கூகுளின் புதிய லோகோவை பார்த்துட்டீங்களா?

தேடுதல் இயந்திரமாக தொடங்கப்பட்ட கூகுள் இன்று பல சேவைகளை வழங்கி வருகிறது. உலகின் மிகப் பெரிய நிறுவனங்களுள் கூகுளும் ஒன்றாகும். 1998 ஆம் தொடங்கப்பட்ட கூகுளின் வளர்ச்சி மிகவும் அபாரமானது. கூகுளானது தனது தொடக்க காலம் முதல் இதுவரை 6 லோகோக்களை மாற்றியுள்ளது. தற்போது தனது புதிய 7து லோகோ வை வெளியிட்டுள்ளது.

முந்தைய லோகோ:

google september 2013 logo

புதிய லோகோ:

google new logo september 2015

இதற்காக கூகுள் வெளியிட்டுள்ள டூடுள்:

google new logo doodle

இதனை கூகுள் டூடுள் அனிமேஷன் மூலம் இன்று அறிவித்துள்ளது. அதில் பழைய லோகோ அழிக்கப்பட்டு புதிய மேம்படுத்திய லோகோ வருமாறு செய்துள்ளது. கூகுள் தனது ஐகானில் பயன்படுத்தும் g என்பதையும் G என்று நீலம், சிவப்பு, மஞ்சல் மற்றும் பச்சை நிறங்களில் வருமாறு மாற்றியுள்ளது.

கூகுள் லோகோக்களை மாற்றினாலும் தொடக்க காலம் முதலே அதே நீலம், சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களையே பயன்படுத்தி வருகிறது.

Advertisements