சிவபெருமானின் பன்னிரு ஜோதிலிங்க ஆலயங்கள்.

சோதிலிங்கம் (Jyotirlinga) என்பது இந்துக் கடவுளான சிவனை வணங்குவதற்குரிய வடிவங்களுள் ஒன்று. இது ஒளிமயமான லிங்கம் என்னும் பொருள் தருவது. இந்தியாவில் 12 சோதிலிங்கத் திருத்தலங்கள் உள்ளன.

திருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் தன்னை சோதிலிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக இந்துக்கள் நம்புகிறார்கள். இதனால் திருவாதிரை நாள் சோதிலிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது. பொதுவாக சோதிலிங்கத்துக்கும், பிற லிங்கங்களுக்கும் இடையே எவ்வித தோற்ற வேறுபாடுகளும் தெரிவதில்லை.

எனினும், உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தவர்கள் புவியைத் துளைத்துக் கிளம்பும் தீப்பிழம்பாக சோதிலிங்கத்தைக் காண்பார்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

1. சோமநாதர் ஆலயம், குஜராத்

1 somnath gujarath

 

சிவபெருமானின் பன்னிரு ஜோதிலிங்கங்களில் ஒன்றான சோமநாதர் ஆலயம், குஜராத் மாநிலத்தின் தென்மேற்குக் கரையில், கிர்சோம்நாத் மாவட்டத்தில், பிரபாச பட்டினக் கடற்கரையில் சோமநாதபுரம் சிவன் கோயில் அமைந்துள்ளது.

somanath from the beach edit

இது இந்தியாவில் உள்ள பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானது.

இந்துக்களின் தொன்மையான புராணமான ஸ்கந்த புராணத்தில் ஜோதிர்லிங்க திருத்தலத்தில் சோமநாதர் எனும் பெயரில் எழுந்தருளி இருக்கும் சிவபெருமான் வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

somnath temple

ஸ்கந்த புராணத்தில் ப்ரபாச காண்டம் சோமநாதர் திருக்கோயிலின் சிவலிங்கம் சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் பூமிக்கடியில் அமைந்திருப்பதாகக் குறிப்பிடப்படுகின்றது. மகாபாரதத்திலும் சந்திரன் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டவரலாறு கூறப்படுகின்றது.

somnath mandir sanctum sanctorum

ஸ்ரீகிருஷ்ணர் தனது அவதார முடிவின் போது இங்குள்ள பிரபாச பட்டினத்தில் தங்கியிருந்த காலத்தில், வேடுவன் ஒருவன் தவறாக விட்ட கனையால் காலில் தாக்கப்பட்டு அவதாரம் முடித்து வைகுண்டம் திரும்பினார் என பாகவத புராணம் கூறுகிறது.

அரபிக் கடல் ஓரத்தில் அமைந்திருந்த, இந்த புகழ் மிக்க ஆலயம், அங்கிருந்த விலை மதிப்பில்லா செல்வக்குவியல்களை அள்ளிச் செல்லும் நோக்கில் படை எடுத்து வந்த இஸ்லாமிய மன்னர்களினால் ஏழு தடவைகள் இடித்து தரை மட்டமாக்கப் பட்டது.

somnath temple ruins 1869

7வது தடவை இடித்தழிக்கப் பட்ட நிலையில் சோமநாதர் கோயில்,
1869 ஆம் ஆண்டில் டி.ஹச்.ஸ்கைஸ் (D.H. Sykes) என்பவரால் எடுக்கப்பட்ட புகைப்படம்.

ஒவ்வொரு முறையும் மீண்டும் மீண்டும் 8 தடவைகள் புனரமைக்கப்பட்டது.

தற்போதுள்ள ஆலயமானது 1947ம் ஆண்டில் சுதந்திர இந்தியாவின் துணைப் பிரதமராய் இருந்த வல்லபாய் பட்டேல் அவர்களின் முயற்சியில் மீள அமைக்கப் பட்டது. புதிதாக கட்டப்பட்ட சோமநாதரின் ஆலயம் இந்தியக் குடியரசுத் தலைவர், சங்கர் தயாள் சர்மா தலைமையில் சனவரித் திங்கள் 1ஆம் நாள், 1995ஆம் ஆண்டு (01-01-1995) பொது மக்களின் வழிபாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

சாளுக்கியர் கட்டிடக்கலை வடிவத்தில் இறுதியாக கட்டப்பட்ட சோமநாதர் கோயில் பிரமிடு வடிவத்தில் விசாலமாகக் கட்டப்பட்டுள்ளது. சிறப்பு மிக்க இந்து யாத்திரீக, உல்லாசப்பயண தலமாக இது விளங்குகிறது.

2. மல்லிகார்சுனா கோயில், கர்னூல்
2 malliharsjana andra

மல்லிகார்ஜுனா கோயில், ஆந்திர பிரதேசம் ஆந்திர பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள புனித நகரமான ஸ்ரீசைலத்தில் மல்லிகார்சுனா கோயில் அமையப்பெற்றிருக்கிறது.

மல்லிகாபுரி என்னும் பகுதியினை ஆண்ட, சந்திரகுப்தன் மகள் சந்திரலேகா, அப்பகுதியில் அபரிமிதமாகக் கிடைத்த வாசனை மிகு மல்லிகைப் பூக்களால், இறைவனைப் பூசித்து, அர்ச்சனை செய்து வந்தாள். இதனால் இங்குள்ள இறைவன் மல்லிகார்சுனர் என அழைக்கப் படுகின்றார்.

81 1280

இந்த கோயில் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றாக விளங்குவதோடு 18 மஹா சக்தி பீடங்களில் ஒன்றகாவும் சிறப்பு பெறுகிறது. இங்குதான் ஆதி சங்கரர் தன்னுடைய புகழ்பெற்ற ‘சிவானந்த லஹிரி’ எனும் கவிதைகளை படைத்தார் என்று நம்பப்படுகிறது.

77 1280

நந்தியம்பெருமான் இத்தலத்தில் தவஞ்செய்து இறைவனைச் சுமக்கும் ஆற்றலைப் பெற்றார் என்றும்; நந்தியே இங்கு மலையாக இருந்து பெருமானைத் தாங்குகிறார் என்றும் தலபுராணம் கூறுகிறது.

80 1280

ஸ்ரீசைலம், ஸ்ரீ பிரம்மராம்பாள் சமேத ஸ்ரீ மல்லிகார்ஜுனர் ஆலயம், நாயன்மார் பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது.

3. மஹாகாலேஷ்வர் ஆலயம், உஜ்ஜைன்
3 mahakaleswar madiyapiradesh

12 ஜோதிர்லிங்க கோயில்களில் மஹாகாளேஷ்வர் ஆலயத்தில் உள்ள லிங்கம் மட்டும்தான் தானாக உருவான சுயம்பு லிங்கம் என்று நம்பப்படுகிறது.

மேலும் 12 ஜோதிர்லிங்க கோயில்களில் மஹாகாளேஷ்வர் மட்டுமே தெற்கு நோக்கி அமையப்பெற்றிருக்கிறது.

mahakaleshawar tower

 

மகாகாலேஸ்வரர் கோயில், உஜ்ஜைன், இந்துக் கடவுளான சிவனைக் குறிக்கும் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மகாகாளேஸ்வர ஜோதிர்லிங்கத்தைக் கொண்டுள்ள புகழ் பெற்ற சிவன் கோயில் ஆகும்.

இது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைனில் உள்ளது. இது ருத்திர சாகர் என்னும் ஏரிக்கரையில் அமைந்துள்ள மூன்று அடுக்குகள் கொண்ட கோயிலாகும்.

mahakaleshwar-temple-2

சடங்குகள் மூலம் சக்தி கொடுக்கப்பட்டு நிறுவப்படும் படிமங்கள் போலன்றி, இங்குள்ள முதன்மைக் கடவுளான, சிவனின் லிங்க வடிவம் தன்னுள்ளேயே சக்தியோட்டத்தை உள்வாங்கித் தானாகத் தோன்றியதாகக் நம்பப்படுகிறது. மகாகாளேஸ்வரருடைய சிலை தெற்குப் பார்த்தபடி இருக்கும் தட்சிணாமூர்த்தி வடிவம் ஆகும். தந்திர மரபுகளில் கூறப்பட்டிருக்கும் இந்தத் தனித்துவமான அம்சம் 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் இங்கு மட்டுமே காணப்படுகின்றது.

ujjain-mahakaleshwar-jyotirlinga

மகாகாளேஸ்வரர் கோயிலுக்கு மேலுள்ள கருவறைக்குள் ஓங்காரேஸ்வரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. கருவறைக்கு மேற்கு, வடக்கு, கிழக்கு ஆகிய திசைகளில் முறையே பிள்ளையார், பார்வதி, கார்த்திகேயன் ஆகிய கடவுளர் உள்ளனர். தென்புறம் நந்தி சிலை உண்டு.

மூன்றாவது தளத்தில் உள்ள நாகசந்திரேஸ்வரர் சிலையை வணங்குவதற்கு நாகபஞ்சமியன்று மட்டுமே அடியார்கள் அநுமதிக்கப்படுகிறார்கள். இக் கோயில் உயர்ந்த மதிலால் சூழப்பட்ட பெரிய இடத்தில் அமைந்துள்ளது. கருவறைக்கு மேல் அமைந்துள்ள சிகரம் அல்லது விமானம் சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

mahakaleshawar

மாகாளர் பாதாளத்தில் கம்பீரமாக, கவசத்தில் காட்சித் தருகிறார். பூமிக்குள் பல படிகள் இறங்கிப் பாதாளத்தில் தான் மாகாளேசுவரரைத் தரிசிக்க வேண்டும். கும்பமேளா இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சகாப்தத்தைத் தோற்றுவித்த சாலிவாகனன், மகாகவி காளிதாசர், தண்டி முதலிய மேதைகள் வாழ்ந்த தலம். க்ஷீப்ரா நதியின் கரையில் வரிசையாகப் பல சிவலிங்கங்கள் உள்ளன.

இந்நதிக் கரையில் விக்கிரமாதித்தனின் குல தெய்வமாகிய வரசித்தி மாதா கோயில் உள்ளது. கண்ணபிரானின் குருவாகிய சாந்தீப முனிவரின் ஆசிரமம் இத்தலத்தில் உள்ளது.

4. கேதார்நாத் கோயில், உத்தரகண்ட்
 kedarnath temple

கேதார்நாத் கோயில் இந்தியாவிலுள்ள மிகப் புனிதமானதாகக் கருதப்படும் சிவன் கோயில்களுள் ஒன்றாகும். இது உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள, ருத்ரபிரயாக் மாவட்டத்தில், கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் இமயமலைத் தொடரின் அடியில் அமைந்துள்ளது

kedarnath-temple

இந்த கோயிலே 12 ஜோதிர்லிங்க கோயில்களில் சிவனின் கைலாய மலைக்கு வெகு அருகில் அமைந்திருக்கும் கோயிலாக கருதப்படுகிறது.

kedarnath-temple-winter

இப்பகுதியில் நிலவும் தீவிர காலநிலை காரணமாக இக்கோயில் ஏப்ரல் முதல் (அட்சயத் திருதியை) முதல் தீபாவளித் திருநாள் வரையே திறந்திருக்கும். அதோடு இக்கோயிலை சாலை வழியாக நேரடியாக அணுக முடியாது. கௌரிகுண்டம் என்ற இடத்திலிருந்து 14 கிமீ தூரம் மலை ஏறியே இக்கோயிலுக்கு செல்ல முடியும்.

kedarnathroute

மலை ஏறிச் செல்லும் யாத்திரிகர்கள்.

குளிர் காலங்களில் கோயிலில் உள்ள விக்கிரகங்கள் உகிமத் என்னும் இடத்திற்கு கொண்டுவரப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன. இக்கோயிலில் சிவபெருமான் கேதாரநாதர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். அம்மனின் பெயர் கேதாரகௌரி.

இது திருநாவுக்கரசரால் தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இங்கு பாண்டவர்கள் சிவபெருமானை நோக்கித் தவமிருந்ததாகவும், அவர்களே இக்கோயிலை கட்டியதாகவும் கருதப்படுகிறது.

4 kedaranath uthdakant

இக்கோயில் ஆதி சங்கரரின் வருகைக்குப் பிறகு புனரமைக்கப்பட்டது. வடக்கு இமயமலைத் தொடரில் அமைந்துள்ள நான்கு சிவன் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

இக்கோயில் கங்கையின் கிளை நதிகளுள் ஒன்றான மந்தாகினி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. ரிஷிகேஷில் இருந்து 223 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இக்கோயில் கடல் மட்டத்தில் இருந்து 3,583 மீ (11,755 அடி) உயரத்தில் உள்ளது.

kedarnath temple 2

 

இக்கோயில் எட்டாம் நூற்றாண்டில் ஆதி சங்கரர் இவ்விடத்திற்கு வந்தபோது கட்டப்பட்டதாக அறியப்படுகிறது. இன்றைய கோயில் பாண்டவர்கள் கோயில் எழுப்பிய இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

kedarnath temple at dawn

இக்கோயில் பனிபடர்ந்த மலைகளும் பனியாறுகளும் சூழ்ந்த பீடபூமி மீது அமைந்துள்ளது. இக்கோயில் ஒரு கவர்ச்சியான கல் கோயில் ஆகும். கருவறைக்கு எதிரே நந்தி சிலை உள்ளது.

 

kedarnath temple nandi

கோயிலுக்குள் நுழைந்ததும் பாண்டவர்கள், கிருஷ்ணர், சிவபெருமானின் வாகனமான நந்தி தேவர், சிவபெருமானின் காவலாளியான வீரபத்திரர், திரௌபதி போன்றோரது சிலைகளைக் காணலாம். கோயில் கருவறையினுள் முக்கோண வடிவில் ஜோதிர்லிங்கம் அமைந்துள்ளது. இக்கோயிலின் முகப்பு மேற்சுவரில் ஒரு மனிதனின் தலை செதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

kedarnath temple

இதே போன்ற அமைப்பு, கேதார்நாத்திற்கு அருகில் உள்ள, சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த கோயிலிலும் உள்ளது. ஆதி சங்கரர் இக்கோயிலோடு சேர்த்து உத்தராகண்டிலுள்ள பல கோயில்களை புனரமைத்தார். கேதார்நாத்தில் ஆதி சங்கரர் மகாசமாதி அடைந்தார். அவர் சமாதி அடைந்த இடம் கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தின் வீரசைவ ஜங்கம் என்ற சமூகத்தை சேர்ந்தவர்தான் கேதார்நாத் கோயிலின் தலைமை அர்ச்சகராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பூசைகளின் போது கன்னட மொழியிலேயே மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன. இவ்வழக்கம் பல நூறாண்டுகளாகத் தொடர்கிறது.

5. ஓங்காரேஸ்வரர் கோயில், மத்திய பிரதேசம்
omkareshwar-temple-3

ஓங்காரேஸ்வரர் கோயில்

மத்திய பிரதேசம் மத்திய பிரதேசத்தில் நர்மதை ஆற்றில் உள்ள சிவபுரி அல்லது மாண்டாத்தா எனும் தீவு ஒன்றில் ஓங்காரேஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது.

இந்த கோயில் அமையப்பெற்றுள்ள தீவின் வடிவத்தை ‘ஓம்’ என்பதுடன் இந்துக்கள் ஒப்பிட்டுக் காண்கிறார்கள். மேலும் இந்த தீவில் ஜோதிர்லிங்க கோயிலான ஓங்காரேஸ்வரர் கோயிலை போலவே அமரேஸ்வரர் கோயில் என்ற மற்றொரு ஆலயமும் அமையப்பெற்றுள்ளது.

omkareshwar 2

பாய்ந்து வரும் நர்மதை நதி, ஓரிடத்தில், கிளைகளாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேர்கையில், இடையில் ஓம் என்னும் வடிவில் உருவாகியா தீவுத்திடலில் சிவலிங்கம் வைத்துப் பூசித்ததால், இத்தலம், ஓம்காரம் என பெயர் கொண்டதென்பர்.

omkareshwar1

இக்கோவில் மூன்று அடுக்கு கொண்டதாகவும், கீழ் அடுக்கில் ஒம்காரீஸ்வரரும், நடுவில் மகாகாளீஸ்வரரும், மேல்த்தட்டில் சித்தீஸ்வரரும் எழுந்தருளியவாறு காணப் படுகின்றனர். அம்மனின் பெயர் அமலீஸ்வரி.

omkareshwar2 1

கோவிலின் நிலத்துக்கு கீழாக ஓடும், நர்மதை நீரானது, கீழ்த் தட்டில் உள்ள ஒம்காரீஸ்வர் மீது, அபிசேகம் செய்யும் வகையில் இயற்கையாக மேலே வருமாறு அமைந்துள்ளது, இறையருள்.

நர்மதை ஆறின் நீரோட்டத்தில் பல தீர்த்தங்கள் இருப்பினும், ஒம்காரீஸ்வரர் தீர்த்தமே மிகவும் புனிதமானது.

omkareshwar-narmadha river

கிருஷ்ணரிடம் யாசகம் பெற சென்ற குபேரன், தீர்த்த்தமாடிச் சென்ற, குபேர பண்டாரி தீர்த்தமும் இங்குள்ளது. அதனால் இந்த தலமானது, வழிபாடும் அடியார்களுக்கு, பெரும் செல்வத்தினையும், மோட்ச்சத்தினையும் வழங்கும் என்பது ஐதீகம்.

6. பீமாஷங்கர் கோயில், மகாராஷ்டிரா
6 bimashankar maharastra

பீமாசங்கர் கோயில் புனேக்கு அருகில் உள்ள கெட் என்னும் இடத்திலிருந்து வடமேற்கில் 50 கிமீ தொலைவில் உள்ள போர்கிரி என்னும் ஊரில் உள்ளது. இது புனேயில் இருந்து 110 கிமீ தொலைவில் சாஹ்யாத்திரி குன்றுகளில் அமைந்துள்ளது. பீமாஸ்கந்தர் பகுதியிலிருந்தே பீமா ஆறு உருவாகின்றது. இது தென்கிழக்காகச் சென்று ராய்ச்சூருக்கு அருகில் கிருஷ்ணா ஆற்றுடன் கலக்கிறது. இது இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.

அம்மன் பெயர் கமலாட்சிபட்சிஸ்டா தேவி.

bhimashankar-jyotirling

இக் கோயில், சிவன் வெல்லமுடியாத பறக்கும் கோட்டைகளான திரிபுரங்களை எரித்த புராணக் கதையுடன் தொடர்புள்ளது. இப்போருக்குப் பின் சிவனின் உடலிலிருந்து சிந்திய வியர்வையாலேயே பீமாராத்தி ஆறு உருவானது என்பது புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

bhimashankar temple1

இந்த கோயில் தொன்மையான மற்றும் நவீன கட்டிடக்கலை பாணிகளின் கலவையில் காட்சியளிக்கிறது.

tower

இந்த ஜோதிர்லிங்க ஆலயம் ஆன்மீக யாத்ரீகர்களிடையே மட்டுமல்லாமல் இயற்கை ஆர்வலர்கள், பறவை ஆர்வலர்கள் மற்றும் மலையேற்ற விரும்பிகள் மத்தியிலும் பிரபலமாக திகழ்கிறது.

bhimashankar-temple 1

மனம்கவர் இயற்கை அழகு மிக்க, மலைப்பகுதியில், சுற்றிலும் காடுகள் சூழ்ந்ததாக இந்த கோவில் அமைந்துள்ளது. சிறிய ஓடை போல் ஓடும் பீமா நதியில் இருந்து, சிறிய தொட்டிகளில் நீரைத் தேக்கி பக்தர்கள் நீராடி கோவில் செல்வர்.

இந்துகளின் மிகப் புனித தலம். சிவலிங்கம் நிலக் கீழ் மட்டத்தில் உள்ளது. பக்தர்கள் சூழ அமர்ந்து அபிசேகம் செய்வர்.

bhimashankar-temple

ஆண், பெண் அனைவரும் உள்ளே செல்லலாம். ஆண்கள் சட்டை இல்லாமலே செல்ல வேண்டும்.

7. காசி விஸ்வநாதர் கோயில், உத்தரப்பிரதேசம்
temple

இந்துகள் அனைவருக்கும் மிகவும் பரீட்சயமான பெயர் காசி விசுவநாதர். அதி புனிதமாகப் கருதப் படும் ஓர் தலம் இது.

காசி விஸ்வநாதர் கோயில் இந்துக்களின் புனித நகரமாக கருதப்படும் வாரணாசியில் கங்கை நதியின் மேற்கு கரையோரத்தில் அமைந்திருக்கிறது. இந்த கோயிலின் மூலவர் பெயரான விஸ்வநாதர் என்பதற்கு அகிலத்தை ஆள்பவர் என்று பொருளாகும்.

varanasi-ganges

 

3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரமாக அறியப்படும் காசியின் (வாரணாசி) பெயராலேயே இக்கோயில் காசி விஸ்வநாதர் கோயில் என்று அழைகப்படுகிறது. மேலும் சிவன் கோயில்களிலே இதுதான் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.

பன்னிரு ஜோதிர்லிங்க தலங்களுள் காசி தலமே மிகப் பிரசித்தி மிக்கது. இங்கு மூலவர் மரகததினால் ஆனவர் என்னும் சிறப்புடன் விசுவநாதர் என்று அழைக்கப் படுன்கிறார்.  அம்மன் விசாலாட்சி. 51 சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலம் மணிகர்ணிகா பீடம் என அழைக்கப் படுகின்றது.

kashi-3

பாரதத்தின் புராணக் கதைகளில் எல்லாம் வரும் காசி நகரம் மிகவும் பழமையானது. வாராணா, ஹசி ஆகிய இரு நதிகளுக்கு இடையே அமைந்த நகரமாதலால் வாரணாசி என்றும் அழைக்கப் படுகின்றது.

கிட்டத்தட்ட 23,000 ஆலயங்களைக் கொண்ட, இந்த பழம் பெரும் வாரணாசி நகரம், ‘கோவில்களின் நகரம்’ என்று அழைக்கப் படுகின்றது. நகரத்தின் மையமாக, இந்தியாவின் அதி புனிதமான கங்கை ஆறு ஓடுகின்றது. இந்தியாவின் கலாச்சார, புராண கதைகளின் மத்திய புள்ளியாக இந்த நகரமே விளங்குகின்றது.

இதனால், இறந்தவர்களின் உடல்களை இங்கே, முக்கியமாக மணிகர்ணிகா தீர்த்த படிகட்டுகளில், தகனம் செய்வதனை காணலாம். தகனம் செய்தபின் சாம்பல் கங்கை நதியில் கரைப்பது வழமை

 

lingam

லிங்கம் பூமி மட்டத்தில் இருந்து ஒரு சிறிய பள்ளத்தில் உள்ளது. பக்தர்கள் மண்டியிட்டு குனிந்தே, விசுவநாதரை தொட்டு வணங்குவர். லிங்கத்தின் தலைப்பகுதியில் தங்க முலாம் இடப்பட்ட தாமிரத் தகடு காணப் படுகின்றது. லிங்கத்தினை சுற்றி வெள்ளி தகடு கொண்டு பெட்டி வடிவில் தட்டு அமைத்து உள்ளார்கள். லிங்கத்தின் மேலே ஒரு பாத்திரம் கட்டித் தொங்க விடப் பட்டுள்ளது. இதில் நிரப்பப்படும் கங்கா தீர்த்தம் சொட்டு சொட்டாக லிங்கத்தின் மேலே அபிசேகம் செய்கிறது.

கோவிலின் பின் பக்கமாக சுவரினைப் பார்த்தவாறு ஒரு நந்தி காணப் படுகின்றது. இது ஆதி நந்தி என அழைக்கப் படுகின்றது. இந்த நந்திக்கு அருகாமையில் ஞானவாவி தீர்த்த கிணறும் காணப் படுகின்றது.

manikarnikakund

விசாலாட்சி அம்பாள் கோவிலும், அன்னபூரணி அம்மாள் கோவிலும் தனித்தனியாக சிறிது தொலைவில் இருக்கின்றன.

visaladchi

விசாலாட்சி அம்பாள்

தென்னாட்டுப் பாணியில் காணப் படும் விசாலாட்சி கோவிலில் நவக்கிரகங்களை வழிபடலாம்.

கல்வி தரும் கிரகமான புதன் இந்த ஆலயத்தில் காசி விசுவநாதரை வழிபட்டு நன்மை அடைந்ததால், மாணவர்கள் இந்த தலத்தினை வணங்கி பயன் பெறலாம். இங்கே மரணம் அடைபவர்கள் சொர்க்கத்தினை அடைவார்கள் என்று பல இந்துக்கள் நம்புகின்றனர்.

எல்லை இல்லாக் கருணையும் ,பேரன்பும் கொண்ட காசி விசுவநாதர் தரிசனம், பேரானந்த்தினை தருவதால், இவ்வாலயம் ‘ஆனந்த பவனம்’ என்றும் அழைக்கப் படுகின்றது.

ஆதி சங்கராச்சார்யா , சுவாமி விவேகானந்தா, ராமகிருஷ்ண பரமஹம்சா , குருநானக், சுவாமி தயானந்தா சரஸ்வதி போன்ற மகான்கள் இங்கு வந்து கங்கையில் நீராடி, லிங்க தரிசனம் செய்துள்ளார்கள்.

உலகம் முழுவதும் இருந்தும் பெருமளவில் யாத்திரிகளைக் கவரும் இந்தக் கோவிலின், சிவராத்திரிப் பெருவிழாவானது மிகப் பிரசித்தி மிக்கது.

ஏனைய 11 ஜோதி லிங்க ஆலயங்களை வணங்குவதனால் கிடைக்கும் பலனை இந்த ஒரு ஆலயத்தினை வணங்குவதன் மூலம் பெறமுடியும் என்பது பல இந்துகளின் நம்பிக்கையாகும்.

8. திரிம்பகேஷ்வர், மகாராஷ்டிரா
trimbakeshwar

திரிம்பகேஸ்வரர் கோயில், திரிம்பாக் என்னும் நகரில் உள்ள தொன்மையான சிவன் கோயில் ஆகும். இது இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் நாசிக் மாவட்டத்தில் நாசிக் நகரில் இருந்து 28 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்துக் கடவுளான சிவனுக்காக அமைக்கப்பட்ட இக் கோயில் இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.

treymbkeshwar

இது குடாநாட்டு இந்தியாவின் மிக நீளமான ஆறான கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் அமைந்துள்ளது.

மூலஸ்தானத்தில், நிலத்தின் கீழான, எப்போதும் நீர் சுரந்து கொண்டிருக்கும் அதிசயம் கொண்ட ஆவுடையாரின் மீது, மூன்று லிங்கங்கள் இணைந்ததாக வித்தியாசமாக காணப்படுகின்றன. இந்த லிங்கம் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய கடவுளரின் முகங்களுடன் அமைந்திருப்பது ஒரு தனித்துவமான அம்சமாகும். பிற ஜோதிர்லிங்கங்கள் அனைத்தும் சிவனையே முக்கிய கடவுளாகக் கொண்டு அமைந்துள்ளன.

3156

 

பிரம்மகிரி எனப்படும் மலையின் அடிவாரத்தில் அமைந்த இக் கோயில் கருங்கற்களினால் கட்டப்பட்டுள்ளது. இது அழகிய சிற்பங்களுடன் கூடிய கவர்ச்சியான கட்டிடமாக உள்ளது.

trim

மலையின் மீதுள்ள இந்த ஆலயத்தினை சூழ்ந்த பகுதிகள் மிகவும் ரம்மியமான, ஆன்மீக வாழ்வுக்கான அமைதியான சூழலாக இருப்பதால், பல சித்தர்களும், ரிஷிகளும் வாழ்ந்த தபோவனங்கள் நிறைந்த இடமாக உள்ளது.

trimbakeshwar mugut

இங்குள்ள தீர்த்தம் குசாவர்த்த தீர்த்தம் என்று அழைக்கப் படுகின்றது. அம்மன் பெயர் ஜடேசுவரி.

 

ராமாயண காவியத்தில் வரும் அனுமனின் பிறந்த இடமான அஞ்சனேறி மலை, இவ்வாலத்தில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, குரு, சிம்ம ராசியில் வரும் போது, கும்பமேளா பெருவிழா இங்கே கொண்டாடப் படுகின்றது.

9. வைத்தியநாதர் கோயில், ஜார்கண்ட்
baidnathdham

இந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான வைத்தியநாதர் (பைத்யநாத்) கோவில் ஜார்கண்டின் தியோகர் நகரத்தில் அமைந்திருக்கிறது.

இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஆனி மாதத்தில் சுல்தான்கஞ்ச் என்னும் இடத்திலிருந்து கங்கை நீரை எடுத்துக் கொண்டு 100 கிலோமீட்டர்கள் தூரம் வரை கால்நடையாக இக்கோயிலுக்கு வருகிறார்கள். சிலர் இந்த தூரத்தை 24 மணி நேரத்தில் கடந்து விடுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

vaithiya

ஒரே வளாகத்தில் 22 கோவில்களும் அவற்றில் ஒன்றில் ஜோதிலிங்கம் அமைந்துள்ளது.

linga

பெரும் வரங்களை வேண்டி, இலங்கை வேந்தன் இராவணன் இந்த ஆலயத்தில் சிவனாரைக் குறித்து பெரும் தவம் செய்தான். ஈற்றில் யாகம் ஒன்றை வளர்த்து, தனது பத்து தலைகளில் ஒன்வொன்றாக கொய்து, யாக நெருப்பில் இட்டான். ஒன்பது தலைகளையும் இழந்த நிலையில், இறைவன், அவன் முன் தோன்றி, வைத்தியராக அவனது வலி மிகு காயங்களுக்கு மருந்திட்டு, தலைகளை மீளப் பொருத்தி, அவன் கேட்ட வரங்களையும் அளித்தார்.

ravana-ganesa

இலங்கை கொண்டு செல்வதற்காக ஒரு லிங்கம் ஒன்றை கேட்டுப் பெற்றுக் கொண்டான், இராவணன். அந்த லிங்கத்தினை இலங்கை கொண்டு செல்ல விடாமல், தேவர்கள் வேண்டுதல் படி, விநாயகப் பெருமான், தந்திரத்தினால் தடுத்த கதை இந்த இணையதளத்தில் வேறு பகுதியில் உள்ளது.

temple at night

சிவபெருமான், வைத்தியராக வந்த தலமாகையினால், இது வைத்தியநாதர் கோவில் என்ற சிறப்பினையும், தீராத நோய்களை தீர்க்க பக்தர்கள் நாடி ஓடி வரும் ஒரு புகழ் மிக்க கோவிலாகவும் விளங்குகிறது. அம்மனின் பெயர் தையல்நாயகி.

இந்த, ஜார்கண்ட் மாநில தேவ்கர் வைத்தியநாதர் கோவில் குறித்த குழப்பம் ஒன்று நீண்ட நாட்களாக இருந்தது. மகாராஷ்டிர மாநிலத்தின் பரளி எனுமிடத்தில் அதே பெயரிலும், இமாச்சல பிரதேசத்தில், பைஜிநாத் எனுமிடத்தில் அதே பெயரிலும் உள்ள இன்னுமோர் ஆலயமும் தமது ஆலயங்களில் உள்ள லிங்கங்கள் தான் ஜோதி லிங்கங்கள் என கூறி வந்தன.

எனினும் 8ம் நூறாண்டில் வாழந்த ஆதி சங்கரர், பாடி இருந்த பாசுரத்தின சரியாக ஆய்ந்து, ஜார்கண்ட் மாநில தேவ்கர் வைத்தியநாதர் கோவில் லிங்கம் தான் ஜோதிலிங்கம் என சொல்லப் பட்டுள்ளது.

10. நாகேஸ்வரர் கோயில், உத்தரகண்ட்
 nageshwar front

நாகேஸ்வரர் கோயில் அல்லது நாகநாதர் கோயில் என்று அழைக்கப்படும் கோயில், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள துவாரகைக்கு வெளியே அமைந்துள்ள ஒரு இந்துக் கோயில் ஆகும். சிவனுக்காக அமைக்கப்பட்ட இக் கோயில் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று.

இறைவன் பெயர் நாகநாதர், அம்மனின் பெயர் நாகேஸ்வரி.

nageshwar

சிவபுராணத்தில் இத்தலம் பற்றிய கதை ஒன்று உண்டு. இதன்படி, சுப்பிரியா என்னும் சிவ பத்தை ஒருத்தியைத் தாருகா என்னும் அசுரன் ஒருவன் பிடித்து தாருகாவனம் என்னும் இடத்தில் மேலும் பலருடன் சேர்த்து அடைத்து வைத்திருந்தானாம். பாம்புகளின் நகரமான இதற்கு தாருகாவே மன்னன். சுப்பிரியாவின் வேண்டுகோளின்படி கைதிகள் எல்லோரும் சிவனைக் குறித்த மந்திரங்களைச் சொல்லி வணங்கினர்.

nageshwar-jyotirling

அங்கே தோன்றிய சிவன் தாருகாவைக் கொன்று கைதிகளை விடுவித்தாராம். அன்று தொட்டுச் சிவன் ஜோதிர்லிங்க வடிவில் இத்தலத்தில் இருக்கிறார் என்பது இந்துக்களின் நம்பிக்கை. தாருகா இறக்குமுன் இவ்விடம் தன்னுடைய பெயரில் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு அமைய இவ்விடத்துக்கு நாகநாத் என்னும் பெயர் வழங்கி வருவதாக நம்பப்படுகிறது.

நாகநாதர் கோவில் மிகப் பழமையானது. பன்னிரு ஜோதி லிங்கத் தலங்களில் இதுவே மிக தொன்மையானது என்கிறார்கள்.

naganath3

நான்கு பக்கமும் உயர்ந்த மதில் சுவர்கள் கொண்டதாக, விசாலமாக அமைந்து உள்ள இந்த ஆலயத்தில் வடக்கு,கிழக்கு பாகத்தில் வாயில்கள் இருந்தாலும், வடக்கு வாயிலே பயன் பாட்டில் உள்ளது. சிறந்த சிற்ப வேலைகளுடன் கூடிய நீண்ட, கூம்பு வடிவ கோபுரம் இந்த கோவிலில் காணப்படுகின்றது.

இந்த கோவிலுக்கு வெளியே, மிகவும் உயரமான, யோக நிலையில் இருக்கும் சிவனின் சிலை ஒன்று உள்ளது.

nageshwar-jyotirlinga-temple-dwarka

11. ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில், தமிழ்நாடு
 overview1

12 ஜோதிர்லிங்க கோயில்களில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரே ஜோதிர்லிங்க ஆலயமாக இராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில் புகழ்பெற்றுள்ளது.

ramanathaswamy temple corridor

மேலும் இராமேஸ்வரம் என்ற பெயர் வரக்காரணமாக ஸ்ரீ இராமநாதசுவாமி கோவிலை குறிப்பிடலாம். அதாவது இராவணனை கொன்ற பாவத்தினை நீங்க இராமன் மணல்களால் ஆன லிங்கத்தை இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று நம்பப்படுகிறது.

ramanathar-temple

இதன் காரணமாக இராமன் ஈஸ்வரனை வணங்கிய இடம் என்ற பொருளில் ‘இராம+ஈஸ்வரம்’ இராமேஸ்வரம் ஆனது.

rameshwaram linga

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் இராவணனைக் கொன்ற பாவம் தீர இராமன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. இக்கோயிலின் மூலவர் பெயர் ராமநாதசுவாமி, அம்மன் பெயர் பர்வத வர்த்தினி.

corridor

 

மூலஸ்தானத்தில் இரண்டு லிங்கங்கள் காணப் படுகின்றன. ஒன்று சீதா பிராட்டியார், மண்ணால் செய்து வழி பட்ட லிங்கம், ராமலிங்கம் என்று அழைக்கப் படுகின்றது. அடுத்தது, கைலாயமலையில் இருந்து அனுமான் கொண்டு வந்தது, விசுவலிங்கம் என்று அழைக்கப் படுகின்றது.

 

அனுமார் கொண்டுவந்த விசுவலிங்கம் முதலில் வந்ததால்,அதனையே முதலில் வழிபட வேண்டும் என ராமர் சொல்லிவைத்ததால் அவ்வாறே இன்றளவும் தொடர்கிறது.

காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசி சென்று, கங்கை தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டு, காசி விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்ததை அபிசேகம் செய்யது, காசியிலிருது கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, ராமநாதருக்கு அபிசேகம் செய்ய வேண்டும்.

12. கிரிஸ்னேஸ்வரர் கோயில், ஔரங்கபாத்
grishneshwar temple jyotirlinga shrine at aurangabad maharashtra

கிரிஸ்னேஸ்வரர் கோயில் அல்லது குஷ்மேஸ்வரர் கோயில் (Grishneshwar) எனப்படும் கோயில் ஒரு புகழ் பெற்ற சிவன் கோயில் ஆகும். மகாராஷ்டிர மாநிலத்தின் அவுரங்காபாத்திலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும், எல்லோராவிலிருந்து ஒரு கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ள இக்கோயில், இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

grishneshwara2

தனிச் சிறப்பு வாய்ந்த கட்டடக் கலையையும் சிற்ப செதுக்கல்களையும் அளிக்கும் இக்கோயில் மகாராஷ்டிராவில் உள்ள ஐந்து ஜோதிலிங்க தலங்களில் ஒன்றாகும்.

grishneshwar jyotirling

இக்கோயில், சத்திரபதி சிவாஜியின் பாட்டனான மல்ரோஜி ராஜே போஸ்லேயால் 16 ஆம் நூற்றாண்டில் திருத்தி அமைக்கப்பட்டது. பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் அகில்யபாய் ஹோல்கர் இங்கே திருத்த வேலைகளைச் செய்வித்தார். வாரணாசியில் உள்ள காசி விசுவநாதர் கோயிலையும், காயாவில் உள்ள விஷ்ணு பாத கோயிலையும் திரும்பக் கட்டுவித்தவரும் இவரே ஆவார்.

grishneshwar temple in aurangabad district

அழகிய சிற்ப வேலைப் பாடுகள் கொண்ட ஐந்து அடுக்கு கோபுரத்தினைக் கொண்டதாக கோவில் காணப்படுகின்றது. சிவப்பு நிறமான கல் மலையில் இந்த கோவில் அமைந்துள்ளது.

grishneshwar temple

இந்த கோவிலுக்கு அருகாமையில் புகழ் மிக்க எல்லோரா குகைகள் அமைந்து உள்ளன.

 

 

Advertisements