன்னுடைய தந்தையுடன் பல போர்க்களம் கண்டார், இதனால் தன்னுடைய பதினாறு வயதிலேயே யுத்தத்தந்திரங்கள், ராஜதந்திரங்கள் என அனைத்திலும் தேர்ச்சிப்பெற்று, சிறந்த படைத்தளபதியாக வளர்ந்தார். 1776 ஆம் ஆண்டு மராட்டியர்களுக்கு சொந்தமான காதிகோட்டையை கைப்பற்றிய திப்புசுல்தான், பிறகு 1780ல் நடைபெற்ற இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலப்படைகளுக்கு எதிராக தந்தையுடன் இணைந்து போர்தொடுத்தார். பின்னர்,  1782ல் தன்னுடைய தந்தை ஹைதரலியின் மரணத்திற்குப் பிறகு, 1782 ஆம் ஆண்டு டிசம்பர் 26 நாள் தன்னுடைய 32 வது வயதில் ‘சுல்தானாக’ அரியானை ஏறினார். மைசூரின் மன்னனாக பொறுப்பேற்ற திப்பு சுல்தான் அவர்கள், ‘புலி சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை’ தன்னுடைய சின்னமாக பயன்படுத்தினார். சுமார் நான்கு ஆண்டுகள் நடைபெற்ற இந்தப் போர் 1784 ஆம் ஆண்டு மங்களூர் உடன்படிக்கையின் மூலம் முடிவுக்கு வந்தது.

மூன்றாம் மைசூர் போர்

1789 ஆம் ஆண்டு திப்பு சுல்தான் தலைமையில் ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற மூன்றாம் மைசூர் போரில் மராட்டிய பேரரசும், ஐதராபாத் நிஜாமும் பிரிட்டிஷ் படைத்தளபதி கார்ன் வாலிசுடன் இணைந்து திப்பு சுல்தானுக்கு எதிராகப் போர்தொடுத்தனர். ஆனால், சற்றும் கலங்காத திப்புசுல்தான் எதிரிகளை துணிச்சலுடன் எதிர்கொண்டார். 1792 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இந்தப் போரில் திப்பு சுல்தான் தோல்வியடைந்தார். இறுதியில் சீரங்கப்பட்டினம் அமைதி ஒப்பந்தத்தின்படி பல பகுதிகள் பிரிட்டிஷ், ஐதராபாத் நிஜாம் மற்றும் மராட்டியர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

நான்காம் மைசூர் போரும், திப்புவின் மரணமும்

‘போரில் திப்புசுல்தானை வீழ்த்தமுடியாது’ என அறிந்த பிரிட்டிஷ்காரர்கள், சூழ்ச்சி செய்து, திப்புவின் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் விலைப்பேசி, லஞ்சத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி, திப்புவை அழிக்கத் திட்டம் தீட்டினர். இந்த சூழ்ச்சிக்கு இடையில் 1799 ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காம் மைசூர் போரில், திப்பு சுல்தான் தீரமுடனும், துணிச்சலுடனும் போர்புரிந்தாலும், எதிரிகளின் நயவஞ்சக செயலினால் பிரிட்டிஷ் படைத் தொடர்ந்து முன்னேறித் தாக்கியது. இந்தத் தாக்குதலில் குண்டடிப்பட்டு கிடந்த திப்புசுல்தானிடம், ‘தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும்’ என்று ஆங்கிலேயர் கூறியபோது, ‘முடியாது’ என மறுத்து கூறிய அவர், “ஆடுகளைப்போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விட, புலியைப் போல இரண்டு நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என முழங்கியபடியே 1799 ஆம் ஆண்டு மே 4  ஆம் தேதி வீரமரணம் அடைந்தார்.

ஆட்சிமுறையும், சீர்திருத்தங்களும்

திப்புசுல்தான் மிகப்பெரிய இராணுவப் படையினைக் கொண்டிருந்தார். இதில் குதிரைப்படை, ஒட்டகப்படை மட்டுமல்லாமல், போரில் பீரங்கிகளையும் பயன்படுத்தியுள்ளார். இதைத்தவிர, கடற்பயிற்சி பள்ளிகள் உருவாக்கப்பட்டு, கடற்படையில் பீரங்கிகள் மற்றும் ஆங்கிலேயருக்கு நிகராக நவீன ஏவுகணைகளை பயன்படுத்தினார் எனக் கூறப்படுகிறது. சக்தி வாய்ந்த ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர் திப்பு சுல்தான் எனப் பல வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

திப்புசுல்தான் ஆட்சியில், பெண்களுக்கு மரியாதை கொடுத்தது மட்டுமல்லாமல், தேவதாசி முறையை முழுமையாக எதிர்த்தார். கோயில்களில் நரபலி கொடுப்பதைத் தவிர்த்து, முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினார். திப்பு, இஸ்லாமிய மதத்தில் முழு ஈடுபாடு கொண்டவராக விளங்கினாலும், அவருடைய ஆட்சியில் இந்துக்கள் மற்றும் பிற மதத்தவரும் சுதந்திரமாக செயல்பட்டனர். மக்களிடையே அமைதியை மட்டும் விரும்பிய அவர், மத ஒற்றுமையை இறுதிவரை கடைப்பிடித்தார். மக்களுக்கு கடமை, உரிமை, பொறுப்பு உள்ளதாக சட்டம் இருக்கவேண்டும் எனக் கருதி சட்டபடியான விசாரணையும், தண்டனையும் அமையவேண்டும் எனக் கருதினார். விவசாயத்தில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, தொழில் வளர்ச்சியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார்.

1782 முதல் 1799 வரை மைசூர் பேரரசை ஆட்சி செய்த திப்புசுல்தான் அவர்கள், சிறந்த படைவீரராகவும், ஆட்சியாளராகவும் வாழ்ந்தவர். தன்னுடைய கொள்கை அறிவிப்பால் மட்டுமல்லாமல், நடைமுறையில் ஆட்சியிலும், தனிப்பட்ட வாழ்விலும் மக்கள் சார்ந்த கொள்கைகளை இறுதிவரை பின்பற்றியவர். போர் வ்யூகத்திலும், படைக்கலத் தயாரிப்பிலும், இராணுவ தொழில்நுட்பத்திலும் ஆங்கிலேயரை நடுநடுங்க வைத்த மாவீரன். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு வீர வரலாறு படைத்தவர் திப்புசுல்தான் என்றால் அது மிகையாகது.

காலவரிசை

1750 – நவம்பர் 20 ஆம்தேதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள “தேவனஹள்ளி” என்ற இடத்தில் பிறந்தார்.

1776 – காதிகோட்டையை கைப்பற்றினார்.

1782 – டிசம்பர் 26 நாள் மைசூர் பேரரசராக அரியானை ஏறினார்.

1780-84 – பிரிட்டிஷாருடன் இரண்டாம் மைசூர் போர்.

1789-92 – பிரிட்டிஷாருடன் மூன்றாம் மைசூர் போர்.

1799 – பிரிட்டிஷாருடன் நான்காம் மைசூர் போர்.

1799 – மே 4 ஆம் தேதி வீர மரணம் அடைந்தார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: