மேக் இன் இந்தியா ஸ்மார்ட்போன் வெளியீடு

இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான வீடியோகான் நேற்று இசட்55 டேஷ் எனும் புதிய ஸ்மார்ட்போனினை ரூ.8,499க்கு வெளியிட்டது. இந்த கருவி பிரத்யேகமாக ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் தான் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

28-1440749714-videoconz55dashவடிவமைப்பு மற்றும் தயாரிப்பு என இந்த கருவியானது முற்றிலுமாக இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இந்த ஆண்டின் துவக்கத்தில் தயாரிப்பு ஆலைகளை மதுரை, ஹைத்ராபாத் மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் நிறுவ இருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மெய்ஸூ எம்எக்ஸ்5 ஃபர்ஸ்ட் லுக்..!

இசட்55 டேஷ் கருவியின் சிறப்பம்சங்களை பொறுத்த வரை 5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு கிட்காட் இயங்குதளம் கொண்டிருக்கும் இந்த கருவியில் 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

28-1440749713-videoconz55dash01

கேமராவை பொருத்த வரை 8 எம்பி ஆட்டோபோகஸ் ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை ப்ளூடூத் 4.0, மைக்ரோ-யுஎஸ்பி, ஜிபிஆர்எஸ் / எட்ஜ், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் 3ஜி வழங்கப்பட்டுள்ளதோடு 2200 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

Advertisements