akshaya-tritiya

Akshaya Tritiya is a very popular festival that the Hindus and Jains celebrate every year. It is considered as one of the most important days for Hindu community as it is the day of the birth of the Lord Parasurama. The Hindu community considers this day as a lucky day and believes that any venture such as a business or the construction of a building started on that day will follow betterment and prosperity. Akshaya Tritiya is a one day event celebrated in late April or early May. Hindus celebrate this day because, according to them, Akshaya Tritiya is the day when the great God of Wisdom, God Ganesha, started writing the epic work called “Mahabharata”. It is believed that when the Pandavas were in exile the Lord presented them a bowl which was named Akshaya Tritiya. That bowl was never empty and produces an unlimited amount of food on demand.

Akshaya Tritiya is considered as the most golden day of the year because the word Akshaya means the most “Eternal” that which never diminishes. Any initiative made on that day or anything bought on that day is considered to be good fortune. The most popular activity is the buying of gold and it is believed it will be a sign of good fortune for the buyer. In the Indian culture people typically starts a new business or begins a new venture on Akshaya Tritiya. This is also one of the most popular days for weddings to take plans as the spirit of this day bids them on a very long and fulfilling life journey. It was also believed that people born in that month will be very lucky and will shine bright throughout their life.

The most popular story regarding the celebration of Akshaya Tritiya is that Lord Karishna and Sudama were friends during their childhood. Sudama was poor and he went to Karishna to ask him for some financial help or to give him money as a gift as a friend. Sudama did not have anything else except the pouch of Poha and he felt ashamed when he gave it to Karishna as he treated Poha as a king. His poor friend was overwhelmed by the hospitality shown by the Lord Karishna that he could not ask his friend for financial support which led him to go home empty-handed. When he arrived at his home he saw that his run-down hut was converted into a palace and his family was wearing royal attire. Sudama knew that this was the blessing of his friend Krishna who blessed him with more wealth than he needed or could ever imagine. This is why Akshaya Tritiya is associated with material gains.

Akshaya Tritiya is the festival, which is considered as a Golden Day for Hindus and Jains. This festival is only for Hindus and Jains, therefore not considered as a public holiday nor is celebrated anywhere else in the world.

Akshaya Tritiya 2016 Date & Timing

Event Day Date
Akshaya Tritiya 2016 Monday May 09

We hope that you will now be able to perform the rituals and proceedings on Akshaya Tritiya in 2016 in a more meticulous manner.

Akshaya Tritiya holds a great astrological significance in our lives. Did you know about it? Let’s take a look at the beneficial aspects of Akshay Tritiya in Hindu astrology.

Akshaya Tritiya 2016: Astrological Significance Of Akshay Tritiya

As per Hindu astrology, three Tithis (lunar dates) are considered to be auspicious. These Tithis are together known as Sade Teen Muhurats.

These include the first Tithi of the Shukla Paksha (bright fortnight) of Chaitra, tenth Tithi of Ashvin month, the third Tithi of the month of Vaisakha, and the first Tithi of Shukla Paksha of Kartika month. First three Tithis are considered to be full Tithis, while the last Tithi is counted as a half Tithi. Therefore, together they are known as Sade Teen Muhurtas.

It is believed that the Sun and the Moon are at their extreme point of brightness on this day.

But, what is the actual reason for celebrating Akshay Tritiya? Now, we will discuss the legends associated with Akshaya Tritiya, and why we should celebrate Akshaya Tritiya in 2016.

Why To Celebrate Akshay Tritiya In 2016?

Following are the legends associated with the festival of Akshaya Tritiya:

Akshaya Tritiya 2016: Parashuram Jayanti & Akshay Tritiya

According to the Puranic texts, Parashuram was born at Renuka Tirth, as Lord Vishnu’s sixth Avatar (incarnation). He was named as Ramabhadra, but after a significant occurrence, he got the epithet of Parashuram. Let’s proceed to know more about the event.

Ramabhadra was an ardent follower of Lord Shiva. Considering his perpetual dedication, Lord Shiva was pleased and gifted him with a divine responsibility to liberate Mother Goddess from demons. He was presented divine weapons by Shiva that included an axe-shaped weapon, Parashu. This altered his name from Rama to Parashurama (Rama with axe).

Akshaya Tritiya is observed as the day when Parashurama was born. But, there are more legends associated with Akshay Tritiya. Let’s take a look at them, as well.

Akshay Tritiya 2016: Mahabharata & Akshay Tritiya

The day of Akshay Tritiya marks the commencement of Satya Yuga (Golden Age). It is also believed that Ved Vyasa started writing Mahabharata along with Ganesha on the day of Akshaya Tritiya.

While on exile, Pandavas were gifted ‘Akshay Patra’ by Lord Krishna, the bowl of food that would never go empty. This was the day of Akshay Tritiya or Akha Teej.

Akshay Tritiya 2016: Krishna-Sudama & Akshay Tritiya

This legend is believed to be one of the most significant ones, associated with the celebration of Akshaya Tritiya. Lord Krishna had a poor Brahmin friend, Sudama. Once, on the day of Akshaya Tritiya, Krishna got visited by Sudama. The purpose for his visit was to ask for some financial help from Krishna.

Akshaya Tritiya legend owes to the story of Krishna-Sudama.Sudama was welcomed in a grand fashion by his friend, which embarrassed him even more. Though he was treated with benevolence, Sudama was ashamed of not being capable to present his friend anything, but some Poha (beaten rice). Krishna did not care to mend his attitude toward the bond of friendship and relished the Poha gifted by his dear friend.

Being overwhelmed by the treatment, Sudama could not ask for anything more from Krishna. Hence, he returned home empty handed. On his return, Sudama found his hut transformed into an abode of royalty and everything appeared grand. It was a boon by Lord Krishna that Sudama attained much more than financial help. Since then, the day is celebrated as Akshaya Tritiya.

Now, as you know the reasons to celebrate Akshay Tritiya, we are sure that you would like to know how to observe the day of Akshaya Tritiya in 2016. Now, we will let you know the ways to celebrate Akshay Tritiya in 2016.

How To Celebrate Akshay Tritiya In 2016?

Following are the rituals and customs related to the festival of Akshaya Tritiya:

Akshaya Tritiya 2016: Gaja Puja

Gaja Puja is also known as Gaja Dhanakarshana Puja. Gaja means ‘elephant’, and hence, in this Puja, elephants are worshiped for the sustenance of wealth and prosperity in lives. Before beginning with Gaja Puja, elephants are cleaned with water and adorned in a grand attire. Then, the elephant idol is offered flowers, and hence by, holy proceedings take place.

Akshaya Tritiya 2016: Ashwa Puja

Ashwa (horse) is considered to be the disciple of Mars (planet), which represents command and energy. On the day of Akshay Tritiya, Ashwa Puja is performed to bring home positivity and mental peace.

Akshaya Tritiya 2016: Gou Puja

Gou (cow) is the symbol of kindness, love and warmth; hence, Gou or cow is worshiped on the day of Akshay Tritiya. First, the cows are cleaned and decorated, and then, Gou Puja proceedings take place.

Akshaya Tritiya 2016: Mahalakshmi Puja

Mahalakshmi Puja is also performed on Akshay Tritiya or Akshaya Tritiya or Akha Teej. Maa Sundara Mahalakshmi is worshiped on Akshaya Tritiya, exhibiting the 64 Avatars of Goddess Lakshmi. Nine priests conduct Mahalakshmi Puja and chant 1008 names of Lakshmi Maa.

Goddess Mahalakshmi is considered to be associated with wealth and prosperity. Hence, the day of Akshay Tritiya, signify a never ending good fortune of prosperity and well-being.

To attract the blessings of Mahalakshmi Goddess, you can also buy Mahalakshmi Yantra. It will help you to ward off negativity around you. To buy Mahalakshmi Yantra, click: Mahalakshmi Yantra

Akshay Tritiya brings a special kind of spark in your lives, which will never get diminished with the dates of the calendar. Akshaya Tritiya will arrive each year with a grasp full of prosperity and well-being. Follow the day of Akshaya Tritiya to bring home a meritorious ray of positivity in 2016.

அட்சய திருதி

அட்சய திருதியை குறித்து காளிதாசர் எழுதிய உத்தர காலமிருதம் என்ற உயரிய நூலில், ஸ்லோகம் எண் 39-ல்

திரேதாதிர் ப்ருகுராம ஜன்ம திவசோ வைசாகா மாஹே சுப:

என்று சொல்லப்பட்டிருக்கிறது. திரேதா யுகம் ஆரம்பமான நாளைத்தான் திரேதாதி என்று சொல்வார்கள். இறைவனைப் பற்றிய சில நிகழ்வுகள் நடந்த நாள்தான் அட்சய திருதியை என்று சில புராணங்கள் சொல்கின்றன. பரசுராமன் அவதரித்ததும் அட்சய திருதியை நாளில்தான்.

பொதுவாக வைகாசி மாத வளர்பிறை மூன்றாம் திதியில் வருகிற திருதியைதான் அட்சய திருதியை திருநாள். இன்று நடுப்பகலில் திருதியை திதி இருந்தாக வேண்டும். இந்த நாளில் சுவாதி நட்சத்திரம் இணைந்துவிட்டால் அந்த நாள் நன்மை பயக்கக்கூடியது அல்ல. அதனால் சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை திருதியையே அட்சய திருதியையாகக் கொண்டாடுகிறார்கள்.

தங்கம் மட்டுமின்றி உப்பு, அரிசி, ஆடைகள், விலை உயர்ந்த பொருட்கள் என்ன வாங்கினாலும் மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம். மேலும் அன்று புதிதாக தொழில் தொடங்குவதும், பூமிபூஜை செய்வதும் நல்ல பலனைத் தரும். அட்சய திருதியை அன்று ஏழைகளுக்கு தானம் செய்தால், அது பல மடங்கு புண்ணியத்தை தரும் என்று கூறப்படுகிறது. இந்த நாளில் செய்யப்படும் பிதுர் தர்ப்பணம், பல தலைமுறைக்கு முன் வாழ்ந்த மூதாதையர்களுக்கும் சென்றடையுமாம். அதே நேரத்தில் பிதுர் தர்ப்பணம் செய்பவர்களுக்கு, வறுமைநீங்கி வளமான வாழ்வு அமையும்.

விரதம் இருக்கும் முறை

அட்சய திருதியை தினத்தில் அதிகாலை எழுந்து நீராடி, பூஜை அறையில் கோலமிட வேண்டும். லட்சுமி நாராயணன், சிவசக்தி, அன்னபூரணி, குபேரன் படங்கள் வைத்து, சந்தனம், குங்குமம் இட்டு மாலையிட வேண்டும். அந்தப் படங்களின் முன்பு குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். பூஜை அறையில் போடப்பட்ட கோலத்தின் மீது பலகை வைத்து, அதன் மீதும் கோலம் போட வேண்டும். ஒரு சொம்பில் அரிசி, மஞ்சள், நாணயம், சிறிய நகைகளை போட வேண்டும். பின்னர் அந்த சொம்பில் நீர் நிரப்பி, அதற்கு சந்தனம், குங்குமம் இட வேண்டும். பின்னர் சொம்பின் மேல் தேங்காய் வைத்து, அதைச் சுற்றிலும் மாவிலையை வைத்து கலசமாக தயார் செய்து பலகையில் வைக்க வேண்டும்.

பிறகு கும்பத்தின் முன்பு நுனி வாழை இலையில் அரிசியை பரப்பி, அதன் மீது விளக்கு ஏற்றிவைக்க வேண்டும். அதன் அருகில்  மஞ்சள் பிள்ளையார் பிடித்து, அதற்கு குங்குமம் இட்டு பூ போட வேண்டும். மேலும் பொன் மற்றும் புதியதாக வாங்கிய பொருட்களை கலசத்திற்கு அரு கில் வைத்து தீபாராதனை காட்டி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் அளவற்ற பலன் கிடைக் கும் என்பது ஐதீகம்.

அட்சய திருதியை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் முக்கியமானது. தயிர் சாதம் தானம் செய்தால் ஆயுள் கூடும். இனிப்பு பொருள் தானம் செய்தால் திருமணத் தடை  நீங்கும். உணவு தானியம் அளித்தால் அகால மரணத்தைத் தடுக்கலாம். கால்நடைகளை தானமாக வழங்கினால், வாழ்வு வளம் பெறும். மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால், பாவ விமோசனம் கிடைக்கும். ஏழைகளுக்கு தயிர்சாதம் தருவது, 11 தலைமுறைக்கு குறையில்லா அன்பை கிடைக்கச் செய்யும்.

அட்சய திருதியையில் நடந்த அற்புதங்கள்

* கவுரவர்களுடன் சூதாடியதன் காரணமாக தனது நாடு, சொத்து, தம்பிகள் அனைவரையும் தர்மர் இழந்தார். பின்னர் தனது மனைவி திரவுபதியையும் பந்தயப் பொருளாக வைத்து தோற்றுப்போனார். இதையடுத்து திரவு பதியை சபைக்கு இழுத்து வரச் சொன்ன துரியோதனன், அவளை துகிலுரிக்க உத்தரவிட்டான். அதன்படி துச்சாதனன் துகிலுரிக்க முற்பட்டான். திரவுபதி அபயம் வேண்டி சபையோரிடம் வேண்டினாள். ஆனால் அந்த சபையில் பீஷ்மர், துரோணாச்சாரியார் போன்றோர் இருந்தும் அவளுக்கு உதவ முன்வரவில்லை. பின்னர் கண்ணனை நினைத்து கைகூப்பி வேண்டினாள்.

அப்போது கிருஷ்ணர் தன் கையை உயர்த்தி, ‘அட்சய’ என்றார். அவரது கையில் இருந்து புறப்பட்ட ஆடை, திரவுபதியின் உடலை சுற்றி வளர்ந்து கொண்டே இருந்தது. துச்சாதனன், திரவுபதியின் புடவையை இழுத்து, இழுத்து கைசோர்ந்து மயங்கி விழுந்துவிட்டான். திரவு பதியின் மானத்தை கிருஷ்ண பகவான் காப்பாற்றிய தினம், ‘அட்சய திருதியை’ ஆகும்.

* கிருஷ்ணனின் பால்ய நண்பர் குசேலன். இவர் வறுமையில் வாடிய நிலையில், கிருஷ்ணரை சந்திப்பதற்காகச் சென்றார். அவரை கண்ட மாத்திரத்தில் ஓடோடி வந்து வரவேற்ற கிருஷ்ணர், குசேலர் கொண்டு சென்ற அவலில் ஒருபிடியை எடுத்து வாயில் போட்டு கொண்டு ‘அட்சயம்’ என உச்சரித்தார். மறுவினாடி குசேலன் வீட்டில் செல்வம் குவிந்தது. குழந்தைகளுக்கு நல்ல உணவு, ஆடைகள், ஆபரணங்கள் கிடைத்தன. குடிசை வீடு, பெரிய பங்களாவாக மாறியது. இப்படி குசேலர் எல்லா செல்வங்களையும் பெற்ற திருநாள் ‘அட்சய திருதியை’ தினமாகும்.

*நாட்டை இழந்த பாண்டவர்கள், வனவாசத்தின்போது சூரியனை வேண்டி அட்சய பாத்திரம் ஒன்றை பெற்றனர். அந்தப் பாத்திரத்தில் இருந்து உணவைப் பெற்று பாத்திரத்தை கழுவி விட்டால் மீண்டும் உணவு பெற முடியாது. மறுநாள் தான் அதில் இருந்து உணவைப் பெற முடியும்.

இந்த நிலையில் பாண்டவர்களை துன்புறுத்த துரியோதனன் திட்டமிட்டான். இதற்காக அடிக்கடி கோபம் கொள்ளும் துர்வாச முனிவரை அழைத்து உபசரித்து பணிவிடைகள் செய்தான். அவர் மகிழ்ந்து வேண்டிய வரம் கேட்கச் சொல்ல, ‘காட்டில் உள்ள எங்கள் சகோதரர்களான பாண்டவர்களுக்கும் அருள்புரிய வேண்டும்’ என கேட்டுக்கொண்டான். அவ்வாறே செய்வதாக கூறி துர்வாசர் காட்டிற்கு சென்று பாண்டவர்களை சந்தித்தார்.

அப்போது பாண்டவர்கள் உணவருந்தி முடித்துவிட்டு அட்சய பாத்திரத்தை கவிழ்த்து விட்டிருந்தனர். இதனால் கலக்கமடைந்த பாண்டவர்கள் முனிவரிடம், ‘ஆற்றுக்கு சென்று நீராடிவிட்டு வாருங்கள்’ எனக் கூறினர். தங்கள் தர்மசங்கடமான நிலையை நினைத்து திரவுபதி, கண்ணனை வேண்டினாள். பகவான் அங்கு தோன்றினார். அட்சய பாத்திரத்தை கொண்டுவரும்படி கூற, அதில் ஒரே ஒரு பருக்கை சாதமும், கீரையும் ஒட்டிக் கொண்டிருந்தது. அதை பகவான் எடுத்து வாயில் போட்டு வயிற்றை ‘அட்சய’ எனக்கூறி தடவினார். அந்த நேரத்தில் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த துர்வாச முனிவருக்கும், அவரது சீடர்களுக்கும் உணவை உண்ட திருப்தி ஏற்பட்டது. அவர்களால் இனி சாப்பிட முடியாது என்ற நிலையில் பாண்டவர்கள் இல்லத்திற்கு வராமல் திரும்பி சென்றுவிட்டனர். இவ்வாறு கண்ணன், பாண்டவர்களுக்கு அருள்புரிந்த தினமும் அட்சய திருதியை என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

தண்ணீர் தானம்

அட்சய திருதியை அன்று தண்ணீர் தானம் செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. இதற்கு ஒரு கதை கூறப்படுகிறது.
ஒரு முறை பாஞ்சாலை நாடு கடும் வறட்சியில் சிக்கித் தவித்தது. அப்போது பூரியசஸ் என்ற மன்னன் நாட்டை ஆட்சி செய்து வந்தான். திடீரென்று அவனது நாட்டை, எதிரிகள் கைப்பற்றிக் கொண்டனர்.

மன்னன் எதிரிகளின் கையில் சிக்காமல், தன் மனைவியுடன் காட்டுக்குள் தப்பி ஓடினான். அங்கு சில முனிவர்களை சந்தித்தான். அவர்களிடம், ‘என்னுடைய இந்த நிலைக்கு என்ன காரணம்?’ என்று கேட்டான். பூர்வ ஜென்மத்தில் நீ செய்த பாவங்கள் காரணமாக உனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. அதே போல் அட்சய திருயை தினத்தில் நீ செய்த தண்ணீர் தானம்தான், உன்னை மன்னராக ஆக்கியிருக்கிறது. இருப்பினும் நீ செய்த பாவங்களின் பலனை அனுபவிக்க
வேண்டும்’ என்றனர்.

இதையடுத்து அந்த மன்னன் காட்டில் வசித்தபடி, நாராயணரை நினைத்து தியானம் செய்து வந்தான். மேலும் அட்சய திருதியை நாளில்,வெயிலில் வருபவர்களுக்கு நிழல் கொடுத்தும், குடிநீர் தானம் செய்தும் தொண்டு செய்து வந்தான்.

மன்னனின் தொண்டைக் கண்டு ஸ்ரீமன் நாராயணர் அவனுக்குக் காட்சியளித்தார். மன்னன் இறைவனிடம், ‘சுவாமி! நான் அடுத்த பிறவியில் புழுவாய் பிறந்தாலும், உன்னிடம் மாறாத பக்தி கொண்டவனாக இருக்க வேண்டும்’ என்றான். அதற்கு இறைவனும் அவன் எண்ணப் படியே வரம் கொடுத்தார்.

பூரியசஸ் மன்னனுக்கு, மகாவிஷ்ணு தரிசனம் கொடுத்த நாள் அட்சய திருதியை ஆகும். அவன் செய்த தானத்தின் பலனாக, சில நாட்களில் உறவினர்கள்  சிலர் உதவியுடன், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினான். அதன்பிறகு நல்ல முறையில் ஆட்சி செலுத்தினான்.

நிறைவான திருதியை

சயம் என்றால் தேய்ந்துவிடுதல் என்று பொருள். அட்சயம் என்றால் வளர்ச்சி அடைதல் என்று பொருள். ‘திருதியை திதியில் செய்யக்கூடிய காரியம் விருத்தி’ என்று பழமொழியுண்டு. இது வளர்பிறை திதியாக இருத்தல் வேண்டும். மூன்றாம் பிறை தேய்கின்ற நாளான வளர்பிறை திருதியை நாளில் எந்தக் காரியம் செய்தாலும் அது வளர்ச்சியடையும் என்று உத்திரகாலாமிருதம் சொல்கிறது. மூன்றாம் பிறை பார்த்துவிட்டு அம்மனைத் தொழுதால் எந்தக் காரியமும் வெற்றியடையும் என்பது பெரியவர்கள் கருத்து.

திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் எருவைத் தூவி மூன்றாம் பிறையை வழிபடும் வழக்கம் இருந்ததை ஆசாரக்கோவை சொல்கிறது. சிலப்பதிகாரத்தில் கோவலன் – மாதவிக்குப் பிறந்த மணிமேகலைக்குக் கிடைத்த அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் என்ற வார்த்தையும் அட்சய திருதியை நாளை நினைவுபடுத்துகிறது.

அட்சய திருதியைக்குச் சில விதிமுறைகள் உண்டு. உதய காலத்தில் திருதியை திதி இருந்தாக வேண்டும். பகல் பொழுதில் 1.12 முதல் 3.36 வரை திருதியை திதி இருந்தாக வேண்டும். இந்தக் காலத்தில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணங்கள் செய்ய வேண்டும். இந்த நன்னாளில் சுவாதி நட்சத்திரம் இணைந்துவிட்டால் வைணவ முறையில் நரசிம்ம ஜெயந்தி கொண்டாட வேண்டும் என்று பஞ்சாங்க விதிகள் சொல்கின்றன.

நல்லன எல்லாம் தரும் நாள்

அட்சய திருதியையன்று செய்யக்குடிய சுபகாரியங்கள் அனைத்தும் மென்மேலும் வளர்ச்சியடையும். தகுதியான நபர்களுக்கு தான, தர்மம் செய்ய வேண்டும் என்பது நம்பிக்கை. பசுமாட்டுக்குக் கைப்பிடி அளவு புல், வாழைப்பழம் கொடுப்பது மகாலட்சுமியின் திருவருளைப் பெற வழி வகுக்கும். வற்றாத கடலில் இருந்து பெறப்படுகிற, எப்போதும் வீட்டில் இருப்பு வைத்திருக்கக்கூடிய உப்பைத் தானம் செய்வது எல்லோராலும் சாத்தியப்படக்கூடியது அல்ல. காரணம் உப்பை யாரும் தானமாகத் தர விரும்ப மாட்டார்கள். அதனால் உப்பு பயன்படுத்தப்பட்ட உணவை தானமாகக் கொடுத்துவிட்டு, லஷ்மி பூஜை செய்ய வேண்டும். ஏழையாகப் பிறந்த குசேலன், தன் நண்பன் கிருஷ்ணபரமாத்மாவைக் கண்டு செல்வம் பெற்றது இந்த நாளில்தான். பாஞ்சாலி துகிலுரியப்படும் நேரத்தில், குறையாத புடவையைக் கொடுத்து அவள் மானம் காத்தது இதே நாளில்தான். இன்றைய தினத்தில் கிருஷ்ணபரமாத்மாவுக்கு அவல் படைத்து பூஜை செய்தால் அஷ்டலஷ்மி கடாட்சம் கிடைக்கும்.

ரிஷிகள் போற்றும் அட்சயம்

வடநாட்டில் இந்த நாள் அகதீஜ் என்று கொண்டாடாப்படுகிறது. மங்களனாகிய சிவனை வணங்கினால் பெரும் பாக்கியத்தைப் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. இன்றைய தினம் மேற்கொள்ளப்படக்கூடிய தவம், பூஜை, ஹோமம், தானம், பித்ரு பூஜை, தர்ப்பணம், தீர்த்த ஸ்நானம் ஆகியவை குறைவற்ற பலனைக் கொடுக்கும். அக்னியில் ஆகிருதி செய்யப்பட்ட பொருட்களும் தானம் செய்த பொருட்களும் குறைவதே இல்லை. இந்த நாளைத்தான் ரிஷிகள் ‘அட்சய’ என்று போற்றினார்கள். இன்று தேவர்களுக்காகவும் பித்ருக்களுக்காகவும் தானம் செய்யப் பட்டவை மென்மேலும் பெருகும்.

என்ன தானத்துக்கு என்ன பலன்?

ஆடைகள், பழங்கள் – சிறப்பான வாழ்க்கை

அன்னதானம் – உணவுக்குப் பஞ்சமிருக்காது

நீர்மோர், பானகம் – குழந்தைகள் கல்வியில் உயிர்நிலை பெறுவர்

அரிசி, கோதுமை போன்ற உணவு தானியங்கள் – அகால மரணங்கள் ஏற்படுவதில் இருந்து நிவர்த்தி

தயிர் சாதம் – பாவங்கள் ஒழியும்

ஆடை, போர்வை    –     சுகபோக வாழ்வு

தயிர், பால் சாதம்    –     ஆயுள், ஆரோக்கியம்

இனிப்புகள்                 –      திருமண பிராப்தம்

அரிசி, பருப்பு             –      பாதுகாப்பான பயணம்

பசு, நாய்க்கு உணவு  –             மன அமைதி, செல்வ வளம்

இந்தப் புனித நாளில்தான் பிரம்ம தேவன் பூமியைப் படைத்தான் என்று பதினெண் புராணங்களும் பேசுகின்றன. இந்த நாளில் புதிதாகத் தொழில் தொடங்க ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். வேலை தேடுகிறவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். கூட்டுத் தொழிலுக்கும் ஒப்பந்தம் செய்யலாம். திருணத்துக்கு வரன் பார்க்கத் தொடங்கலாம். கல்வி தவிர பிற கலைகளில் குழந்தைகள் மிளிர்வதற்காக வாய்ப்பாட்டு, வீணை போன்ற வகுப்புகளில் சேர்க்கலாம். வீட்டுக்குத் தேவையான பொருட்களைக் கவனித்து வாங்கலாம். ஏழைகளுக்குத் தானம் செய்வதால் எதிர்காலம் செழுமையாக இருக்கும், வசதியான வாழ்க்கை கிட்டும்.

அம்பிகையின் அருள்

ஒவ்வொரு மூன்றாம் பிறையின் போதும் அம்பிகை காட்சி கொடுத்து எல்லோருக்கும் அருள்புரிவதாகச் சித்தர்களும், யோகிகளும் சொல்கிறார்கள். அன்று சித்தர்கள் வானத்தில் வலம் வருவதாகவும் சொல்கிறர்கள். அதனால்தான் அந்தக் காலத்தில் மூன்றாம் பிறையைத் தரிசனம் செய்வது சிறந்தது என்று சொன்னார்கள். அன்று எதை வாங்கினாலும் செல்வம் பெருகும்.

ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது?

ராஜ கிரகங்களான சூரியனும் சந்திரனும் உச்சம் பெறும் காலம் சித்திரை மாதம். அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை நாள்தான் அட்சய திருதியை எனப்படுகிறது. அமாவாசையன்று மேஷ ராசியில் உச்சம் பெறும் சூரியனுடன் சேரும் சந்திரன், மூன்றாவது நாளில் அதாவது திருதியையன்று ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகும்போது அங்கும் உச்சம் பெறுகிறார். இங்கு சந்திரனுக்கு வீடு கொடுத்த சுக்கிரனும் இணைந்து பலம் பெறும் அமைப்பு, திருதியை நாளில்தான் நடக்கிறது. தங்கத்தின் காரகன் குரு என்றாலும் அது ஆபரணமாக மாறும்போது சுக்கிரனைக் குறிக்கும்.

ஒரு விஷயத்தை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். ஆபரணம் என்று சொல்லும்போது தங்கத்தைத்தான் வாங்க வேண்டும் என்று இல்லை. முந்தைய காலத்தில் வெண்கலம்கூட விலை அதிகமாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாகத்தான் பொதுமக்கள் தங்கம் வாங்க முயற்சி மேற்கொள்கிறார்கள். இந்த நாளில் தானம் செய்து, தனவளங்களையும் பெறலாம் என்பது ஜோதிட சாஸ்திரம் கூறும் நிதர்சனமான உண்மை.

பகவானின் பசி தீர்த்த நாள்

(அட்சய திருதியை, மே-2)

அட்சய திருதியை நாளன்று பலன் கிடைக்கும் என்பதற்கு ஒரு உதாரண கதையும் உண்டு. பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் போனபோது அவர்களுக்கு சூரிய பகவான் ஒரு அட்சய பாத்திரத்தைக் கொடுத்தார் என்று மகாபாரதம் சொல்கிறது. அள்ள அள்ள உணவைக் கொடுக்கும் இந்தப் பாத்திரத்துக்கு அமுத சுரபி என்ற பெயரும் உண்டு. இந்தப் பாத்திரத்தை திரௌபதி ஒரு நாளுக்கு ஒரு முறைதான் பயன்படுத்த வேண்டும் என்பது விதி. முடிந்ததும் கழுவி, கவிழ்த்துவிடுவார். ஒருநாள் மதியம் கிருஷ்ண பரமாத்மா பசியால் வருகிறார். பாத்திரத்தைக் கழுவி, கவிழ்த்துவிட்ட திரௌபதிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மகாவிஷ்ணுவைப் பிரார்த்தனை செய்து கொண்டு கழுவிய பாத்திரத்தை எடுத்துப் பார்க்கிறார். ஒரே ஒரு கீரைத்துண்டு மட்டும் அதில் இருக்கிறது. அதையும் பக்தியுடன் இலையில் வைத்துப் பரிமாறுகிறார். கிருஷ்ணபரமாத்மாவுக்கு வயிறு நிறைகிறது. இதன் மூலம் அட்சய திருதியை நாளில் இறைவனுக்குச் செய்யப்படுகிற நிவேதனம், பூஜை ஆகியவை வளத்தையும் நலத்தையும் தரும் என்று மகாபாரதம் சொல்கிறது.

கிருஷ்ணரை சந்திக்க முடிவெடுத்து ஒருபிடி அவலை தன் மேலாடையில் முடிந்துகொண்டு புறப்படுகிறார். அவரை நன்கு உபசரித்த கிருஷ்ண பகவான் அவர் அன்போடு கொண்டு வந்த அவலை மகிழ்ச்சியுடன் எடுத்து உண்டு, அந்த அவலின் ருசியில் மகிழ்ந்து ‘அட்சயம் உண்டாகட்டும்’ என்று வாழ்த்தி அனுப்புகிறார். அதே கணத்தில் குசேலனின் குடிசை வீடு மாடமாளிகையாக மாறுகிறது. அஷ்ட ஐஸ்வர்யங்களும் அவரது வீட்டில் குடிகொள்கின்றன. பகவான் கிருஷ்ணர் இன்னொரு வாய் சாப்பிட அவலை எடுக்க.. மகாலட்சுமியின் அம்சமான ருக்மணி, கிருஷ்ணரின் கையை பிடித்து தடுக்கிறாள்.

‘‘எனக்கு பிடித்த அவலை தின்ன விடாமல் ஏன் தடுக்கிறாய்?’’ என்று கிருஷ்ணன் கேட்க.. ‘‘ஒரு பிடி சாப்பிட்டதற்கே குசேலனின் வறுமை நீங்கி, அஷ்ட ஐஸ்வர்யங்களும் அவன் வீட்டில் குவிந்துவிட்டது. இன்னும் ஒரு பிடி சாப்பிட்டால், மகாலட்சுமியான நானே அவன் வீட்டுக்கு போக வேண்டியதுதான்’’ என்கிறாள் ருக்மணி. இந்த அற்புதம் நிகழ்ந்தது அட்சய திருதியை நாளாகும். கவுரவர் சபையில் திரவுபதி துகிலுரியப்பட்டபோது ஆடைகளை அள்ளி வழங்கி கண்ணன் அருள்பாலித்ததும் இந்த நாளே என்கிறது வியாச புராணம். தசாவதாரங்களில் பரசுராமர் அவதரித்த நாள், சிவனுக்கு காசி அன்னபூரணி அன்னபிட்சை அளித்த நாள், ஐஸ்வர்ய லட்சுமி அவதரித்த நாள், சங்க நிதி – பத்மநிதியை குபேரன் பெற்ற நாள், மகாவிஷ்ணுவின் வலமார்பில் மகாலட்சுமி இடம் பிடித்த நாள் என பல சிறப்புக்களை உடையது அட்சய திருதியை நாள்.

‘பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்’ என்பது ரமணர் வாக்கு. இல்லாதோர், இயலாதோருக்கு அவர்கள் தேவையறிந்து செய்யும் உதவிகள், தர்மங்கள், பலமடங்கு அதிகமாக உதவி செய்தவனுக்கே ஏதாவது ஒரு வகையில் திரும்ப கிடைக்கும். மேலும் மேலும் தான தர்மங்கள் செய்கிற அளவுக்கு வளமான வாழ்வையும் நமக்கு ஏற்படுத்தி தரும். அட்சய திருதியை நாளில் நாம் செய்யும் தான தர்மங்கள் நமக்கு புண்ணியத்தை சேர்க்கும். இந்நாளில் சுயநலத்துடன் செய்கிற காரியங்களைவிட, பொதுநலத்துடன் கூடிய காரியங்கள் செய்வது மிகவும் சிறப்பாகும். ஏழை நோயாளிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்யலாம். சாலையோரம் வசிப்பவர்களுக்கு வேட்டி, சேலை, போர்வை தானம் தரலாம்.

ஏழை மாணவர் கல்விக்கு உதவலாம். ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களுக்கு சென்று உணவு, இனிப்புகள் வழங்கலாம். கோயில்களில் அன்னதானம் செய்யலாம். குறிப்பாக தயிர் சாதம், தேங்காய் சாதம், நீர் மோர், பழங்கள் கலந்த பால் சாதம், பால் பாயசம் போன்றவை வழங்கலாம். இந்த நாளில் குலதெய்வ ஆலயத்துக்கு சென்று வழிபடலாம். பிரசித்தி பெற்ற ஸ்தலங்களுக்கும் செல்லலாம். குழந்தைகளின் கல்விக்கு தேவையான புத்தகங்கள், நோட்டு, பேனா, கம்ப்யூட்டர் போன்ற சாதனங்கள் வாங்கலாம். சுபகாரியங்களுக்கு பிள்ளையார் சுழி போடலாம். வங்கியில் புதுக்கணக்கு ஆரம்பிக்கலாம். டெபாசிட் செய்யலாம். புதிய பூஜைகள், விரதங்கள், விட்டுப்போன வழிபாடுகள் தொடங்கலாம். அரிசி, பருப்பு போன்ற மளிகை பொருட்கள் வாங்கலாம்.

தீராத வியாதி உள்ளவர்கள், அடிக்கடி நோய்வாய்ப்பட்டவர்கள் ஆல இலையை தலையணைக்கு அடியில் வைத்து இறைவனின் நாமத்தை ஜெபம் செய்து படுப்பதால் வியாதிகள் நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும். கைக்குழந்தை முதல் 6 வயது குழந்தைகள் படுக்கும் தலையணையின் அடியில் ஆல இலையை வைப்பதால் திருஷ்டி பாலரிஷ்ட தோஷங்கள் கழியும் என்பது ஐதீகம். வீட்டில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற ஹோமங்கள் செய்யலாம். குறிப்பாக, சகல வெற்றிகளும் தரும் மிருத்யுஞ்ஜய மந்திரம் சொல்லி ஹோமம் செய்யலாம்.

ஏழை, எளியவர்கள், இல்லாதோருக்கு ஆடை, போர்வை தானம் தருவதால் சுகபோக வாழ்வு கிட்டும். தயிர், பால் சாதம் தானம் செய்வதால் ஆயுள், ஆரோக்கியம் கூடும். ஆதரவற்ற முதியோர்கள், சிறார் இல்லங்களிலும் ஏழைகளுக்கும் இனிப்பு வழங்குவதால் திருமண பிராப்தம் கூடி வரும். அரிசி, பருப்பு, தானியங்களை தானம் செய்தால் விபத்துகள் நேராமல் இறைவன் காத்தருள்வார். பசு, நாய், பட்சிகளுக்கு உணவளிப்பதால் மன அமைதி, செல்வ வளம் ஏற்படும். அட்சய திருதியை தினத்தில் தங்கம், வைர ரத்தின ஆபரணங்கள், வெள்ளி பொருட்கள், ஆடம்பர பொருட்கள் வாங்க வேண்டும் என்ற வழக்கம் உருவானது சமீபகாலமாகத்தான்.

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் பல மடங்காக பெருகும் என்பது ஒரு நம்பிக்கையே தவிர, தங்கம் வாங்கினால் இன்னின்ன பலன் கிடைக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்படவில்லை. மேலும், அட்சய திருதியை நாளில் கடன் வாங்கி, தங்கம் வாங்குவது தவிர்க்கப்பட வேண்டும். இப்படி செய்வதால், கடன் வாங்கும் வழக்கம் மேன்மேலும் அதிகரிக்கக்கூடிய ஆபத்து இருக்கிறது. அதனால், கிரெடிட் கார்டு தேய்த்து தங்கம் வாங்குவதை தவிர்ப்பது நலம்.

அட்சய திருதியை நாளில் தான தர்மங்கள், நற்செயல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. மேலும் நல்ல காரியங்கள் தொடங்கவும் சுபவிஷயங்களை பேசவும் ஏற்ற நாளாகும். ‘மகிழ்வித்து மகிழ்’ என்று சொல்வார்கள். எனவே, மற்றவர்கள் மகிழும் வகையில் தான தர்மங்கள் செய்து, பல புண்ணியங்கள் பெற்று ஆயுள், ஆரோக்கியம் நிறைந்த வளமான வாழ்வு பெறுவோமாக.

Advertisements