யு டெலிவென்ச்சர்ஸ் நிறுவனம் பட்ஜெட் விலையில் புதிய 4ஜி ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய யு யுனீக் 4ஜி ஸ்மார்ட்போன் ஸ்னாப்டீல் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக ரூ.4,999க்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யு யுனீக் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பொருத்த வரை 4.7 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்படுகின்றது. மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
http://tamil.gizbot.com/img/2015/09/12-1442048760-yuunique.jpg

டூயல் சிம் ஸ்மார்ட்போன் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 410 சிபியு மற்றும் அட்ரீனோ 306 ஜிபியு மற்றும் கேரமாவை பொருத்த வரை 8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 2 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளம் கொண்டிருக்கும் இந்த கருவி சைனோஜென்மோடு ஒஎஸ் 12 கொண்டிருக்கும் என்பதோடு இதன் முன்பதிவு செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி காலை 8 மணிக்கு துவங்கி செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி மதியம் 12 மணியளவில் நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements