இந்தியா முழுவதும் இலவச வை-பை வழங்க கூகுள் முடிவு!

கூகுளின் அதிவேக இண்டநெட் திட்டமான கூகுள் பைபர் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த கூகுள் பைபர் திட்டத்தை ஹைதராபாத்தில் செயல்படுத்த தெலுங்கானா அமைச்சர் ஒருவர் கூகுளுடன் ஒப்பந்தம் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Google Free Wi-Fi

இந்தியா முழுவதும் இலவச வை-பை இண்டர்நெட் வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவின் முக்கிய இரயில் நிலையங்களில் வை-பை வசதியை வழங்க கூகுள் முடிவு செய்துள்ளதாகவும் இதனை ரயில்வேயுடன் இணைந்து செயல்படுத்தவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றது.

இதன்படி சுமார் 30 நிமிடங்களுக்கு வேகமான இண்டர்நெட்டை பெற முடியும். முப்பது நிமிடங்களுக்குப் பிறகு வேகம் குறையத் தொடங்கும். எனினும் தொடர்ந்து இண்டர்நெட் பயன்படுத்த முடியும். முதற்கட்டமாக நான்கு மாதங்களில் நாடு முழுவதும் 400 இரயில் நிலையங்களில் வை-பை வசதியை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisements